ஞாயிறு, 25 ஜூலை, 2010

அகோபில மடத்திற்குள் கொள்ளையர்கள், ஊழியர கனகவல்லியை கத்தியால் குத்திக் கொலை செய்து

சென்னை : சென்னை [^]அருகே சேலையூரில், அகோபில மடத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெண் ஊழியர் கனகவல்லியை கத்தியால் குத்திக் கொலை செய்து கிணற்றுக்குள் வீசினர். இதனால் ஆத்திரமடைந்த மட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளையன் ஒருவனைப் பிடித்து சரமாரியாக தாக்கியதில் அவனும் உயிரிழந்தான்.

சேலையூரில் அகோபில மடம் உள்ளது. பிரபலமான இந்த மடத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து தங்களது பணிகளைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.

இன்று காலையும் ஊழியர்கள் வழக்கம் போல எழுந்து தத்தமது வேலைகளில் மூழ்கியிருந்தனர். அப்போது கனகவல்லி என்ற ஊழியை, மடத்திற்குப் பின்புறம் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் புகுந்தனர்.

இதைப் பார்த்த கனகவல்லி திருடன் திருடன் என கத்தியுள்ளார். இதைப் பார்த்த கொள்ளையர்கள் கனகவல்லியை சூழ்ந்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் கனகவல்லியை தூக்கி அங்கிருந்த கிணற்றில் வீசினர்.

அப்போதும் வெறி அடங்காத கொள்ளையர்களில்
சத்தியராஜ் என்பவன் உள்ளே குதித்து கனகவல்லியை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்றான். இந்த சமயத்தில், கனகவல்லி போட்ட சப்தம் கேட்டு மட ஊழியர்கள் ஓடி வந்தனர்.

இதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடினர். ஆனால் கிணற்றுக்குள் குதித்த சத்யராஜ் மட்டும் தப்ப முடியாமல் மட ஊழியர்களிடம் மாட்டிக் கொண்டான். கனகவல்லி கொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ஆவேசத்துடன் சத்தியராஜை கடுமையாக தாக்கினர். இதில் அவன் படுகாயமடைந்தான்.

பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரியவரவே அவர்கள் விரைந்து வந்து சத்தியராஜை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் உயிரிழந்தான்.

இந்த சம்பவத்தால் சேலையூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகோபில மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

கொள்ளைக் கும்பலில் ஐந்து பேர் இருந்ததாக தெரிகிறது. தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேவெ கெளடா வரவிருந்த சமயத்தில் அசம்பாவிதம்

இன்று காலை 7 மணிக்கு இந்த மடத்திற்கு முன்னாள் பிரதமர் [^]தேவெ கெளடா வருவதாக இருந்தது. பிற்பகல் 12 மணியளவில் திரும்பிச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டதால் அவரது பயணம் ரத்து [^] செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: