திங்கள், 8 நவம்பர், 2021

திருமதி :கனிமொழி MP : இங்கேயே பிறந்து .. தமிழ்நாட்டை தவிர வேறு எதுவுமே தெரியாத பல குழந்தைகள் அந்த முகாமிலேயே... .

இலங்கை மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்கள் பற்றி திருமதி கனிமொழி எம்பி அவர்கள்  நக்கீரன் காணொளிக்கு வழங்கிய விரிவான பேட்டி    :
கேள்வி : ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் அவர்களின் வாழ்வியலுக்காகவும் நிறைய குரல் கொடுத்து வந்திருக்கிறீர்கள் . நிறைய போராடியிருக்கிறீர்கள்
சமீபத்தில் கூட தூத்துகுடி அகதிகள் முகாமில் நிறைய ஆய்வுகள் நடத்தி அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை நிறைவேற்றி இருக்கிறீர்கள்  
 இலங்கை அகதிகள் என்பது தற்போது இலங்கை மறுவாழ்வு முகாம் என்று தமிழக அரசு மாற்றம் செய்திருக்கிறது .இதற்கான கோரிக்கை கூட உங்க கிட்டே இருந்து எழுந்ததாக அறிகிறோம்
இப்போ தமிழகம் இந்த மாதிரியான ஒரு மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறதல்லவா? இதை எப்படி பார்க்கிறீங்க?
திருமதி .கனிமொழி :   தொடர்ந்து வந்து நான் மட்டுமில்லை . கலைஞர் ஆட்சி பொறுப்பில் இருந்த போது அதற்காக ஒரு குழுவை நியமித்து ரவிக்குமார் எம்பி உட்பட அங்கு போய்வந்து அங்கிருக்கிற நிலைமைகளை ஆய்வு செய்து அங்கிருக்கிற பிரச்சனைகளை அறிந்து என்னன்ன செய்யவேண்டுமோ அவற்றை செய்ய தொடங்கி இருந்தாங்க


அதே போல அங்கிருக்கிற மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க கூடிய இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம்.
எனது தொகுதியில் உள்ள  முகாமில் உள்ள பிரச்சனைகளை அங்கிருக்கிற அதிகாரிகள் மற்றவர்கள் எல்லோரும் தெரிவித்த கருத்துக்களை எல்லாம் முதல்வர் கேட்டு உணர்ந்து சட்டமன்றத்திலேயே  
அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்ட்ங்களை அறிவித்தார்   
அதை தவிர பெற்றோர்கள் இங்கே வந்து அவர்களுக்கு இங்கேயே பிறந்து .. தமிழ்நாட்டை தவிர வேறு எதுவுமே தெரியாத பல குழந்தைகள் அந்த முகாமிலேயே வளர்ந்தவர்கள் .
இன்றைக்கு கல்விக்காக அவர்களும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் .
வேலை வாய்ப்புக்காக .. படித்து முடித்துவிட்டு ... நான் எஞ்சினியரிங் படிச்சிருக்கேன்  ஆனால் வேலை போக முடியவில்லை . எங்களை யாரும் வேளைக்கு எடுத்துக்க மாட்டாங்க .. அப்படீங்கிற நிலமைல  கேள்வியை வைக்கக்கூடிய பல இளைஞர்களை காணக்கூடியதாக இருக்கிறது
பல பேர் இன்று பெயிண்டர்களாக இருக்கிறார்கள்  .ஏனென்றால் அது ஒன்ருதால் கான்ட்ராக்ட்டர் வேலை அல்லவா?
ஒரு கம்பனியில் ஒரு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கள் பெறமுடியாமல் ..
அரசாங்கம் தரக்கூடிய நலத்திட்டங்கள் எதையுமே பெற முடியாமல் ..
ஒரு பெரிய போராட்டத்திற்குள்ளே .. இடம் இல்லாமல் .. அந்த முகாம்களுக்கு உள்ள ..
இன்னைக்கு அவங்க வந்து எத்தனையோ ஆண்டுகளாயிச்சு   
குடும்பம் பெரிசாக கூடிய நிலமைல அங்கு வாழமுடியாமல் தவித்து கொண்டிருக்கிற சூழ்நிலைல இன்றைக்கு முதலமைச்சர் திட்டங்களை அறிவித்திருக்கிறார்..  
முழுப்பேட்டியையும் காணொளியில் காணலாம்

கருத்துகள் இல்லை: