Esther Nathaniel : கெட்டித்தட்டிப்பாறையாய் இறுகிக் கிடக்கும் சாதிய மனோ பாவங்களை
கடந்து தோட்டத்தில் மாரியம்மன் திருவிழா நடக்கும்
தோட்டத்தை விட்டு கொழும்பில் வேலை செய்யும் இளைஞர்கள் தீபாவளிக்குத்தான் தோட்டத்துக்கு வருகிறார்கள் கொழும்பில் செட்டியார் தெரு வெள்ளவத்தை பெட்டா தெஹிவளை பம்பலப்பிட்டியில் சிறு ஹோட்டல்களிலும் துணிகாடைகளிலும் இரவு பகல் பாராது உழைப்பது மலையக பெடியன்மார்தான்.வறுமைவேலையின்மை மீண்டும் தோட்டங்களிலா தேயிலை பறிப்பது இதை விட்டு ஓட வேண்டுமென ஓடி அவர்கள் ஓடிப்போன இடம் கொழும்புதான்
கொழும்பு பங்களாக்களில் நானறிந்த காலம் மலையக பெண்களும் ஆண்களும் மிகக் குறைந்த கூலியில் வேலை செய்கிறார்கள் தங்களுடைய தோட்டங்களில் வேலை செய்து இறுதிக்காலத்தில் கிடைக்கும் பணத்தை மகனிடமோ மருமகனிடமோ கொடுத்துவிட்டு சும்மா இருந்து சோறா என வயதானப் பெண்கள் ஆண்கள் தஞ்சமடைவது கொழும்பில்தான் வீட்டு வேலைக்கு கொழும்பு மட்டுமல்ல யுத்தத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் மலையக தமிழர்கள் மிக குறைந்த கூலிக்கும் கூலியின்றியும் வீட்டு வேலைக்குச் செல்வதுண்டு
அப்படித்தான் இஷாலினியும் போய் சேர்ந்தார். மஸ்கெலியா பகுதியைச்சார்ந்த இரண்டு பெண் சிறுமிகள் கொழும்பில் மர்மமான முறையில் சில வருடங்களுக்கு முன்னில் மரணித்தனர் மத்தியகிழக்கில் தொழிலுக்குச் சென்று என்னோடு கூட படித்த தோழி பிணப் பெட்டியிலே வந்தார் அவர்களுக்கு உரிய காப்புறுதி நட்டஈடு எதுவுமே அவர்களின் குடும்பங்களுக்கு வந்து சேர்வதில்லை
மலையக அரசியல்வாதிகள் இதனை பாராளுமன்றத்தின் முன் கொண்டு வரவேண்டும் வெளிநாட்டு அமைச்சரை கேள்வி கேட்க வேண்டூம் கேட்பார்களா.??
கொழும்பின் பங்களாக்களில் பாலியல் கொடுமைகளோடும் வேலை பளுவோடும் அவர்கள் வளர்க்கும் நாய்களை பராமரிக்கவும் நலிந்த நிலையில் மலையக பிள்ளைகள் பெண்கள் வறுமைக்கெதிராக போராடுகிறார்கள். கொகோகும்பின் பெரு நகரத்தின் ஆடை தொழிற்சாலையில் அதிகமானப் பெண்கள் தொழில் செய்கிறார்கள். ஒழுகும் கூரைகளுக்கும் தோட்டத்துக்கடையில் வாங்கும் மலிகைப் பொருளுக்கான செலவையும் அனுப்புகிறார்கள்
மலையக மக்கள் தமது வாழ்வில் போராடும் 1000 ரூபாய் சம்பளம் இன்னும் அவர்களது கூலியில் சேர இன்னும்பல நூற்றாண்டுகள் ஆ
னாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக