சனி, 25 ஜூன், 2022

மாலைதீவில் உலக யோகா தினத்தில் தலிபான் கொடிகளோடு வந்து தாக்குதல்

 Rishvin Ismath  :  மாலைதீவில் தலிபான் கொடிகளோடு வந்த  இஸ்லாமியவாதிகளால் சர்வதேச யோகா தின நிகழ்வில் தாக்குதல்!
8 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நேற்றைய தினம் உலகின் பல பாகங்களில் நடைபெற்றன, அந்த வகையில் மாலைதீவின் தலைநகர் மாலேயில் உள்ள சர்வதேச விளையாட்டரங்களில் நடைபெற்ற நிகழ்வில் தலிபான் கொடிகளைத் தாங்கி வந்த பெரும் எண்ணிக்கையான இஸ்லாமியவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த நிகழ்வில் மாலைதீவிற்கான இந்திய, பிரித்தானிய தூதுவர்களும் கலந்து கொண்டு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தாலிபான் கொடிகளைத் தாங்கி வந்தவர்கள் இஸ்லாத்தின் வழமையான வன்முறைக் கோஷமான "அல்லாஹு அக்பரை" முழங்கிக் கொண்டே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.


யோகா, கராட்டே, குங்ஃபு, டாய்ச்சி, ஜூடோ போன்ற பல்வேறு உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகள் ஆசிய மதங்களான இந்து, பெளத்தம், தாவோயியம் போன்றவற்றுடன் எதோ ஒரு வகையில் தொடர்பு பட்டவையாக இருந்தாலும் இஸ்லாமியவாதிகளின் தொடரான எதிர்ப்பையும், ஹராம் பத்வாக்களையும் யோகா மட்டுமே எதிர்கொண்டு வருகின்றது. 2000 அமாம் ஆண்டுகளில் யோகா தொடர்பான பத்வாக்கள் மலேசியாவில் தலை தூக்க ஆரம்பித்து கடைசியில் அந்நாட்டு அரசு முஸ்லிம்கள் யோகா பயில்வதை தடையும் செய்தது. இவ்வளவு தடைகள், எதிர்ப்புகள், பத்வாக்கள் இருந்தும் கூட நேற்றைய தினம் புர்கா அணிந்த முஸ்லிம் மாணவிகள் யோகாவில் ஈடுபட்ட நிகழ்வு கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது, அதனை காணொளியின் இறுதியில் நீங்கள் காணலாம்.
.
யோகா, கராட்டே, குங்ஃபு, டாய்ச்சி போன்ற அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான செயற்பாடுகள் மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் இருக்கும் ஸலாம், நோன்பு, மிக முக்கியமாக ஹஜ்ஜு போன்ற வணக்கங்கள் கூட யூதம், கிறிஸ்தவம், மக்கத்து சிலை வணக்க மத நம்பிக்கைச் செயற்பாடுகள் போன்ற பல்வேறு மதங்கள், நம்பிக்கைகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையே ஆகும். இஸ்லாத்திற்கு முந்தைய மதங்களுடன் தொடர்பு பட்ட விடயங்களை ஹராம் என்று சொல்லி இஸ்லாத்திலிருந்து நீக்கினால் இஸ்லாத்தில் பல விடயங்கள் காணாமல் போய்விடும், குர்ஆனில் கூட பல பக்கங்கள் அத்தியாயங்கள் காணாமல் போய்விடும்.
.
கராட்டே, குங்ஃபு, டாய்ச்சி, ஜூடோ என்று பல தற்காப்புக் கலைகள், உடற்பயிற்சிகள் இருந்தும் யோகாவை மட்டும் குறிப்பாக சர்வதேச அளளவில் சந்தைப் படுத்துவதற்குப் பின்னால் இந்துத்துவா அரசியல், போலி அறிவியல் (Pseudoscience), பாபா ராம்தேவ் போன்ற ஏமாற்று வித்தைக்காரர்களின் வருமானம் என்று பல விடயங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாவிட்டாலும், யாருக்கும் தீங்கு இளைக்காத, மக்கள் விரும்பிப் பங்கு பெற்ற ஒரு நிகழ்வில் தாலிபான் கொடிகளுடன் வந்தவர்களால் மேற்கொள்ளப் பட்ட தாக்குதலானது ஒரு ஆபத்தான சமிக்ஞையையே வெளிக்காட்டி நிற்கின்றது. ஆப்கானிஸ்தான் போலவே ஒரு காலத்தில் பெளத்த நாடாக இருந்த மாலைதீவுகள், எதிர்காலத்தில் இன்னொரு தலிபானிய ஆப்கானிஸ்தானாக மாறக் கூடிய ஆபத்து இல்லாமலில்லை.
காலநிலை மாற்றத்தால் மாலைதீவுகள் மெதுவாக கடலில் மூழ்கிக் கொண்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், அதற்கு முன்னரே மாலைதீவுகளை இஸ்லாமியவாதிகள் இஸ்லாம் எனும் நச்சுக் கடலில் மூழ்கடித்து மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக நாடாக மாற்றிவிடுவார்கள் போலுள்ளது.

கருத்துகள் இல்லை: