சனி, 18 பிப்ரவரி, 2017

வழக்கறிஞர் கீதா : ஜெ. மரணம் ஒரு கொலை ! ஜெ.யின் சொத்துக்கள் 2 லட்சம் கோடி சசி பொறுப்பில்..தீபா பணத்துக்கும் பதவிக்கும் அலைகிறார்!



சங்கர் - கௌசல்யா ! ஆணவக் கொலைக்கு எதிராக பறை முழங்கும் கௌசல்யா!

”சங்கரை காப்பாத்தப்போன என்னையும் தலையில வெட்டுனாங்க. நான் ‘காப்பாத்துங்க காப்பாதுங்க’னு அழுதப்போ, ரோட்டுல நின்னுட்டு இருந்தவங்க எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்தாங்க. அவங்க உயிர் பயம் அவங்களுக்குன்னாலும், ஆளுக்கொரு கல்லை எடுத்தாவது வீசியிருக்கலாம். mmm_14313  “பதுங்குகுழியில் மறைவு வாழ்க்கை!’’ - ஆணவக்கொலைக்குக் கணவரை இழந்த கௌசல்யா இப்போது..! mmm 14313 kousalya_sankar_14445  “பதுங்குகுழியில் மறைவு வாழ்க்கை!’’ - ஆணவக்கொலைக்குக் கணவரை இழந்த கௌசல்யா இப்போது..! kousalya sankar 14445குடும்ப அமைப்பில் உரிமை, சுதந்திரம், விருப்பம் என்று வரும்போது, பெண்கள் இரண்டாம்பட்சம் ஆகிறார்கள். ஆனால், ‘குடும்பத்தின் கௌரவம்’ என்ற சுமை முழுவதும் அவர்களின் தலையில்தான் சுமத்தப்படுகிறது. குறிப்பாக, ஆதிக்க சாதியில் பிறந்த பெண்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்தாலோ, காதலித்தவரை திருமணம் செய்துகொண்டாலோ, ஆணவக்கொலையில்  வந்து  முடியுமளவுக்கு சம்பவங்கள் நடப்பதற்கு, அந்த அர்த்தமற்ற பாரமே காரணமாகிறது. அப்படி சாதிக்கு தன் வாழ்க்கையை பலிகொடுத்து நிற்பவர், கௌசல்யா. கலப்புத் திருமணம் செய்துகொண்ட, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காதல் தம்பதி சங்கர்-கௌசல்யா, நடுரோட்டில், பட்டப்பகலில் கொலைவெறித்  தாக்குதலுக்கு ஆளானதை தமிழகத்தின் மனசாட்சி மறக்காது.
அதில் சங்கர் படுகொலை செய்யப்பட, கௌசல்யா பலத்த வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

ஸ்டாலின் :சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: திமுகவின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: 21 ஆண்டுகள் நடந்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் நேர்மையை நிலைநாட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த அளவுக்கு தடைகளை ஏற்படுத்தினார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.

ஜெயா பெயரை நீக்கு – அதிமுக சொத்துக்களைப் பறிமுதல் செய் ! மக்கள் அதிகாரம்

இது தனிநபர் மீதான வெறுப்பு அல்ல. தமிழகத்தை கொள்ளையடித்த, சீரழித்த ஒரு கொள்ளை கும்பலின் தலைமை ! ஜெயா-சசி கும்பலை தமிழகத்தின் தீய சக்தியாக கருத வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கு மக்களின் இந்த செயல்தான் பாடமாக அமையும். நீதிமன்றத் தீர்ப்புக்களை கண்டு எந்த ஊழல்வாதியும் பயப்பட போவதில்லை.
ஜெயா சமாதியில் அடித்துச் சபதம் போடும் ஆத்திரம்! தீர்ப்புக்குக் குற்றவாளி கொடுக்கும் மரியாதை இதுதான்!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 16.02.2017 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு. தோழர்கள் கணேசன், ராஜு, கற்பகவிநாயம் செய்தியாளர்களிடம் பேசுகின்றனர்.சொத்துக் குவிப்புக் கிரிமினல் குற்ற வழக்கில் இறந்துபோன ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகள் என அறிவித்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்குமான சிறைத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம். சிலர் வாதிடுவதைப்போல “வரலாற்றுச் சிறப்புமிக்கதோ, அரசியல்வாதிகளுக்கு ஒர் எச்சரிக்கையோ, பாடமோ, காலதாமதமானாலும் இறுதியில் நீதி வென்றதாகக் கருதி வரவேற்கத்தக்கதோ” அல்ல.
அவர்கள் நால்வரும் தண்டிக்கப்பட வேண்டிய கிரிமினல் குற்றவாளிகள்தாம் என்பது ஊரறிந்த உண்மை. வேறுவழியின்றி நாட்டு மக்களிடையே ஏற்கெனவே நீதிமன்றங்களின் மீது வேகமாகச் சரிந்து விழும் நம்பிக்கையை மீட்பதற்கான இறுதி முயற்சியின் ஒரு பகுதிதான் இந்தத் தீர்ப்பு.

குமாரசாமி தீர்ப்பின் போது விகடன் சொன்னது என்ன ?

போயஸ் தோட்டத்து பூசாரி விகடன் : அன்றும் இன்றும்
“நீதி நின்று கொல்லும்!” – இது பிப் 22 2017 தேதியிட்ட ஆனந்த விகடனின் தலையங்கம். உச்சநீதிமன்றமே குற்றவாளிகள் என்று தண்டித்துவிட்டதால் விகடன் நிறுவனம் தைரியமாக ஜெயாவைப் பற்றி எழுதுகிறது. தலையங்கத்தில் இருந்து சில மேற்கோள்களைப் படியுங்கள்:
;தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்' என்று அரசியல்வாதிகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பவாதத்துக்கும் பயன்படுத்திய வார்த்தைகள் இப்போது உண்மையிலேயே அர்த்தம் பெற்றிருக்கின்றன. ஜெயலலிதா மரணமடைந்ததாலேயே அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே தவிர, அவர் குற்றம் இழைக்காதவர் என்பதால் அல்ல. ஓர் அரசியல் தலைவரின் மரணத்தோடு அவரது அரசியல் தவறுகளும் முறைகேடுகளும் மறைந்து போய்விடாது.ஒரு ரூபாய்தான் சம்பளம்’ என்று ஜெயலலிதா அறிவித்த ஆட்சிக் காலத்தில்தான் இந்த அநீதியான சொத்துக் குவிப்பு நடந்தது என்பதை மறக்கவும் முடியாது… மன்னிக்கவும் கூடாது.
ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா வழங்கிய தீர்ப்பை, விகடன் தலையங்கம் வரவேற்று எழுதியிருந்தது.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

குட்டியம்மா தீபாவின் கோரிக்கைகள் ... போயஸ் கார்டன் வீடு வேண்டும் .. மக்களை முட்டாளாக்கும் ஜெ.தீபா

இந்த வாரம் வெளியான விகடன் வார இதழில் தீபா பற்றிய எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்து விட்டார்கள். நம்மை இத்தனை நாட்களாக முட்டாளாக்கி வந்துள்ளார். படிங்க. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன் இன்னமும் கூட்டம் குவிந்து கிடக்கிறதே… என்ன முடிவில் இருக்கிறார் தீபா?’’ தீபா, மாற்றி மாற்றி முடிவுகளை அறிவிக்கிறார்; ஆனால், தனது நோக்கத்தில் அவர் தெளிவாக இருக்கிறார். ஜனவரியில் புதுக்கட்சி ஆரம்பிப்பேன்’ என்று தீபா சொல்லவில்லை. ஆனால், தீபா தரப்பில் இருந்து அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டது. அதை நம்பி, அ.தி.மு.க-வில் சசிகலாவின் தலைமையை ஏற்காத தொண்டர்கள் தீபா வீட்டு முன் குவிந்தனர். தீபா வீட்டை நோக்கி தினமும் சாரை சாரையாகப் படையெடுத்து வந்தனர். ஆனால், ஜனவரியில் தீபா உருப்படியாக எதையும் அறிவிக்கவில்லை. மாறாக, ‘மக்கள் கருத்தைக் கேட்டபிறகு, பிப்ரவரியில் அறிவிக்கிறேன்’ என்று சொல்லி, இன்னும் ‘பெப்’ ஏற்றினார். ஆனால், அதன்பிறகு அது தொடர்பான எந்த முயற்சிகளோ… சந்திப்புகளோ தீபா தரப்பில் இருந்து நடக்கவில்லை.

சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் : பொதுச்செயலாளர் பதவி தப்புமா.?

Venkat Ramanujam 1 hr · கூவத்தூரில் 🐴 ( 2000 Cr டீல் ) முடிந்து விட்டால் 115/ 117 என்ற கணக்கில் தோற்பார். 
🐎 முடியா விட்டால் 77/155 என்ற கணக்கில் தோற்பார் என்று செய்திகள் சொல்லுகிறது ..

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை கடந்த மாதம் அக்கட்சியினர் ஒரு மனதாக தேர்வு செய்தனர். அதன் பின்னர் சசிகலாவிற்கும், பன்னீர்செல்வத்திற்கு மோதல் ஏற்பட்டது. இதில் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த உறுப்பினர்களை சசிகலா அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அளித்திருந்தது. அந்த கடிதத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீசில் கூறியுள்ளதாவது: வரும் 28ம் தேதிக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி தப்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. லைவ்டே

காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு !


மின்னம்பலம் :நாளை நடைபெறவுள்ள பெரும்பான்மை வாக்கெடுப்பில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி, விஜயதாரணி, வசந்தகுமார், பிரின்ஸ், ராஜேஸ்குமார், கணேஷ் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். தாராபுரம் காளிமுத்து, முதுகளத்தூர் பாண்டி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அரசுக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு!

மின்னம்பலம் :திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கடந்த இரண்டு நாட்களுக்குமுன்னர் நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதையொட்டி, இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், வாகை சந்திரசேகர், முன்னாள் சென்னை மேயர் சுப்பிரமணியன் உள்பட திமுக முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தலாக்கிற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் போர்க்கொடி !


முத்தலாக் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து, அடுத்த மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி, திருமண பந்தத்திலிருந்து ஆண்கள் எளிதாக விவாகரத்து பெறுகின்றனர். இதனால், முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இன்றைய நவீன உலகில், சமூக வலைதளங்களில்கூட மூன்று முறை தலாக் என்றுகூறி தங்களுடைய மனைவியை விட்டுச் செல்கின்றனர்.
எனவே, முத்தலாக் விவாகரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாய்ரா பானு என்ற பெண், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், தங்களது தனிப்பட்ட சட்டதிட்டத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறிவந்தது.
இந்நிலையில், முத்தலாக் முறைக்கு மேலும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

எடுபிடி எம் எல் ஏக்களின் விலை : 5 கோடி (ரொக்கமாக அல்ல தங்ககட்டி) இன்னோவா கார் +4 வருஷங்களும் கமிசன் உறுதி !

எம்.எல்.ஏ.,க்கள் எல்லோருக்கும் 5 கோடி ரூபாய் பணம். அத்துடன் ஹையர் எண்ட் இன்னோவா கார் கொடுப்பதாக ஒப்புதல் அளித்திருந்தார்கள். பணம் வேண்டாம் என்பவர்கள் அந்த மதிப்புக்கு தங்கக்கட்டி வாங்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். எப்படி கேட்டார்களோ அப்படி அவரவர்களுக்கு போய்ச் சேர்ந்துவிட்டது
மின்னம்பலம் :
“முதல்வராக பதவியேற்றதும் இரவோடு இரவாக பழனிச்சாமி பரப்பன அக்ரஹாரா போவார். அங்கே சிறைக்குள் சென்று சின்னம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டுதான் கோட்டைக்குப் போவார் என்ற தகவல் முதலில் சொல்லப்பட்டது. ஆனால் நேற்று அவர் கிளம்பவில்லை. இன்று காலையில் பரப்பன அக்ரஹாரா போகிறார் என்று சொல்லப்பட்டதால், ஜெயில் இருக்கும் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏனோ பழனிச்சாமி போகவில்லை. ’சசிகலா உங்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தாலுமே அவர் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு கைதி. முதல்வராக பொறுப்பேற்றதும் நீங்கள் சிறைக்குச் சென்று அவரைச் சந்திப்பது நல்லது இல்லை. அது பல்வேறு விமர்சனங்களை கிளப்பும். அத்துடன் திமுக சட்டமன்றத்தில் இதுதொடர்பாக உங்களிடம் கேள்விகளை எழுப்பலாம். பிரச்னைகளை கிளப்பலாம். அதனால் சட்டமன்றத்தில் உங்கள் பலத்தை நிரூபித்து நிலையான ஆட்சியமைக்கும் வரை நீங்கள் சிறைக்குச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது’ என்று, சட்ட நிபுணர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

EVKS : திருநாவுகரசர் அதிமுகவில் சேர்கிறார்? சசிகலாவுக்கு தொடர்ந்து ஆதரவு ... நடராஜன் உறவாம்?

ஈவிகேஎஸ். இளங்கோவன்சசிகலாவுக்கு ஆதரவாகவே திருநாவுக்கரசர் பேசி வருகிறார். அவர் விரைவில் அதிமுகவில் சேருவதாகத் தகவல் வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளது. அதை தலைமை முறையாக எங்களிடம் அறிவித்தும்விட்டது. ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். திமுகவின் முடிவையே காங்கிரஸும் எடுக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால்,காங்கிரஸ் தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறார். சசிகலாவுக்கு ஆதரவாகவே திருநாவுக்கரசர் பேசி வருகிறார். நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசர் விரைவில் அதிமுகவில் சேருவதாகத் தகவல் வருகிறது'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.tamilthehindu

எடப்பாடி பழனிசாமி வரலாறு ! சட்டவிரோத, கிரிமினல், ஊழல், சாதிவெறி ..

சந்திர மோகன்

தமிழகத்தின் புதிய முதல்வரின் ரெக்கார்ட்! வேண்டாம் கிரிமினல்களின் ஆட்சி!
சந்திர மோகன் உச்சநீதிமன்றத்தால் கிரிமினல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க தற்காலிக பொது செயலாளர் V.K.சசிகலா பரப்பனஹள்ளி சிறைக்கு அனுப்பப்பட்டதால், தற்சமயம்
தமிழகத்துக்கு ‘எடப்பாடி’ தான் முதல்வர் என்ற நிலைமை வந்துள்ளது. 15 நாட்களில் என்ன நடக்கும் என்ற போதிலும், முதல்வராகப் பொறுப்பேற்றுவிட்ட எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் , பொருளாதார ஊழல் பின்னணி பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
கமிசனுக்கு வெல்லம் விற்பதில் தனது வாழ்க்கையைத் துவங்கி, அரசியலில் நுழைந்தவர், எடப்பாடியார். MGR மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க ஜானகி – ஜெயலலிதா அணி என பிளவுபட்ட போது “கோழி” சின்னத்தில் போட்டியிட்டு ஜெயா அணிக்கு MLA வாக உருவானவர். 1989-ம் ஆண்டுமுதல் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வருகிறவர். இப்போது முதல் மந்திரியாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கிறார்.
ஜெயா முதல்வராக இருந்த வரை, மந்திரி பழனிசாமி பல்வேறு அரசாங்க ஒப்பந்ததாரர்களிடம் பெற்ற கமிசனில் 13.5 % யை ஏமாற்றமால் “கார்டன்” இடம் செலுத்தியவர் என்ற வகையில் ஜெயாவின், சசியின் பாராட்டுக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். கட்சியின் பணம் மட்டும் சுமார் ரூ. 10,000 கோடி இவரிடம் ஜெயாவின் காலத்திலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கழக கண்மணிகள் தெரிவிக்கின்றனர். எடப்பாடியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள் ஆகும்.

சட்டசபையில் நாளை ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் ஓபிஎஸ் அணி நேரில் வலியுறுத்தல்!

சென்னை: சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் நேரில் வலியுறுத்தினர். முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து 9-வது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். O Panneerselvam team meets Speaker Dhanapal இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். சசிகலா, தினகரன், வெங்கடேஷ் உள்ளிட்டோரை ஓபிஎஸ் அணி அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்ளிட்டோர் திடீரென இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது தங்களது அணி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையை ரகசியமாக நடத்த வேண்டும் எனவும் ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தினர்  tamiloneindia

விகடன் :மலையாளிகளை திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள்...!' கேரளாவுக்கு எதிராக எழும் கண்டனம்

பவானி ஆறு அணைதமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் நீராதாரமாகவும், பாசனத்திற்கான ஆதாரமாகவும் இருக்கும் பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணை கட்டும் பணிகளை கேரளா அரசு துவக்கி இருக்கிறது. ஏற்கெனவே வசாயத்துக்கு நீரின்றி விவசாயிகள் தற்கொலை செய்து வரும் நிலையில், இப்போது பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகளை கட்டி பொதுமக்கள், விவசாயிகள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது கேரளா. தடுப்பணை கட்டுவதற்கு எதிராக கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின் துவக்கத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.  ஆனால் எந்தப் பலனும் இல்லை. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் பரபரப்பில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் அழுத்தம் கொடுத்ததால் மிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அறிக்கையும், பிரதமருக்கு கடிதமும் எழுதிக்கொண்டிருந்த போதே அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் அணை கட்டும் வேலைகளை தீவிரமாக செய்த கேரளா, இப்போது நிலவும் அரசியல் பரபரப்பில் யாரும் இதை கண்டுகொள்ளாததால் எந்த சிக்கலுமின்றி பணிகளை வேகப்படுத்தியுள்ளது.

கூவதூரில் 18 எம் எல் ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவில்லை .. மேலும் பலர் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து ...

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை 18 எம்எல்ஏக்கள் எதிர்த்து வருகின்றனர். நாளைக்கு சட்டசபையில் இந்த 18 பேரும் முதல்வருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடர்ந்து சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 10வது நாளாக இன்றும் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவி ஏற்கும் போது கூவத்தூரில் இருந்து அனைத்து எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். ஆனால் அப்போது 18 எம்எல்ஏக்கள் மட்டும் வரவில்லை. அவர்கள், தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழனிச்சாமிக்கு ஆதரவளிக்க மறுத்து முரண்டு பிடித்து வருகின்றனர்.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்! மூன்று அணிகளும் கடும் போட்டி ..


உ.பி., தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் ஓட்டு சதவீத மாற்றம் வெற்றியை பாதிக்குமா? லக்னோ:ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும், கட்சிகளின் தேர்தல் வெற்றியை பெரிய அளவில் பாதிக்கும் நிலையில், உ.பி., தேர்தல் களம் அமைந்துள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான ஆட்சி நடக்கும், உ.பி.,யில், 403 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்க வுள்ள தேர்தலில், இரண்டு கட்டம் முடிந்துள்ளது. உ.பி., சட்டசபைக்கு, கடந்த இரு முறை நடந்த, தேர்தல் புள்ளி விபரங்களை ஆய்வு செய்யும் போது, ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறிய மாற்றமும், கட்சிகளின் வெற்றி வாய்ப்பில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.தற்போது, ஆளும் சமாஜ்வாதி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜ.,வும் தனியாக தேர்தலை சந்திக்கின்றன.கடந்த, 2007 சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ், 30 சதவீத ஓட்டுகளை பெற்று ஆட்சி அமைத்தது.

தமிழ் மக்களின் நீதி தேவன் மைக்கேல் டி குன்ஹா ! பணம் பதவி அதிகாரம் புகழ் எதற்கும் வளையாத நேர்மையாளன்!

"ஓ கடவுளே... மக்களின் எதிரிகளாக இருப்பவர்களின் துப்பாக்கித் தோட்டாக்களை எதிர்கொள்ளும் வலிமையை எனக்குக் கொடு' -கத்தோலிக்க கிறிஸ்தவர்களான லத்தீன் அமெரிக்க நாட்டவர், ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு எதிரான தங்கள் போராட்டப் பிரார்த்தனையாக இந்த வரிகளை உச்சரிப்பார் கள். இது விடுதலை வேதாகமம் (Liberation Theology)  என்ற கோட் பாட்டை அடிப்படையாகக்  கொண்டது. இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்தான், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்து 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சொத்துகளை அரசுடைமையாக்கியும் 100 கோடி  ரூபாய் அபராதமும் விதித்த பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.கர்நாடக மாநிலம் மங்களூரில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் குடும்பப்பெயர்தான், டி குன்ஹா. ஜான் மைக்கேல் என்பது இவரது பெயர். 12 வயதில் தந்தையை இழந்து, பள்ளி ஆசிரியையான தன் தாயின் எளிய வருமானத்தில் வளர்க்கப்பட்டவர்தான் குன்ஹா. இவருடன் கூடப் பிறந்தவர்கள் 4 சகோதரிகள். "தன்னை மேம்படுத்தி சமுதாயத்துக்கு உதவக்கூடிய கல்வியும், அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளில் வெளிப்படும் நேர்மையான செயல்பாடுகளுமே அசையா சொத்துகள்' என குன்ஹாவுக்கும் அவரது சகோதரிகளுக்கும் அழுத்தமாகப் பதிய வைத்தவர் அவர்களின் அம்மா.

மெரினா எழுச்சி : அடித்தாலும் அடங்காது இது வேறு தமிழ்நாடு.. தோழர் மருதையன்

மெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்
இந்த மாபெரும் மக்கள் எழுச்சியை கண்ணால் பார்ப்பதற்காகவேனும் இன்னும் சில நாட்கள் ஜெயலலிதா வாழ்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. மெரினா எழுச்சியின் நாட்களில், ஜெயலலிதாவின் கல்லறை அங்கு இருப்பதை கடற்கரையே மறந்து விட்டது. “அம்மா இருந்திருந்தால் கிழித்திருப்பார்” என்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசுவதற்குக்கூட ஒரு அடிமையோ கைக்கூலியோ இல்லை. “தமிழகத்தின் சுக துக்கங்கள் அனைத்தையும் நிர்ணயிப்பது தான் மட்டுமே” என்றெண்ணி இறுமாந்திருந்த ஒரு சர்வாதிகாரி, குப்பையைப் போல தமிழ் மக்கள் தன்னை ஒதுக்கித் தள்ளியதைப் பார்க்காமலேயே போய் விட்டாரே என்று நினைக்கையில் கொஞ்சம் வருத்தமாக்தான் இருக்கிறது.
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்தப் போராட்டமே நடந்திருக்காது என்று கருதுவோர் உண்டு. ஏனென்றால், தன்னுடைய தைரியத்திலும் அறிவாற்றலிலும் கருணையிலும்தான் தமிழகம் பிழைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஜெயலலிதா தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார். உண்மை அவ்வாறில்லை. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் சுமார் 25% தமிழகத்தில்தான் நடந்திருக்கின்றன. சென்ற ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சி என்பது சமீபத்திய சான்று.

சசியும் ஜெயாவும் மட்டுமல்ல ! நல்லாட்சி வேண்டும் ஆனால் ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாயும் வேண்டும் ! நீங்கள் உத்தமர்தானா?

Stanley Rajan : சசிகலா அம்மையாரே நீங்கள் இவ்வளவு பணம் சேர்த்தது யாருக்காக? நிச்சயம் தேர்தலுக்க்காக.
வோட்டுக்கு 5 ஆயிரம் வரை கொடுக்க நீங்கள் மன்னார்குடியிலிருந்தா கொண்டுவரமுடியும்? இங்குதான் சுரண்ட முடியும்?  அப்படி மக்களுக்காக சுரண்டி, தேர்தலில் மக்களுக்கே கொடுத்தீர்கள்
மக்களுக்கு 5 ஆயிரம் என்றால், அதன் மேலுள்ள நிர்வாகி எவ்வளவு சுரண்டியிருப்பான், அதற்கு மேல் உள்ளவன் எவ்வளவு அமுக்கியிருப்பான்?
வோட்டுக்கு 15 ஆயிரம் கணக்காகின்றது
அதன் பின் தேர்தல் செலவு, பெட்ரோல் செலவு, பிரியாணி செலவு, விந்தியா செலவு, நமீதா செலவு என எவ்வளவு?
அது போக வைகோ, சீமான், தா.பாண்டியன் என படியளக்க எவ்வளவு?
ஆக நீங்கள் தமிழக மக்களுக்காக ஊழல் செய்து, வோட்டுக்கு 5 ஆயிரம் கொடுக்க ஊழல் செய்து சிக்கியிருக்கின்றீர்கள்
அது அல்லாது உங்களுக்கு எதற்கு இவ்வளவு பணம்??
அதிமுக எனும் மக்கள் இயக்கத்தை ஒரு பன்னாட்டு கம்பெனியாக் நிர்வகிக்கும் பொழுது அதற்கான வருமானத்தை தமிழகத்தில்தானே சுரண்ட முடியும்
அதனைத்தான் நீங்கள் செய்தீர்கள்?
ஆனால் இந்த நன்றிகெட்ட மக்களை கண்டீர்களா? 3 சட்டமன்ற தேர்தல், 7 பாராளுமன்ற தேர்தல், 5 உள்ளாட்சி தேர்தலில் நன்றாக உங்களிடம் வாங்கி செலவழித்துவிட்டு இன்று நீங்கள் சிறைசென்றதற்கு மகிழ்கின்றார்களாம்

பேராசிரியர் : நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் தான் முதல்வர் ஆவார் என பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் எண்ணியிருந்த நிலையில் திடீரென எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என ஓபிஎஸ் தரப்பு நம்பிக்கை தெரிவித்திருக்கும் நிலையில் நாளை மறுநாள் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடியார் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார் இன்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் க.அன்பழகன் கூறியபோது ''நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவளிக்காது. தமிழகத்தின் எதிர்காலம் திமுகவின் வெற்றியைப் பொறுத்தே அமையும்'' என்று கூறினார். வரும் 18-ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், க.அன்பழகனின் இந்தக் கருத்து அரசியல் நோக்கர்களை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.  வெப்துனியா

தேர்தல் ஆணையம் - பன்னீர் அணி பேச்சு ... சசிகலா,எடப்பாடி பழனிசாமி ,தினகரன் பதவிகள் காலி?

ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பி விடுத்ததை அடுத்து ஓ.பி.எஸ் அணி டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசியுள்ளனர். ஏற்கனவே சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து, அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது, என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்நிலையில் இன்று பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி மைத்ரேயன் தலைமையில் அவரது ஆதரவு எம்பிக்கள் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து பேசி உள்ளனர். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறியதாவது:- சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதும் செல்லாது, தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதும் செல்லாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சசிகலா ஆட்சி எம் எல் ஏக்களின் தொகுதிகளில் பன்னீர்செல்வம் வாக்காளர் பேரணி !

சென்னை: மக்கள் விரும்பாத தற்போதைய ஆட்சி தூக்கி எறியப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆதரவை பெறும் வகையில் இன்று முதல் வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பேரணி நடத்துவார்கள் என கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் புனித ஆட்சியை மீண்டும் நிறுவ அவரது ஆன்மாவிடம் ஆசி பெற்றுள்ளதாக கூறினார்.

மெரினாவில் குற்றவாளி ஜெயா சமாதியை உடனே அகற்று ! மக்கள் அதிகாரம்

குற்றவாளிக்கு அரசு மரியாதையா ? மாணவர் எழுச்சியால் தலைநிமிர்ந்த மெரினாவில் இருந்து ஜெயாவின் சமாதியை நீக்குவேம்! 
ஜெயாவின் படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றுவோம்!
ஜெ. சமாதியை அகற்ற கோரிக்கை! மக்கள் அதிகாரம் அமைப்பினர், ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பள்ளி பாட புத்தகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றவும், மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதியை அகற்றவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கிரிமினல் குற்றவாளியை அரசு மரியாதையோடு மெரினாவில் வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் அதிகாரம் போராடும் என்றும் தெரிவித்துள்ளன வினவு

ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் செப் 22 இரவு 10 மணிக்கு .... ஆனால் 7.30 மணிக்கே அதிமுகவினர் அப்போலோவில்! ஏன்? எதற்காக ? எப்படி ?

செப்டம்பர் 22-ம் தேதி, இரவு 10 மணிக்குத்தான், போயஸ் கார்டனில் இருந்து அப்போலோவுக்கு ஜெயலலிதா அழைத்துச் செல்லப் பட்டார். ஆனால், ஏழரை மணிக்கே தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க பிரமுகர் தேவேந்திரன் என்கிற தேவா தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் அப்போலோ முன்பாகக் குவிந்தனர்.
;ஜெயலலிதாவுக்கு உதவியாக அவருடைய வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தனர். ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பிறகு... அந்த இரண்டு பெண்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை இல்லை. வீட்டில் அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது அந்த இரண்டு பெண்களுக்குத்தான் தெரியும். 
 போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு என்ன நடந்தது, அதற்கடுத்து அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களிலும் என்ன நடந்தது என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களில் 73 நாட்கள், அங்கேயே இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். இவர் இப்போது அதிரடியான பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.