செவ்வாய், 23 மே, 2017

உத்தர பிரதேசம் .180 தலித் குடும்பங்கள் பௌத்த மதத்தை தழுவினர்.


pirakash JP  : உத்தரபிரதேசத்தில் சாதிக்கொடுமைகள் தாங்காது ஒரு கிராமமே மதம் மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். இந்து மதத்தில் இருந்துகொண்டு சாதியை ஒழிப்பது தலித்களின் வேலையல்ல. அது சாத்தியமுமல்ல. தலித்கள் உடனடியாக அண்ணல் அம்பேத்கார் காட்டிய வழியில் பவுத்தம் தழுவவேண்டும்.
ஏன் இதை தலித்களுக்கு மட்டும் தான் சொல்வீர்களா இடைநிலை சாதிகளுக்கு இந்த கோரிக்கை கிடையாதா என்று கேட்கலாம். தலித்கள் முற்றிலுமாக பவுத்தத்திற்கு மாறிவிட்டால் பிறகு இடைநிலை சாதிகள் அந்த இடத்திற்கு வந்துவிடுவார் கள். அதன்பிறகு ஹிந்துத்வ குண்டர்களோடு அவர்களால் மல்லுக்கட்ட இயலாமல் அவர்களும் வெளியேறித்தான் ஆகவேண்டும். விடுதலை

கருத்துகள் இல்லை: