நக்கீரன் : கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி கடற்கரைச் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வந்தார். இந்த ஆணையத்தின் சார்பில் பலருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தார். அதில் காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்துள்ளதாகவும், பொதுமக்களைத் தேவையின்றி காவல்துறையினர் சுட்டுகொன்றதாகவும், 17 காவல்துறை அதிகாரிகளே இந்த சம்பவத்திற்குப் பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - விசாரணை அறிக்கையை வெளியிட திமுக கூட்டணி கட்சிகள் அழுத்தம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக