இன்று வரலாறு காணாத கொலை, கொள்ளை, மின்வெட்டு, வழிப்பறியில் சிக்கி சீரழிந்து வருகிறது தமிழகம். அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உலக சாதனை படைத்து விடும்போல அம்மாவின் பொற்கால ஆட்சி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க ஆட்சியை பற்றி ஒப்பாரி வைத்த பதிவர்களை தேடினால் ஒரு சிலர் மருத்துவ குறிப்பு எழுத ஆரம்பித்துவிட்டார்கள் இன்னும் சிலர் ஜோதிடம், ஆன்மிகம் என்று போய்விட்டனர். இப்போது தமிழகத்தின் நிலையை பதிவு போடுவார்களா என்று பார்த்தால் மூச்சை காணோம்.
இன்று யாராவது அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேட்டை பற்றி பதிவு எழுதினால் இந்த அம்மா கோஷ்டிகள் போடும் முதல் பின்னூட்டம் இதுதான் "யோவ் ஒருமாசம் தானேயா ஆயிருக்கு". என்ன அருமையாக சமாளிக்கிறார்கள். இதே உங்கள் வீட்டில் கொலையோ, கொள்ளையோ இல்லை வழிப்பறியோ நடந்திருந்தால் இப்படி சொல்வீர்களா? ஒரு மாதம், அதையேதான் நானும் கேட்கிறேன் இந்த ஒரு மாதத்தில் எங்கிருந்து வந்தார்கள் இவ்வளவு கொள்ளைக்காரர்களும், கொலைக்காரர்களும்? போகிரப்போக்கை பார்த்தால் சங்கிலி திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடுவதை விட சங்கிலி வைத்திருப்பவர்கள் தான் ஆந்திராவுக்கு ஓடவேண்டும் போல.
அமைதி பூங்காவாம்! அம்மா ஆட்சியில் பூங்கா எப்படி இருக்கும் என்று கூட தெரியாத அம்மா கோஷ்டிகள் தி.மு.க ஆட்சியின் போது சொன்ன கருத்து "அம்மா ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்ததாம்". நேற்று இரவு தமிழகம் இருளில் தத்தளித்த போதுதான் நானும் பார்த்தேன் அம்மாவின் அமைதிப்பூங்காவை, பொற்கால ஆட்சியை. ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே இவ்வளவு பெரிய நிர்வாக சீர்கேட்டை எந்த ஒரு அரசும் நிகழ்த்தியது இல்லை. வரலாறு படைத்து வருகிறார் அம்மா.
சென்னையில் வரலாறு காணாத மின்வெட்டை கண்டு மக்கள் அலறுகிறார்கள், பள்ளி மாணவர்கள் இன்னும் புத்தகம் கிடைக்காமல் தவிக்கிறார்கள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள், பள்ளிகளின் பணக்கொள்ளையை பார்த்து பெற்றோர்கள் விழி பிதுங்குகிறார்கள், கொள்ளையர்களிடம் பணத்தையும் கணவனின் உயிரையும் கொடுத்த பெண்கள் கதறுகிறார்கள் இதுதான் இன்றைய தமிழக மக்களின் நிலை.
ஆட்சிக்கு வந்த ஒருவாரத்திலேயே அனைத்து சமச்சீர் கல்வி புத்தகங்களையும் படித்து முடித்து அதில் குறைக்கண்டுப்பிடித்துவிட்டார், புதிய தலைமை செயலக கட்டிடத்தின் அடியில் இரவோடு இரவாக பள்ளம் தோண்டி ஊழலை கண்டுப்பிடித்துவிட்டார் "அஸ்திவாரத்திலேயே ஊழல்" என்று. இன்னும் என்னென்ன கொடுமைகளை நாங்கள் பார்க்கப்போகிறோம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க ஆட்சியின் துரித நடவடிக்கை இதுதான், போர்கால நடவடிக்கை இதுதான் போல. அரசு பேருந்தில் கலர்கலராக வண்ணம் அடித்து அதிக டிக்கெட் வசூல் செய்வதை தடுக்காமல் எங்கே போனது இவர்களுடைய போர்கால நடவடிக்கை?. கடந்த ஆட்சியில் டிக்கெட் வசூலை கண்டு ஒப்பாரி வைத்தவர்கள் தானே இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்? என்ன சொல்லபோகிறீர்கள் இனி?
தி.மு.க ஆட்சியின் போது ஒருவன் ரோட்டில் வழுக்கி விழுந்துவிடகூடாது உடனே சில ஒப்பாரி மீடியாக்கள் சென்று அவனிடம் மைக்கை நீட்டிவிடுவார்கள் "ஐயா இதுக்கு காரணம் மைனாரிட்டி தி.மு.க அரசுதான்னு சொல்லுங்க" என்று. இப்போது அந்த ஒப்பாரி மீடியாக்கள் எல்லாம் எங்கே போனது?
இதுவரை இலவச வண்ண தொலைகாட்சி திட்டத்திற்காக வாங்கப்பட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் அனாதை ஆசிரம்மங்களுக்கு போகுமாம், ஆடு -மாடு இலவசமாம், மின்தடையை நீக்க வழியை காணோம் மிக்சி, பேன் விரைவாக கொடுக்க அமைச்சர்கள் ஆலோசனை நடக்கிறதாம், காப்பீடு திட்டம் ரத்து அதற்கு மாற்றாக புதிய காப்பிடு திட்டம் வருமாம்(அடுத்த ஆட்சியிலா என்று தெரியவில்லை), கடன் ஒருலட்சம் கோடி என புதிய ஒப்பாரி வைப்பவருக்கு மோனோ ரயில் திட்டம் வேண்டும் இவருக்கு சிறந்த நிர்வாகி என பெயர் வேறு.
இனி இந்த அம்மா புதிதாக எதுவும் கொண்டு வர வேண்டாம் கோட நாட்டியல் உட்கார்ந்துக்கொண்டு இது சரியில்லை அது சரியில்லை என்று அறிக்கையும், ஆர்ப்பாட்டமும் நடத்த சொன்னாரே அந்த காரணத்தையாவது இவர் சரி செய்யலாமே? கலைஞர் கொண்டுவந்த புதிய மின்சார நிலையங்களை விரைவாக முடிக்கலாமே? செய்வாரா இந்த "தங்கத்தாரகை"(இப்போதைக்கு தோடுக்கு விலக்கு).
http://thoppithoppi.blogspot.com/2011/07/blog-post.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக