சனி, 22 ஜூன், 2024

சவூதி ஹஜ் 1,081 போ்உயிரிழப்பு . இந்தியர்கள் 98 பேர் உட்பட. Hajj pilgrimage deaths exceeds 1,000

 ilakkiyainfo.com : ஹஜ் யாத்திரை சென்றவர்கள் 98 இந்தியா்கள் உட்பட மொத்தமாக 1,081 போ் உயிரிழப்பு!:
நடப்பாண்டு ஹச் புனிதப்பயணம் சென்ற இந்தியவர்களில் 98 பேர் இறந்துள்ளதாக  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹஜ் புனித யாத்திரை ஜூன் 14-ல் தொடங்கியது.  திருநாளைக் கொண்டாடும் வகையில் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் இந்தாண்டு 18 லட்சம் பேர் வரை திரண்டனர்.
இந்தியாவில் இருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரை 98 இந்தியர்கள் பலியானதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.



அதில் பெரும்பாலனோர் இயற்கை மரணமடைந்ததாகவும், 4 பேர் விபத்தில் பலியானதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு ஹச் பயணத்தின்போது 187 இந்தியர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சௌதியில் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் 0.4 சதவீதம் வெப்பம் அதிகரித்து வருகிறது. மெக்கா நகரில் இந்த வாரம் 51.8 டிகிரி (125 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை வெப்பம் நிலவியது.

இந்த ஆண்டின் ஹஜ் பயணத்தின்போது சுமாா் 10 நாடுகளைச் சோ்ந்த 1,081 போ் பெரும்பாலும் வெயில் காரணமாக பலியாகினா்.

கருத்துகள் இல்லை: