மின்னம்பலம் - Kavi : தூய்மை பணியாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியை தனியார்மயமாக்க கூடாது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவு ரிப்பன் மாளிகை முன்பு கூடியிருந்த தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
இந்த சூழலில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு, இலவச வீடு, ரூ.5 லட்சம் காப்பீடு என சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பெரம்பூரில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி இன்று பேரணி சென்றனர். பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.
இதைத்தொடர்ந்து முதல்வரின் முகாம் அலுவலகத்துக்கு சென்ற தூய்மை பணியாளர்கள் முதல்வருக்கு நேரில் நன்றி கூறினர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், “நேற்று வெளியான அறிவிப்பால் உங்களுக்கு மகழ்ச்சியா? இதையெல்லாம் கேட்காமலேயே அறிவ்த்திருக்கிறோம்” என்றார்.
இதற்கு தூய்மை பணியாளர்கள், “ரொம்ப மகிழ்ச்சி” என பதிலளித்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து தூய்மை பணியாளர்கள் கிளம்பினர்.
இந்த சந்திப்பின் போது அமைச்ச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக