ஞாயிறு, 11 நவம்பர், 2018

ரகுராம் ராஜன் : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியால் இந்தியாவின் பொருளாதாரம் ...

Swathi K : வேகமாக வளர்த்த இந்தியாவின் பொருளாதாரம் பணமதிப்பிழப்பு,
ஜி.எஸ்.டியால் வளர்ச்சி தடைபட்டு மோசமான சூழலில் உள்ளது. - ரகுராம் ராஜன்
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த, ரகுராம் ராஜன், பணி ஓய்வு பெற்ற பிறகு அமெரிக்காவில் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய திட்டங்கள் தான் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவுக்குக் காரணம் என விமர்சித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் வேகமாகச் சென்று கொண்டு இருந்தது. ஆனால் மேற்சொன்ன இரண்டு திட்டங்களுக்குப் பின்னர் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பின்னடைவைச் சந்தித்தது.
உலக பொருளாதாரமே வளர்ச்சிப் பாதையில் இருந்தபோது இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தது. 2017 -ம் ஆண்டில் உலக பொருளாதாரம் முன்னேறிய தருணத்தில் இந்திய பொருளாதாரம் கீழே சென்றது.
10-Nov-2018: Notes Ban, GST Held Back India's Economic Growth: Raghuram Rajan
Addressing an audience at the University of California in Berkley on Friday, Mr Rajan said, "The two successive shocks of demonetisation and the GST had a serious impact on growth in India. Growth has fallen off interestingly at a time when growth in the global economy has been peaking up,"
"The reality is that GDP growth 7% is not enough for the kind of people coming into the labour market and we need jobs for them, so, we need more and cannot be satisfied at this level,"
Reference:
https://www.ndtv.com/…/raghuram-rajan-notes-ban-gst-held-ba…
https://www.vikatan.com/…/141909-rbi-former-governor-says-d…

கருத்துகள் இல்லை: