ஞாயிறு, 25 ஜூலை, 2010

கேரளாவை முஸ்லிம் நாடாக்க முயற்சி : முதல்வர் அச்சுதானந்தான்

கேரளாவில், இளைஞர்களை கட்டாய முஸ்லிம் மதமாற்றம் செய்து, கேரளத்தை முஸ்லிம் நாடாக்க முயற்சிகள் நடப்பதாக அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன்,

“ஒரு முஸ்லிம் அமைப்பினர், மற்ற மதத்தை சேர்ந்த இளைஞர்களை தங்கள் பக்கம் கவர பணத்தை வாரி இறைத்து, கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் திசை திருப்பவும் முயல்கின்றனர்.

இதனால் பெரும்பாலான மக்கள் அவர்களை ஆதரிக்க வில்லை.

20 ஆண்டுக்குள் கேரளாவில் முஸ்லிம்களை பெரும்பாமையாக்கி, கேரளத்தை முஸ்லிம் நாடாக்க சதிகள் நடக்கிறது.

இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறாம். அவர்கள் ஆகஸ்டு 15ந் தேதி நடத்த இருந்த மாநாட்டுக்கு தடை விதித்து இருக்கிறோம்.  இது போன்ற ஆபத்தான இயக்கங்களை தனிமைப்படுத்த வேண்டும்.

தற்போது இந்த இயக்கம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை எதுவும் முஸ்லிம் சமூதாயத்தை பாதிக்காத வகையில் இருக்கும்” என்று அவர் கூறினார்.

மேலும், கேரள உள்துறை மந்திரி கோடியேரி பாலகிருஷ்ணன் கூறுகையில், “தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் தான் புதிய இயக்கமாக மாறி உருவெடுத்துள்ளதா என்பதை கண்டறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர்” என்றார்.

கருத்துகள் இல்லை: