திங்கள், 20 மே, 2019

சோனியா திடீர் உற்சாகம்:... மத்திய உளவுத்துறை .. பாஜகவுக்கு 170 க்கு மேல் கிடையாது ..

சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?

மின்னம்பலம் : நடந்து முடிந்துள்ள 2019 மக்களவைத் தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று (மே19) வெளியாகின. அதில் பெரும்பாலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்புகள் வெளியான நிலையில் காங்கிரஸ் வட்டாரத்தில் வேறு விதமான தகவல்களை சொல்கிறார்கள்
காங்கிரஸ் கட்சித் தலைமை ஒரு தனியார் ஏஜென்சி மூலமாக தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்தியா முழுவதும் எடுத்துள்ள சர்வேயில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளது என்கிறார்கள். மேலும் மத்திய உளவுத் துறை அதிகாரிகளிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின் படி பாஜக 170 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்றும் காங்கிரஸ் கூட்டணி மெஜாரிட்டியை எளிதில் அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவாகவே இந்த தேர்தலில் பரப்புரை உள்ளிட்ட அத்தனை பணிகளையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைத்துவிட்ட சோனியா காந்தி தனது தொகுதியான ரேபரேலியில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் பாரபட்சமற்ற தனியார் ஏஜென்சியின் ரிப்போர்ட் மற்றும் மத்திய உளவுத் துறையின் நம்பகமான தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே திடீரென மே 23ஆம் தேதி இரவு பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொள்ளும் கூட்டத்தை டெல்லியில் கூட்டியிருக்கிறார் சோனியா காந்தி.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த சோனியாவுக்கு மத்திய உளவுத் துறையின் தகவல்கள் உற்சாகத்தை அளித்திருக்கின்றன என்றும், அதன் விளைவாகவே டெல்லியில் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: