மாலை மலர் : டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.
எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது. இந்த நிலையில் டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என எம்.பி. ராகவ் சாதா அறிவித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்பதாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவசர சட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்க போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக