![]() |
S T Nalini Ratnarajah : அண்மையில் இஸ்லாமியர்களாக அடையாளம் காட்டி உடை அணிந்திருக்கும் சிலர்,
(தொப்பி போட்டாலோ அல்லது புர்கா ஹிஜாப் போட்டாலோ அவர்கள் இஸ்லாமியர்கள் என்று நாங்கள் முடிவு எடுத்து விட முடியாது),
தீ மிதிப்பதையும் நெருப்பு தனல்களை அள்ளி வீசுவதையும் வீடியோவாக பார்த்தேன்
இஸ்லாமியராக இருந்தால் என்ன மாரியம்மன் பேச்சியம்மன் காளியம்மன் முருகன் இன்னும் யார் யாரெல்லாம் தீமிதிப்பு வைபவம் நடைபெறுகிறது பலர் தீமிதிக்கின்றார்கள் நேத்திக்கடன் இருக்கின்றார்கள்
ஆனால் சில விடயங்களை அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும்.
அதாவது இந்த நெருப்பு தனல்களுக்கு இரும்பு துண்டுகளாக இருந்தால் யாருமே தீ மிதிக்க மாட்டார்கள் எந்த கடவுளும் வந்து காப்பாத்தாது. இதுதான் அடிப்படை.
காரணம் மர தனல்கள் சூடை கடத்தும் வீதமானது மிக மிகக் குறைவு.
ஆனால் இரும்பு தனது சூடை கடத்தும் வேகம் மிக மிக அதிகமானது.
அந்த சூட்டை மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாது பொசுங்கி விடுவார்கள்
கடவுளுக்கு நேத்தி செய்வதென்றாலும் மனிதர்கள் தந்திரமாகத்தான் செய்கிறார்கள்.
ஆனால் பக்தி அருள் என்று ஏதோவெல்லாம் சொல்கிறோம்.
நானும் தீமிதிக்க வேண்டும் என்று ஒரு சிந்தனை வந்திருக்கிறது.
காரணம் bakthi அல்ல,
புதிதாக ஏதாவது செய்தால் மூளைக்கு பிடிக்கும் நரம்பு மண்டலங்கள் உஷாராகும்.
சூட்டைக் கடத்தும் வேகத்தின் அளவு என்பதைக் Thermal conductivity (வெப்பக் கடத்துத்திறன்) என்று அறிவியலில் சொல்வார்கள்.
இது பொதுவாக W/m·K (வாட் / மீட்டர் / கேல்வின்) என்ற அலகில் அளவிடப்படுகிறது.
பொருள் வெப்பக் கடத்துத்திறன் (Thermal Conductivity)
இரும்பு (Iron) சுமார் 80 W/m·K
மரம் (Wood) சுமார் 0.1–0.2 W/m·K (உலர்ந்த மரம்)
🔹 இதனால், இரும்பு மரத்தை விட 400 மடங்கு (அல்லது அதற்கும் அதிகம்) வேகமாக சூட்டை கடத்தும்.
🔹 அதனால், தீ மிதிப்பில் இரும்பு கடல்கள் இருந்தால் உடனே சூடு காலில் பாயும், நொடிகளில் எரியும்.
🔹 ஆனால் மரச் சாம்பல்/நெருப்பு சூட்டை மெதுவாகக் கடத்துவதால், பயிற்சி பெற்றவர்கள் வேகமாக கடந்து செல்ல முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக