வியாழன், 23 ஜூன், 2022

எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் பேசும்போது தேசத்தின் இன்னுமொரு குடிமகன் இறந்திருப்பான்

  jaffnamuslim.com : எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் இன்னுமொரு குடிமகன் இறந்திருப்பான்
"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!
அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன்.
நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.
(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.


எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் இன்னுமொரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்.

பிரதமர் ரணிலின் வீட்டுக்கு முன் புதன்கிழமை 22 ஆம் திகதி நடத்திய ஆர்ப்பாட்த்தின் போது ஹிருணிக்கா பொலிஸாருடன் சச்சரவு செய்த போது அவருடைய உடல் அங்கங்களை சமூக ஊடகங்களில் சிலர் மோசமாக வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: