திங்கள், 23 அக்டோபர், 2017

திருமாவளவன் கட்டை பஞ்சாயத்து விமர்சனம் ... தமிழிசை மீது விடுதலை சிறுத்தைகள் கடும் சீற்றம் ... போராட்டம் ,,, போலீசில் முறைப்பாடு ..

மாலைமலர் : தொல்.திருமாவளவன் கட்ட பஞ்சாயத்து செய்து இடத்தை அபகரித்து கொண்டதாக தமிழிசை கூறினார். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனரிடம் தமிழிசை மீது விடுதலை சிறுத்தைகள் புகார் சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை கட்ட பஞ்சாயத்து செய்து இடத்தை அபகரித்து கொண்டதாக கூறினார். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிந்தாதிரிப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, ரவி சங்கர், நிர்வாகிகள் பகலவன், வில்லாளன், அப்துல்ரகீம், ஜெரால்டு, ஸ்ரீதர் கார்த்திக் உள்ளிட்டவர்கள் சாலையில் உட்கார்ந்து தமிழிசையை கண்டித்து கோ‌ஷமிட்டனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
 அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் செல்லதுரை போலீஸ் துணை கமி‌ஷனர் பிரவேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கட்சி தலைவர் மீது எந்த அடிப்படையில் ஆதாரம் இல்லாத அவதூறுகளை டாக்டர் தமிழிசை கூறியுள்ளார்.


 இதற்காக அவர் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டங்களை முன் எடுத்து செல்வோம். தமிழிசையின் பேச்சு ஜாதி பிரிவினையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. மிகப்பெரிய வன்முறையை தூண்டும் விதத்தில் அவர் பேசியுள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து தலைமை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

 ஈரோட்டில் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து சாலை மறியல் நடந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: