மட்டக்களப்பு மாநகர புறநகர்ப் பிரதேசமான புதூர் மக்கள் வங்கிக் கிளை இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்ஜித் வனராஜா தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் வேளை மக்கள் வங்கி என்ற விளம்பரப் பலகையை மாட்டிய வேனொன்றில் வந்த ஐவரடங்கிய துப்பாக்கிதாரிகள் வங்கியில் ஆயுதத்துடனிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை வங்கி அறையொன்றினுள் பூட்டிவிட்டு அங்கிருந்த இலட்சக்கணக்கான ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக