திங்கள், 20 மே, 2019

பங்குச் சந்தை உயர்வுக்காக ஒரு எக்சிட் கருத்து கணிப்பு ?

தேர்தல் வாக்குக் கணிப்பு: பங்குச் சந்தைகள் உயர்வு!மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலுக்கான வாக்குக் கணிப்பு விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
17ஆவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே 19) நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர் உள்ளிட்ட பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் என்றும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கும் என்றே கூறியுள்ளன. இந்த ஆய்வானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 306 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 132 இடங்களிலும், மற்ற கட்சிகள் 104 இடங்களிலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குக் கணிப்புகள் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையிலும் தேசிய பங்குச் சந்தையிலும் அவற்றின் உச்சத்தை நெருங்கும் வகையில் பங்குச் சந்தைகள் நிறைவடைந்துள்ளன. பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 7.78 சதவிகிதமும், ரியால்டி துறை 5.72 சதவிகிதமும் ஏற்றம் கண்டுள்ளன. இன்றைய பங்குச் சந்தை நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை எண் சென்செக்ஸ் 1421.90 புள்ளிகள் உயர்ந்து 39,352 புள்ளிகளாக இருந்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை எண் நிஃப்டி 425.55 புள்ளிகள் உயர்ந்து 11,832.70 புள்ளிகளாக இருந்தது.
தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்குச் சாதகமாக இருந்தால் பங்குச் சந்தை ஏற்றம் காணும் என்று மோதிலால் ஓஸ்வால், ஐடிபிஐ கேப்பிட்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஆய்வில் தெரிவித்திருந்தன

கருத்துகள் இல்லை: