GoodReturns Tamil : மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவமான கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் ஒவ்வொரு சம்பவமும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு மங்களூர் அருகே உள்ள நாகுரி என்ற பகுதியில்ஆட்டோவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதி முழுவதுமே பெரும் பரப்பரப்பாக காணப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விற்பனை நடைபெற்று வரும் நிலையில்,
பலவிதமான யூகங்களும் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.
பயங்கரவாத தாக்குதல் - முதல் கட்டமாக இந்த ஆட்டோ குக்கர் வெடிப்பு என்பது பயங்கரவாத தாக்குதல் என கூறப்பட்டது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் தான் இதற்கு காரணம் என்றும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் குடியிருக்கும் அறைகளில் வெடி பொருட்கள் , அது சம்பந்தமான ரசாயனங்கள் என பலவும் இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களில் ஒன்று, இந்த சம்பவத்திற்கு காரணமானவரிடம் பல போலி ஆதார்கள் வைத்து மோசடி செய்ததும் அம்பலமாகியுள்ளது. இரண்டாவது இதற்கு காரணமாக முகமது ஷாரிக் கோயம்புத்தூரில் இருந்து, ஈஷா யோகா மையத்திற்கும் சென்று வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
கோவைக்கும் மங்களுருக்கும் சம்பந்தம் இருக்கா?
முகமது ஷாரீக் கோவையில் தங்கியிருந்த காலகட்டத்தில், கோவை வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜமீசா முபீனை சந்தித்து இருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் காவல் துறை அறிக்கையானது அவர்கள் இங்கு சந்தித்துக் கொள்ளவில்லை என்றே கூறப்பட்டது. எனினும் கோவை வெடிப்பு சம்பவத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற யூகங்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் முகமது ஷாரீக் பயன்படுத்திய சிம்கார்டு கோவையில் வாங்கியதாக தெரியவந்துள்ளது.
பழக்கத்தினால் உதவி
ஊட்டியை சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் பெயரில் சிம்கார்டு பெறப்பட்டிருந்த நிலையில், இவரிடமும் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சிங்கா நல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதும் தெரிய வந்தது. இவர் அடிக்கடி மது அருந்த காந்திபுரத்தில் உள்ள லாட்ஜுக்கு செல்வது வழக்கமாகும். அப்போது அந்த விடுதியில் மூன்று நாட்கள் அருண் குமார் என்ற பெயரில் முகமது ஷாரிக் தங்கி இருந்துள்ளார். அங்கு இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் , பழக்கத்தின் காரணமாகவே ஆதார் கார்டை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கூட்டாளிகளுக்கு பிட்காயின் பரிமாற்றம்
இதற்கிடையில் முகமது ஷாரிக் பல ஆதார்கள் மட்டும் அல்ல, பிட்காயினிலும் வர்த்தகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷாரிக் சில கைது செய்யப்பட்ட தனது கூட்டாளிகளுக்கு கிரிப்டோகரன்சிகளை வழங்குவதும் அனுப்புவது வழக்கமான ஒன்று என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாஸ்டர் பிளான் மாஸ்டர் பிளான் முகமது ஷாரிக்கிற்கு பயன்படுத்திய சிம்கார்டை வைத்து அவரின் கால் லிஸ்ட் பெற முயற்சி எடுத்து வரப்படுகிறது. தனது திட்டம் யாருக்கும் தெரிந்து விட கூடாது என்பதற்காக வாட்ஸ் ஆப் காலில் பேசியுள்ளார். இப்படி ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்பிரச்சனையில் முக்கிய ஆவணமாக ஆதாரும், நிபுணர்கள் கணித்தைபோலவே கிரிப்டோகரன்சிகளை தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே கிரிப்டோகரன்சிகள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் இல்லாத நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் கிரிப்டோ போன்ற ட்ஜிட்டல் கரன்சிகள் மீதான ஆர்வத்தினை குறைக்கலாம.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக