ஓஷோ :“சூனியக்காரி (witch woman )“என்பது மிகவும் மரியாதிக்குரிய ஒர் சொல் அதைக் கிறிஸ்தவம் கேவலப்பாடுத்தியிருக்கிறது. அதன் மூல அர்த்தம் “ஞானப்பெண்( wise woman ) என்பதே. ஆனால் கிறிஸ்தவ மதம் அதற்க்கு மிகவும் திரிபான அர்த்தத்தைக் கொடுத்தது. ஏனேன்றால் கிறிஸ்த்தவ மதத்தின்படி , சாத்தான் முதலில் ஏவாளின் மனத்தைக் கெடுத்தான் அன்றிலிருந்து அவன் பெண்னுடன் சேர்ந்து கூட்டு சதி செய்து வருகிறான் . ஆகவே அவள் ஞானமுள்ளவளாக இருக்க முடியாது . ஏனேன்றால் அவளுடைய ஞானம் கடவுளிடமிருந்து வரவில்லை . சாத்தானிடமிருந்தே வருகிறது . இந்த அர்த்தத்தை அவர்கள் ஏற்றியதுமே பெண்ணை அதிகமாக சபிப்பதற்க்கான வழி செய்ததாகிறது. உண்மையில் ஞானமுள்ள பெண்கள் இருக்கவே செய்தார்கள். குறிப்பாக சித்தர் மரபில்/ ரசவாத மரபில் இருந்தார்கள்-இது மறைஞான மரபின் கிளைகளில் ஒன்றாகும்.
கிறித்தவ பாதிரிகளின் கண்களுக்கு இந்த ரசவாத பெண்கள் அவர்களின் போட்டியாளர்களாக தெரிந்தார்கள் . எனவே அவர்களை ஒழித்துக்கட்டவேண்டியதானது . அவர்களை அழிக்க ஒரு நியாயப்பாடு தேட வேண்டியதாயிற்று; அவர்களின் நியாயவாதம் இதுதான் ; அந்த பெண்கள் சாத்தானுடன் உடலுறவு கொள்கிறார்கள். ஒரு சிறப்பு நீதிமன்றத்தை போப் நியமித்தார். “மகா புலன் விசாரனை “ ஆரம்பமானது. இதன் ஒரெ வேலை எல்லா சூனியக்காரிகளையும் கண்டுபிடித்து உயிரோடு கொளுத்துவதுதான் . அவ்ர்களை கண்டுபிடிக்க பயன்படுத்தமுறை இதுதான்- எந்த ஆண் வேண்டுமானாலும் குறிப்பிட்ட பெண் சூனியாக்காரியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக நீதிமன்றத்திடம் தெரிவித்தால் போதுமானது- அவளை கைது செய்துவிடலாம்.
அவ்ளை சித்திரவதை செய்ய சில முறைகளை புதிதாக கண்டுபிடித்தார்கள். அவை மிகவும் அசிங்கமாக இருந்த்தது ; அதை சகித்து கொள்வது பெண்ணால் இயலாத அளவுக்கு கொடுமையாக இருந்தது . சாத்தானுடன் உடலுறவு கொண்டதாக அவள் அறிக்கையிடாதவரை வாரக்கணக்கில் சித்திரவதை நீடித்தது. அதை ஒத்துக்கொண்டபின் அவள் மகா புலன் விசாரணை மன்றத்தின் முன்னிலையில் அதை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கர்தினால்களும் பேராயர்களும் உயர் அந்தஸ்துள்ள பாதிரிகளும் அம்மன்றத்தில் உறுப்பினர்களாகி இருந்தார்கள் . அவர்கள் இந்த பெண்களை சாத்தானுடன் தாங்கள் உடலுறவு கொண்டதாக அறிக்கைவிடும்படி பலவந்தப்படுத்தினார்கள் . அதுமட்டுமல்ல , சாத்தானின் ( ஆண்) குறியானது கவைபோல் இரு கூர் உள்ளதாக உள்ளது ; எனவே ஒரே சமயத்தில் பெண்ணுள் இருபுறமிருந்தும் அதனல் ஊடுருவ முடிந்தது என்றும் சபைமுன் சொல்லும்படி அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள், இந்த பெண்களை உயிருடன் கொளுத்த நீதிமன்றத்துக்கு இதுவே போதுமானதாக இருந்தது. இவ்வாறு முற்றிலும் குற்றமற்ற பெண்கள் ஆயிரக்கண்க்கில் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.
கிறிஸ்தவ சாமியார்களைவிட அவர்கள் அதிக ஞானமுள்ளவர்களாக இருந்தார்கள். இதுதான் அடிப்படையான காரண்ம் . ஆகவே அவர்களை முற்றிலுமாக இல்லாமலாக்க வேண்டியிருந்தது.அப்போதுதான் எந்த போட்டியாளரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.
வருங்கால மனிதர் சூனியக்காரராக இருப்பார் என்று சொல்லமாட்டேன். பாதிரி எப்பட்ய் கடந்த காலத்தின் ஒரு பகுதியோ அப்படித்தான் சூனியகாரியும், புதிய மனிதருக்கும் இயற்க்கைக்கும் இடையில் மத்தியஸ்தராக பூசாரிகள்/ சாமியார்கள்- ஆண்களிலும் சரி- பெண்களிலும் சரி - இருக்கமாட்டார்கள். இயற்க்கையுடம் ஆன அவரது தொடர்பு உடனடியானதும் நேரடியானதும் ஆகவே இருக்கும் . வருங்காலத்தில் எந்த ஒழுங்கமைக்கப்பட்ட மதத்துக்கும் இடமில்லை.
-பெண் விடுதலை; ஒரு புதிய தரிசனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக