lankaenews.com : An Open Letter to the President: Low-Cost Energy Must Remain Sri Lanka’s National Priority (Video)
-On behalf of the LEADS Forum
Sri Lanka’s Energy Policy Stands at a Turning Point
Sri Lanka faces a critical moment in shaping its energy future. The newly drafted National Electricity Policy and Tariff Strategy raises serious concerns,
as it appears to diverge from the objectives set out in the Electricity Act No. 36 of 2024 (as amended).
The Act mandates that the electricity policy align with a comprehensive National Energy Policy;
however, no such overarching framework currently exists.
திங்கள், 23 பிப்ரவரி, 2026
Low-Cost Energy Must Remain Sri Lanka’s National Priority (Video)
முன்னாள் பெண் போராளியின் வாக்குமூலம் .. கேடுகெட்ட புலிகள் இயக்கத்தின் வண்டவாளம்
Arulanandam Arun : இந்த ஒலிப்பதிவில் பேசும் பெண் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். 2008 ஆம் ஆண்டு இறுதி யுத்தக் காலத்தில்,
18 வயது நிரம்பாத சிறுமியாக இருந்த போது,
புலிகளால் அவரது வீட்டிலிருந்து வெள்ளை வானில் பலவந்தமாக கடத்தப்பட்டு
குழந்தைப் போராளியாக மாற்றப்பட்டார். கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர்,
அவர் யுத்தத்தின் முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் அவர் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டார்.
அவர் என்னைத் தொடர்புகொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்தபோது,
நான் பலமுறை கண்ணீர் வடித்தேன். அவர் அனுபவித்த வேதனை,
அவர் எதிர்கொண்ட துயரம், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தைப் பருவம், புலிகளால் நிகழ்த்தப்பட்ட அந்தக் கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
இவை அவரது சாட்சியத்தின் சில பகுதிகள்.
ஆளுக்கு 1 தொகுதியை விட்டுக்கொடுங்க.. தேமுதிகவுக்கு தரணும்.. கூட்டணிக்கு ஸ்டாலின் செக்.. திமுக மூவ்
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
புதிய கட்சிகளுக்கு இடமளிக்கவும், முக்கிய கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளைச் சமாளிக்கவும், கடந்த 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தலா ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்குமாறு திமுக தலைமை தனது கூட்டணிக் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த முக்கியமான அரசியல் நகர்வை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியின் நலன் கருதி திமுக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026
வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கலில் நிலவும் வெறிச்சோடிய தவேக
தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் அரசியல் படியிலேயே சறுக்கலைச் சந்தித்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
"கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்" என்று மார்தட்டிய நிலையில், வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கலில் நிலவும் வெறிச்சோடிய நிலை விஜய்யை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிய நிலையில்,
27+ 1(ராஜ்யசபா).. திமுக- காங். ஒப்பந்தம் இன்று இரவு கையெழுத்து! DMK–Congress Seat Deal 27+1 to Be Signed Tonight
minnambalam.com - Mathi : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு (DMK Congress) 27 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று பிப்ரவரி 22-ந் தேதி இரவு கையெழுத்தாகிறது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் 22-ந் தேதி ஐவர் குழுவை அறிவித்தது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், (கிரிஷ் சோடங்கர்), தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
அதானி மோடி காம்போ ! ரூ. 25,000 கோடி மறைக்கப்பட்ட முதலீடுகள் - உலகையே உலுக்கும் நிதி மோசடிகள்
![]() |
புதுதில்லி, பிப். 21 –
உலகின் மூன்றாவது பெரிய பணக் காரரான - மோடியின் கூட்டுக் கள வாணி நண்பரான கௌதம் அதானி நடத்தும் வணிக சாம்ராஜ்யம் இன்று கடும் சட்ட நெருக்கடி யில் சிக்கியுள்ளது. இத்தாலியின் மிகப்பெரிய வங்கியின் உள்விசாரணையில் ₹25,000 கோடிக்கும் அதிகமான அதானி பங்குகள் ரகசிய மாக இரு மர்ம நபர்களிடம் இருப்பது அம்பலமாகி யுள்ளது. இது வெறும் பங்குச் சந்தை விவகாரம் அல்ல - இந்திய பொருளாதாரத்தையே உலுக்கிய ஊழல் இது.
அதானி குழுமம் என்றால் என்ன?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உருவாக்கிய மைதானத்தில்...
![]() |
Abdul Careem Muhammad Ismail : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உருவாக்கிய மைதானத்தில், தாங்கள் செய்த காரியமென்றுபோல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு விளையாடிக்கொண்டே வெட்கமோ நாணமோ இல்லாமல் பெருமை பேசுகிறார்கள்.
“இந்த மைதானத்தை நாங்கள்தான் உருவாக்கினோம்” என்று கூறுகிறார்கள்.
கிரிக்கெட் விளையாடுகிறார்கள். விளையாடவிடுகிறார்கள்.
அதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூட மாலிமா அரசை பாராட்டியிருப்பதாகும்.
உண்மையில் வேலை செய்தவர் யார் என்பதைத் தெரிந்திருந்தும்,
ஜார்ஜீவா இப்படிப்பட்ட கருத்தை ஏன் வெளியிட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
இலங்கை தோட்டத் தொழிலாளர் ஊதியப் போராட்டம்! தொண்டமான் - நடேச அய்யர்
![]() | ||
|
Badulla Senathiraja : நடேச அய்யர் மற்றும் தொண்டமான் – இலங்கை தோட்டத் தொழிலாளர் ஊதியப் போராட்டம்—
20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இலங்கையின் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் குறைந்த தினக்கூலியே பெற்றனர்.
• 1922 ஆம் ஆண்டு ஆண்களுக்கு தினம் 26 சதம் பெண்களுக்கும் 26 சதம் வழங்கப்பட்டது.
• 1928 ஆம் ஆண்டு ஆண்களுக்கு 54 சதம் பெண்களுக்கு 43 சதம்வழங்கப்பட்டது.
• ஆனால் 1931 ஆம் ஆண்டு முதல் முறையாகக் கூலி குறைக்கப்பட்டது: ஆண்களுக்கு 49 சதம்பெண்களுக்கு 39 சதம்
• 1933 ஆம் ஆண்டு மீண்டும் குறைக்கப்பட்டு ஆண்களுக்கு 46 சதம் பெண்களுக்கு 37 சென்ட் வழங்கப்பட்டது.
• இந்தக் குறைப்பு 1939 ஜூன் 1 வரை தொடர்ந்தது.
இது தோட்டத் தொழிலாளர்களுக்கு மிகவும் துயரமான மற்றும் அநியாயமான நிலைமையாக இருந்தது.
சிலோன் இந்தியன் காங்கிரஸ் அமைப்பு
இந்த காலகட்டத்தில் Mahatma Gandhi இலங்கைக்கு விஜயம் செய்து பல இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களில் ஒருவர் Savumiamoorthy Thondaman.
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், அவர்கள் இணைந்து 1939 ஆகஸ்ட் மாதத்தில் Ceylon Indian Congress அமைப்பை உருவாக்கினர்.
1940 ஆம் ஆண்டு இந்த அமைப்பிற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. தொண்டமான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்பளையில் 100,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.
போராட்டங்களும் அமைதியான எதிர்ப்பும் தொடர்ந்து, 1941 பிப்ரவரி 1 அன்று கூலி உயர்வு கிடைத்தது:
• ஆண்களுக்கு தினம் 54 சதம்
• பெண்களுக்கு தினம் 43 சதம்
இது தொழிலாளர் சங்கத்திற்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
சனி, 21 பிப்ரவரி, 2026
உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள்? புதிய சிக்கலில் திமுக கூட்டணி?
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக உள்பட சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை தனிசின்னத்தில் நிறுத்தாமல் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்த திமுக தலைமை தயாராகி வருகிறது. இது கூட்டணி கட்சிகளை சிக்கலை ஏற்படுத்த உள்ளது. அதாவது திமுகவின் இந்த முடிவால் அந்த கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றால் கூட்டணி கட்சியினர் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
“அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீதம் வரி- அதிபர் டிரம்ப் அறிவிப்பு
மாலைமலர் : “அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” திறப்பு
திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைப்பு
minnambalam.com -Pandeeswari Gurusamy : திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இன்று (பிப்ரவரி 21) திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டி உருவாக்கியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ராகுலின் திமுக ஒவ்வாமை? பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்!
tamil.oneindia.com பொறுத்துப் பார்த்த திமுக.. அந்த 2 பேரால் பொங்கி எழுந்த ஸ்டாலின்! ராகுல் காந்திக்கு சீக்ரெட் மெசேஜ்?
தமிழக அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு இப்போது ஒரு நெருப்பு வளையத்திற்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றுகிறது.. காரணம் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இழுபறியில் உள்ளது.. இரு கட்சிகளிடையே இணக்கமான போக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.. தேமுதிகவும் கூட்டணிக்குள் வந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் நிலைமை தெரியவில்லை.. என்னதான் நடக்கிறது கூட்டணியில்?
பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான "கிச்சன் கேபினட்" நட்பு இப்போது கசக்கத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.. கடந்த கால தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டின்போது முதல் ஆளாக வந்து கைகுலுக்கும் காங்கிரஸ், இந்த முறை இழுபறியில் நிற்பது அரசியல் நோக்கர்களை புருவம் உயர்த்தச் செய்துள்ளது..
தமிழ்நாடு இன்னொரு ஐரோப்பிய நாடு? புள்ளி விபரங்கள் கூறுவதென்ன?
Vimalaadhithan Mani : ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட கழக ஆட்சிகளில் கடந்த 50 வருடங்களில் தமிழ்நாடு முன்னேறவே இல்லை என்று ஒரு பச்சை பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது.
பல்துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி மத்தியில் ஆளும் காவி அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) கொடுத்து இருக்கும் கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள்:
*உயர் கல்வி*
பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.
*கல்வி நிலையங்களின் தரம்*
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,
*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*
திமுக ஐ டி விங் ( DMK ITWing ) சரியாக இயங்குகிறதா? ஒரு எக்ஸ்ரே பார்வை
Vasugi Lakshmanan · DMK ITWing இடம் பகிரங்க மன்னிப்பைக் கோருகிறேன்!
சில வாரங்களுக்கு முன்பு திமுக ஐடி விங் முகநூலில் அபத்தமான பிழைகளோடு அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் வந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டிருந்தேன்!
செய்திக்குப் பொருத்தமான ஹேஷ்டேக்ஸ் கூட போடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அதன் தலைமைப் பொறுப்பில் உள்ள (நியூஸ் 18இல் என்னுடன் பணியாற்றிய) ஒருவருக்கு டிஜிட்டல் மீடியா பற்றி தெரியாததால்தான் அப்படியெல்லாம் நேர்வதாகக் கருதி அந்தக் குழுவுக்கு நான் வேண்டுமானால் பயிற்சியளிக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தேன்.
அனைத்துக் கட்சி சமூக ஊடகங்களையும் பின் தொடரும் நான், //என்னவோ மணிப்பூரில் வாழ்வது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தவெக நாளொன்றுக்கு நான்கு செய்திக் கதைகளை திரித்து உருவாக்கிப் பகிரும் நிலையில், திமுகவின் whatsapp சேனலில் சில நாட்கள் வெறும் திருக்குறள் பதிவதோடு நின்று விடுகிறார்கள் என்றும் குறை கூறியிருந்தேன்!
வெள்ளி, 20 பிப்ரவரி, 2026
முதல்வர் ஸ்டாலினின் 4 பேர் டீம்! எதிர்கட்சிகளளை காயவிட்டு கணக்குகளை புரட்டி போட்ட அந்த விடயங்கள்
tamil.oneindia.com ஸ்டாலினின் 4 பேர் டீம்.. மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த.. அந்த யோசனை வந்தது எப்படி?
தமிழக அரசியலில் அடுத்த இரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது வேகத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மக்களை கவரும் பல்வேறு நிதிச் சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது.
முக்கியமாக தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகத்தின் மிக முக்கியமான வாக்கு வங்கியான பெண் வாக்காளர்களின் மனங்களை வெல்லும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய அதிரடியைத் தொடங்கியுள்ளார்.
ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள்
கடந்த மாதம் பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
காங்-ஐ கதறவிட்ட ஸ்டாலின்! கதர் கட்சியில் வெடித்த மோதல்! கப்சிப் ஆன ’கை’ - Election Exclusive: ஓவர் வாய் உடம்புக்கு ஆகாது
tamil.oneindia.com -Rajkumar R : சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம். அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது
தேமுதிக. திமுக கூட்டணியில் தேமுதிக வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட இந்த தேர்தலில் குறைவாக இடங்கள் ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
சில காங்., நிர்வாகிகள் திமுகவுக்கு எதிராக பேசியதால்தான் கோபப்பட்டு ஸ்டாலின் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்து வந்து விட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்குள் மோதல் எழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி அமைப்புகள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக தேமுதிக எந்த அணியில் சேரும் என்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக இருந்தது.
ஓ .பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு - பொறுமையாக இருங்க நல்லதே நடக்கும் உறுதியளித்த ஸ்டாலின்
இணைய விருப்பம் தெரிவிக்கிறார்
முதல்வர் சொல்கிறார்
அவசரப்படாதீங்க ஓபி
நீங்க முதல்வரா இருந்திருக்கீங்க
கட்சியில முக்கியமான இடத்துல இருந்திருக்கீங்க
பொறுமையா இருங்க நல்லதே நடக்கும் என்கிறார்
நாகரிகத்தின் உருவம் முதத்துவேல் கலைஞர் ஸ்டாலின்
மின்னம்பலம் - Kavi : முதல்வர் ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவருடன் சென்ற ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக பிரிந்து மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர்.
இந்தசூழலில், யாருடன் செல்வது என தொடர்ந்து ஓபிஎஸ் ஆலோசித்து வந்தார்.
ஆண்டாள் அழகர் கல்லூரி முதல் அண்ணா அறிவாலயம் வரை..
tamil.oneindia : ஆண்டாள் அழகர் கல்லூரி முதல் அண்ணா அறிவாலயம் வரை.. திமுக - தேமுதிக இடையில் உறவு உருவானது இப்படிதான்!
21 ஆண்டு கால தேமுதிக அரசியல் வரலாற்றில், முதல்முறையாக திமுக உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் இந்த முடிவுக்கு பின் பல்வேறு சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் முதல்முறையாக தேமுதிக இணைந்துள்ளது. 2011 தொடங்கி 2019 வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக தரப்பில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கொண்டே இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போது விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுத வீடியோ திமுகவினரையும் கலங்க செய்தது.
தேமுதிக கூட்டணி
இதனை மனதில் வைத்து தான் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது ஸ்டாலின் கூட்டணிக்கு அழைத்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் செய்த சில செயல்கள் திமுகவை கொந்தளிக்க வைத்தது. இதன்பின் விஜயகாந்த் மறைவின் போது யாரும் கேட்காமலேயே அவருக்கு அரசு மரியாதை வழங்கி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த திமுக பணிகளை செய்து கொடுத்தது.
தேமுதிக 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணிக்கே ஆதரவாக உள்ளனர்!
![]() |
vikatan.com : தலைமையகத்தில் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய போதே 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றே ஓட்டு போட்டோம். - தேமுதிக நிர்வாகிகள்
அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று 'அன்புச் சகோதரி' என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தேமுதிக என்.டி.ஏவுக்குள் வருமென்ற எதிர்பார்ப்பில் இருந்த பாஜக 'கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா?' என பொங்கிக் கொண்டிருக்கிறது. தேமுதிக கட்சிக்காரர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய சில மா.செக்களிடம் தொடர்புகொண்டு பேசினோம்.
'10 வருசமா அமையாத கூட்டணி இப்போ அமைஞ்சிருக்கு' என குஷியாகப் பேசத் தொடங்கினார், தென் மாவட்ட நிர்வாகி ஒருவர். 'எடப்பாடியும் பாஜக-வும் எங்களுக்கு துரோகம் மட்டுமேதான் பண்ணியிருக்காங்க. 2011 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கேப்டன்தான் காரணமாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா எங்களின் கட்சியை கபளீகரம் செய்தார்.
ஸ்டாலினிடம் பேசிய சோனியா.. அறிவாலயத்தில் பிரேமலதா..
மின்னம்பலம் - Mathi : , ”க்ளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேறுகின்றன” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது
ஏகப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகளா?
ம்ம்..அப்படியும் சொல்லலாம்.. இன்னைக்கு அண்ணா அறிவாலயத்துல ஸ்டாலினை பிரேமலதா சந்திச்சு திமுக கூட்டணியில தேமுதிக இடம் பெறுவதை உறுதி செஞ்சு பிரஸ் மீட்டுல அறிவிச்சதுதான் ஹாட் டாபிக்.
திமுக கூட்டணியில சேர்ந்துட்டோம்னு அறிவிச்ச பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்துக்கு போய் விஜயகாந்துக்கு ராசியான நம்பரான 5-ஐ குறிக்கும் வகையில அங்க கட்டியிருந்த பெரிய மணியை 5 டைம் அடிச்சு மரியாதை செலுத்திட்டு அங்கேயும் பிரஸ் மீட் கொடுத்துட்டு, ‘தொகுதி விவகாரங்களை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பாரு’ன்னு சொல்லி இருக்காங்க.
சட்டப்பேரவையில சிஎம் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன் காரசார வாக்குவாதம்னு அனல் பறந்தாலும் திமுக அமைச்சர்கள்கிட்ட, எம்.எல்.ஏக்கள்கிட்ட மெஜாரிட்டியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவலையாக கேட்டது எல்லாம், “தேமுதிக வந்துருச்சு.. எங்களை கழற்றிவிடுறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்களா”?” என்கிற கேள்வியைத்தான்.
இலங்கை எம்பிக்களுக்கு கொடுப்பனவு தோராயமாக ஐந்தரை லட்சம் ரூபா....
Kalmunaitoday : MP ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை கொடுப்பனவுகள்
பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று அதனை - நாடாளுமன்றில் தெரியப்படுத்தியிருக்கிறார்.
கணக்கை பார்போம் வாருங்கள்;
👉சம்பளம் - 54,285/=
👉பொழுது போக்கு கொடுப்பனவு 1000/=
👉சாரதிக் கொடுப்பனவு - 3500/= (அல்லது சாரதி வழங்கப்படுவார்).
👉தொலைபேசிக் கொடுப்பனவு - 50,000/=
👉போக்குவரத்து - 15,000/=
👉அலுவலக கொடுப்பனவு - 100,000/=
👉சபை அமர்வு ஒன்றுக்கு - 2500/=
👉அமர்வு இல்லாத நாளில் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டால் - 2500/=
👉எரிபொருள் கொடுப்பனவு - தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவருக்கு 419.76 லீட்டர் டீசல் கிடைக்கிறது.
வியாழன், 19 பிப்ரவரி, 2026
திமுக கூட்டணியில் தேமுதிக - ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு
hindutamil.in அனலி : சென்னை: வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.19) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது.
வாச்சாத்தி: தமிழ்நாட்டை உலுக்கிய வன்கொடுமை வழக்கு; நீதிபதி நேரில் ஆய்வு - நடந்தது என்ன?
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில், 1992, தமிழக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையால், பழங்குடியின மக்கள்மீது நடத்தப்பட்ட வன்கொடுமை, தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. ‘வீரப்பனுக்கு வாச்சாத்தி மக்கள் உதவுகின்றனர். சந்தன மரக்கட்டைகளைக் கடத்துகின்றனர்,’ எனக் கூறிய வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் 1992, ஜூன் 20-ம் தேதி வாச்சாத்தி கிராமத்தை முற்றிலுமாகச் சுற்றிவளைத்து, வன்முறையைக் கட்டவிழ்த்தனர்.
வழக்கு தொடர்ந்த மக்கள்!
‘‘தங்கள் வீடுகளை வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் சூறையாடினர், குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், 13 வயது சிறுமி உட்பட, 18 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சந்தன மரங்கள் கடத்தியதாகப் பொய் வழக்கு பதிந்தனர்’’ எனக் கூறி, வாச்சாத்தி கிராம மக்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மா.கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து வழக்கு பதிவுசெய்திருந்தனர்.
18.02.1992 - கும்பகோணம் மகாமக நிகழ்வில் உயிரிழந்த மக்களுக்கு நினைவஞ்சலி
![]() |
Giri Sundar : தமிழ்நாட்டை ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று.
18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்..
கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா.
கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது.
ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக ஜெயலலிதா முதல்வராகி இருந்த காலகட்டம்.
30 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடி நீராடி செல்கிற ஒரு இடத்தில், முதல்வராக இருப்பவர் கலந்து கொண்டால், மக்களுக்கு என்னென்ன அசௌகர்யங்களையும், ஆபத்துகளையும் அது ஏற்படுத்தும் என ஆராயாமல்.. கணக்கில் கொள்ளாமல்..
முடிவெடுத்த ஸ்டாலின்... தலையிட்ட கனிமொழி... திமுக-காங்கிரஸ் கூட்டணி?
Krithika Tharan : தூக்கம் வரல.
இன்பாக்சில் ஒரு நட்பு, “ஏன் நாளை துணை முதல்வர் கையால் விருது”ன்னு பரபரன்னு இருக்கிங்களான்னு. இல்லை,
தமிழ்நாட்டைச் சுற்றி நடக்கும் யூகங்கள் கவலை தருது. என்னதான் தைரியமா பேசினாலும் அடி ஆழத்தில் ஒரு கவலை.
வெளியில் லாபி செய்யும் பலர் எப்படி நம்ப வச்சுருக்காங்க எனில்,
திமுக மிகுந்த பவரில் உள்ளது. அவர்களை அசைக்க முடியாது. இங்கிருந்து பிஜேபியை காலி செய்யணும்னா நம்பர் டூ இடத்துக்கு வரணும்.
அப்ப தவெகுடன் கூட்டணி நல்லது என்று தலையை கழுவி வச்சுருக்காங்க.
இதை ஒரு சமூக ஆர்வலரே சந்தோஷமா பெங்களூரில் என்னிடம் பகிர, அதிர்ச்சி ஆனேன்.
காங்கிரஸ் திமுக தொண்டர்கள் பிரிந்து விட்டனர் பாஜகவின் தந்திரம் பலித்து விட்டது
ராதா மனோகர் : முழு இந்தியாவுமே ராகுலை இந்திய பிரதமராக ஏற்றுக்கொள்ள தயங்கிய போது,
ராகுல் காந்திதான் நமது பிரதமர் வேட்பாளர் என்று ஓங்கி குரல் கொடுத்து தூக்கி வைத்தவர்
முதல்வர் ஸ்டாலின்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பின்புதான் அகில இந்திய ரீதியில் திரு ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு உரியவர்தான் என்ற கருத்து உறுதியானது.
அதுவரை எதிர்க்கட்சிகளின் முகாமில் எல்லோராலும் ஏற்று கொள்ளகூடியாய் பிரதமர் என்று ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை.
மம்தா பானர்ஜி போன்ற பலரின் பெயர்கள் அடிபட்டாலும் ராகுல் பெயரை ஸ்டாலின் முன்மொழிந்த பின்பு எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கட்சி பேதங்களை கடந்து முழுத்தமிழ்நாடும் இதை வரவேற்றது என்றால் அது மிகையில்லை.
அந்த நம்பிக்கையை அந்த அங்கீகாரத்தை இவ்வளவு விரைவில் திரு ராகுல் காந்தி இழப்பாரா என்பது இந்த நிமிடம் வரை பதில் இல்லாத வெறும் கேள்வியாகவே நீடிக்கிறது
இந்த நீண்ட மௌனம் .. திரு ராகுல் மீது தமிழர்கள் வைத்த நம்பிக்கையை நிதானமாக ஆனால் நிச்சயமாக தகர்க்கிறது.
ஏறக்குறைய இதே போன்றதொரு நிலைதான் பிகார் சட்டமன்ற தேர்தலிலும் நடந்தது.
விஜயுடன் காங்கிரஸ் இணைகிறதா? கூட்டணியில் திமுகவுக்கு ஆபத்து?குருமூர்த்தி பரபரப்பு பேச்சு!
tamil.samayam.com :தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
இந்த சூழலில், கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் அதிகார பகிர்வு மற்றும் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் குரல் எழுப்பி உள்ளது.
புதன், 18 பிப்ரவரி, 2026
இளையராஜா உரிமை கோர முடியாத 134 படங்களின் பாடல்கள் - அன்னக்கிளியே சொந்தமில்லை1
'சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது' என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடை விதித்தது.
இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள பிரபல 15 பாடல்கள்
1. செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே
2. என் கண்மணி உன் காதலி
3. கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ
4. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
5. ஆகாய கங்கை... பொன்தேன் மலர் சோலை
6. மலர்களில் ஆடும் இளமை புதுமையே
அக்கா மானமே போச்சு, அவனை சும்மா விட்றாதே! சேலம் ஆசிரியையின் 4 பக்க ஆங்கில லட்டரில் உருக்கமான ரகசியம்
இந்நிலையில், சண்முகப்பிரியா தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதம், அவரது குடும்பத்தையே உலுக்கி போட்டுள்ளது..
சேலத்தை சேர்ந்த 22 வயது சண்முகப்பிரியா, கல்லூரியில் படிக்கும்போது கௌதம் என்பரை காதலித்துள்ளார்.. ஆனால் கௌதமின் தவறான நடத்தையினால் சண்முகப்பிரியா முறித்துக் கொண்டுள்ளார்.
100 கோடிகளுக்கு எங்கே போவோம்? அமைச்சர்கள் அலறல்
tamil.asianetnews.com : ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி... ஸ்டாலின் பிரித்த ஏ-பி-சி கேட்டகிரி... அலறி ஓடும் அமைச்சர்கள்..!
அமைச்சர்களுக்கு ஏகத்துக்கும் வலுவான அசைன்மென்ட்கள் கொடுக்கப்பட, அமைச்சர்களோ அலறி அடித்து ஓடுவதாக வரும் தகவல்தான் அறிவாலயத்தில் உச்சம் எடுத்திருக்கும் பட்டுவாடா பஞ்சாயத்து.- திமுகவின் வைட்டமின் அரசியல்
அமைச்சர்களுக்கு அசைன்மென்ட்
அதனால்தான் இந்த தேர்தல் செலவுகளுக்கான அமைச்சர்களை முழுமூச்சாக களத்தில் இறக்கும் பிடிப்புக்கு வந்திருக்கிறது தலைமை. வரக்கூடிய தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற மிக நேர்த்தியாக செலவு செய்தால் ரூ.8 கோடிகள் வரை தேவைப்படும் என்றும் 30 சதவிகித வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தால் 10 கோடி தேவை என்றும் தலைமை கணக்கிட்டு இருக்கிறது. அதற்கு மேல் அவரவர் தகுதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். ஆனால், அமைச்சர்கள் தரப்பிலும் தங்களின் சொந்த வெற்றிக்காக ஒரு தொகுதிக்கு 20 கோடிகள் வரை தாராளமாக செலவு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.
செவ்வாய், 17 பிப்ரவரி, 2026
திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதி? ஸ்டாலினின் வியூகம் என்ன? 4 நாளில் பேச்சை தொடங்கும் குழு
tamil.oneindia.com -Nantha Kumar R : சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் வரை நடந்த ஆலோசனையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக காய்களை நகர்த்தி வருகிறது. திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் ரத்து? மோடி பேட்டியில் அதிர்ச்சி அறிவிப்பு!
tamil.oneindia.com - Vigneshkumar : என்டிஏ ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் ரத்து? மோடி சொன்ன வார்த்தை
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது மகளிர் இலவசமாகப் பேருந்துகளில் பயணிக்க விடியல் பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடி பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத்திற்கு எதிராகப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் அதிமுக- பாஜக வென்றால் விடியல் பயணம் நிறுத்தப்படும் என்றும் தகவல் பரவி வருகிறது.
திமுக- காங்கிரஸ் உறவு முறிந்தால் என்ன நடக்கும்? ’துக்ளக்’ குருமூர்த்தியின் ஆரூடம்!
மின்னம்பலம் - Mathi : திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ’துக்ளக்’ எஸ். குருமூர்த்தி தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில்,
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவிர்க்க முடியாதபடி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் இருந்து திமுக வெளியேற்றப்படும்.
ஆனால் விஜய்யின் தவெக வெற்றி பெறாது; பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.
டெல்லியில் மோடிக்கு எதிராக இருந்த மிகவும் நம்பகமான கூட்டாளியை (திமுக) ராகுல் காந்தி இழந்து விடுவார்.
காங்கிரஸ் எதிரியாக மாறினால், ராகுலை ஆதரித்து நின்ற திமுகவின் நிலைப்பாடு முட்டாள்தனமானதாகி விடும்.
டெல்லியில் காங்கிரஸுக்கு திமுக தேவை; தமிழ்நாட்டில் திமுகவுக்கு காங்கிரஸ் தேவை.
திங்கள், 16 பிப்ரவரி, 2026
ஆதங்கத்தை கொட்டிய ப.சி.. அமைதியான சோனியா- கார்கே.. பற்ற வைக்கும் ராகுல்- பிரியங்கா..
மின்னம்பலம் - மதி : வைஃபை ஆன் செய்ததும், ”எல்லா டீமுமே பைனலுக்குள் நுழைந்துவிட்டன” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா டி20 ஜூரம் இன்னும் போகலையே..
நமக்கு என்னய்யா டி20 ஜூரம்.. எலக்ஷன் தேதி அறிவிக்க போறாங்க.. கூட்டணிகளை எல்லாம் பைனல் செய்யுற நேரம் வந்துருச்சுன்னு சொல்றேன்…
ஆனா நடக்குறதை எல்லாம் பார்த்தா அப்படியா தெரியுதுய்யா?
புரியது.. திமுக கூட்டணியில காங்கிரஸ் கட்சியோட மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து பேசிகிட்டு இருக்காங்கன்னுதானே சொல்றீரு..
காங்கிரஸ் மீண்டும் திமுகவின் முதுகில் குத்தி விட்டது? ஏமாற்றி விட்டார் ராகுல்?
tamil.oneindia.com - Shyamsundar : மம்தா, கெஜ்ரிவாலை எதிர்த்து.. ராகுலுக்காக நின்ற ஸ்டாலின்.. பதிலுக்கு சீண்டி பார்க்கும் காங்கிரஸ்!
சென்னை: கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையேயான அரசியல் நட்பு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அஸ்திவாரமாக இருந்து வருகிறது. 2019 மற்றும் 2024 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும், அகில இந்திய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த முதல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்கத் தயங்கியபோதும், "ராகுல் தான் என் சகோதரர்" என்று கூறி ஸ்டாலின் உறுதியாக நின்றார். ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த "சகோதர பாசம்" கடும் சோதனையைச் சந்தித்து வருகிறது.
ராகுல்காந்தியின் மவுனம் - தமிழ்நாட்டுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் ஆகிவிடுவார்?
Giri Sundar : தமிழ்நாட்டுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் ராகுல்???
2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்சின் அப்போதைய மாநிலதலைவர் கிருஷ்ணசாமி, ஆரணி தொகுதியில் போட்டியிட்டார். களநிலவரம் குறித்து சர்வே எடுத்தோம், செஞ்சிகோட்டையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் ஒருகிராமத்தில் ஒரு 45 வயது பெண்மணியிடம் பேசியபோது, அவருக்கு தெரிந்தது இரண்டு சின்னம் தான் ஒன்று உதயசூரியன், மற்றொன்று இரட்டை இலை. காங்கிரஸ் பத்தி தெரிந்ததே தவிர அதன் சின்னம் கூட தெரியவில்லை. சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட கட்சி, சுதந்திரத்துக்கு பின்பு 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்த கட்சி, அந்த தேர்தலின்போது ஒன்றியத்தில் ஆளும்கட்சியாக இருந்த கட்சியின் சின்னம் குறித்து தெரியவில்லை. எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. பல கிராமங்களில் பயணம் செய்தபோது காங்கிரஸ் கட்சின் ஒன்று இருக்கான்னு கேட்டவர்கள் பலர்.
இத்தனைக்கும் அதே தொகுதியில் ஏற்கனவே ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுயிருந்தார் காங்கிரஸ் கிருஷ்ணசாமி.
சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல! அது ஒரு coding மட்டுமே! ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு!
ராதா மனோகர் : சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு அது ஒரு coding மட்டுமே!
சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!
ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்:
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து., ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள், ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் , ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! .
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026
நெடுந்தீவில் இனி மக்கள் வாழ மாட்டார்களா? வேறு இடங்களுக்கு குடிபெயர்வார்களா?
Thapes Vlogger is at Delft Island நெடுந்தீவு. : Jaffna, Sri Lanka
வருங்காலங்களில் நெடுந்தீவில் மக்கள் வாழ்வார்களா..??
நெடுந்தீவில் வருங்காலத்தில் மக்கள் வாழமுடியாமல் வேறு இடங்களுக்கு குடிபெயரலாம்…
எனது காணொளிகளில் நெடுந்தீவின் சுற்றுலா தொடர்பான ஒரு பக்கத்தை மட்டுமே காட்டினேன்..
ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலை என்ன..??
யாழின் பெருநிலப்பரப்போடு ஒப்பிடும் பொழுது அன்றாட வாழ்க்கை மிகக் கடினமானது..
1970-80 களில் இந்த தீவில் 20-25ஆயிரம் அளவிலான மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது இங்கு வாழ்பவர்கள் வெறும் 3500 அளவிலான மக்களே..
மீண்டும் உடையும் காங்.,? TMC 2.0? மூப்பனாரும்.. ப.சிதம்பரமும் - வரலாறு திரும்புகிறது?
tamil.oneindia.com -Rajkumar R : சென்னை: தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி சேர இருப்பதாக சமீப காலமாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலாவி வருகின்றன.
ஆனால் திமுகவுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்தி வரும் முக்கிய தலைவர்களும் எம்எல்ஏக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும்,
புதிய கட்சியை தொடங்கலாமா என்ற திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக அரசியலில் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து புதிய அணிகள் உருவாவது ஒன்றும் புதிது அல்ல.
1996ல் ஜிகே மூப்பனாரும், 2001ல் ப.சிதம்பரமும் காங்கிரஸிலிருந்து புதிய கட்சிகளை ஆரம்பித்து மீண்டும் இணைந்து இருக்கின்றனர். இதனால் 20260 டிஎம்சி 2.0 உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
'ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் வேண்டும்' - மதுரை காங். கூட்டத்தில் அதிரடி தீர்மானம்
hindutamil.in - கி.மகாராஜன் : மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் வழங்க வேண்டும் என மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும், உள்ளாட்சி இடங்களில் 30 சதவீத பங்கு வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் கோரிக்கையாகும். அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய தலைவர் கார்கேவை கேட்டுக்கொள்கிறோம்.
ஊரை அடிச்சு அம்பானிக்கும் அதானிக்கும் கொடுக்கலாம் - மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பதுதான் தப்பு?
M. S Rajagopal : என்ன அநியாயம் சார் ...யார் வீட்டு பணம் இப்படி வாரி விடுறாங்க?
5,000 எதுக்கு வந்து ஒருத்தருடைய அக்கவுண்ட்ல போடணும் !
அதுவும் ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு ?
ஏற்கனவே 9 லட்சம் கடன்.... இதுல இன்னும் நிறைய வாரி விடுறாங்க...
இதுக்கெல்லாம் என்ன காரணம் நினைக்கிறீங்க ?
ஒண்ணு ஜெயிக்கணும்.. ஜெயிச்சு வந்தா நாம சம்பாதிக்கலாம் ... தோற்றுப் போனா வர்றவன் பாத்துக்கட்டும்.. அதானே !
நாமெல்லாம் உண்மையிலேயே இதையெல்லாம் எதுத்து கேட்கணும் சார் !
நான் : "இப்ப எண்ணூர் துறைமுகம் இருக்குல்ல.. அதை லீசுக்கு விட்டால் என்ன மதிப்பு வரும் ? அதானிக்கு எவ்வளவு ரூபாய்க்கு கொடுத்திருக்காங்க? பக்கத்தில் 300 ஏக்கர் நிலம் 99 வருஷம் லீசுக்கு கொடுத்திருக்காங்க !
தமிழன் டிவி 23 ஆண்டுகள் - ஒரு தலைமுறையின் நினைவுகளும், ஆரம்ப கனவுகளும் சேர்ந்த கால அளவு..!
![]() |
Hemavandana : தமிழன் டிவி 24ம் ஆண்டில் நுழைகிறது..!
23 ஆண்டுகள் என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல.. அது ஒரு தலைமுறையின் நினைவுகளும், பலரின் ஆரம்ப கனவுகளும் சேர்ந்த கால அளவு..!
ஊடகத் துறையில் ஒரு நிறுவனம் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமானதல்ல...!
இந்த நெடிய பயணத்தின் தொடக்கப் புள்ளியில், 24 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை, மறைந்த தோழர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்கள் முதன்மையானவராக இருந்து இதனைத் தோற்றுவித்தார் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும்..!
ஆரம்ப காலத்தில் தோழர் திருமாவளவன் போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் வருகையும், உரையாடல்களும் இந்த மேடைக்கு ஒரு கருத்தியல் பரிமாணத்தை உருவாக்கி, அதன் அடித்தளத்தை வலுப்படுத்தியதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டி உள்ளது..!!
இசையமைப்பாளர் சலீல் சவுத்திரி வங்கத்தில் இருந்து வந்த இசைப்புயல்
ராதா மனோகர் : இசையமைப்பாளர் சலீல் சௌத்திரி இசையில் காலத்தை வென்ற பெங்காலி பாடல் இது.
இதை ஹிந்தியிலும் சலீல் சவுத்திரி அவர்களே இசையமைத்துள்ளார்.
பலருக்கு இது பெங்காலி பாடல் என்று கூட தெரியாது . அந்த அளவுக்கு இது ஹிந்தியில் பட்டிதொட்டி எல்லாம் ஊடுருவிய பாட்டு
ஒரு காதல் பிரிவு சோகத்தை இந்த பாடலில் அப்படியே வாழ்ந்து காட்டி உள்ளார் சலீல் சவுத்திரி அவர்கள்.
இந்துஸ்தானி பைரவ் ராகத்தில் அமைந்த பாடல் இது
நாற்பதுகளில் வங்காளத்தில் நிலவிய கொடுமையான பஞ்சத்தில் வாழ்ந்து அதில் இருந்து தப்பி பிழைத்த ஒரு மகான் இவர்.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை!
சென்னை கொடுங்கையூரில் 2023ல் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியையும், பாஜக நிர்வாகி குஷ்புவையும் இழிவாக பேசியிருந்தார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சனி, 14 பிப்ரவரி, 2026
தமிழக அரசு தர சான்றிதழும் - இந்திய ஒன்றிய தர சான்றிதழும்
ராதா மனோகர் : இந்திய அரசு தர சான்றிதழும் - தமிழக அரசு தர சான்றிதழும்
வட இந்திய சங்கிகளின் கலப்பட கலாச்சாரத்தால் இந்திய மளிகை பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பயப்படுகிறார்கள்
அந்த அளவுக்கு எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்.
உடலுக்கு மிக மோசமான விளைவுகளை உண்டாக்க கூடிய பல வேதிப்பொருட்களை கொஞ்சம் கூட குற்ற உணர்வோ சட்டத்தை பற்றிய பயமோ இன்றி கலக்கிறார்கள்.
என்னென்னெ பொருட்களில் எதை எதையெல்லாம் கலக்கிறார்கள் என்பதை விபரமாக எழுதினால் மக்கள் மேலும் பயந்து விடுவார்கள்.
இந்திய மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்திய மளிகை பொருட்களை வாங்குவதை தவிர்க்கிறார்கள்
இதில் உண்மையிலேய மிக மோசமாக பாதிக்க படுபவர்கள் நேர்மையான முறையில் மளிகை பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள்தான்.
இவர்கள் பெரும்பாலும் தமிழக உற்பத்தியாளர்கள்தான்.
சென்னையில் நாய்கள் - பதிவு தடுப்பூசி! அமலுக்கு வந்த புதிய விதி... வீடு வீடாக சோதனை - தவறினால் ரூ.5000 அபராதம்...
tamil.news18.com : இதுவரை 74 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே உரிமம், தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய் மேலாண்மை மற்றும் ரேபீஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் பெறுதல் போன்ற செயல்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய் மேலாண்மை மற்றும் ரேபீஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
நடிகர் விஜய் தனித்து போட்டி .. கூட்டணி கிடையாது இந்தியா டுடேக்கு பேட்டி
சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று (பிப்ரவரி 13) சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் சூரஜ் உயிரிழந்தார். இதுதொடர்பான கேள்விக்கு சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
இந்தநிலையில், செய்தியாளர்களுடன் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்கள் வாகனத்தின் மீது ஏறியும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தவெகவினரின் வாகனத்தை செய்தியாளார்கள் முற்றுகையிட்டனர்.
“மகளிருக்கு ரூ.5,000 ‘இன்ப அதிர்ச்சி’ ஏன்?” - அமைச்சர் ரகுபதி விளக்கம்
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் இம்மாதம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி முதல்வர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நாங்கள் இந்தத் திட்டத்தை அறிவித்துவிட்டு செய்தோம் என்றால், உடனே நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு வாங்கி விடுவார்கள். இதனால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்காமல் போய்விடும். எனவேதான் அதற்கு முன்னதாகவே காலையிலேயே முதல்வர் இதை அறிவித்தார்.
பீஹார் 72 பார்ப்பன RSS ரவுடிகள் தலித் மக்கள் மீது கொடூர தாக்குதல்
சித்தி ரஹ்மான் கனி : 72.பார்பன்ன ரவுடிகள்!
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் ஹரி நகர் கிராமத்தில் வசித்து வருபவர் அபர்ப்வீ பாஸ்வான்...!!
இவருடைய மகன் விக்ரம் பாசுவான், ஹேம்கன்ட் என்ற பார்ப்பனரிடம் கூலி வேலை செய்து வந்தார்...!!
கடந்த ஐந்து வருடங்களாக ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தொகுதி செயலாளர் பார்ப்பனர் ஹேம்கண்ட் தலித் தொழிலாளர்கள் யாருக்கும் சம்பளம் கொடுக்கவில்லை...!!
இது பற்றி கேள்வி எழுப்பியதற்கு.. தலித் பன்றிகளுக்கு எதற்கு சம்பளம் என்பது போன்ற தரைக்குறைவான வார்த்தைகளை கூறி அவமானப்படுத்தினார்...!!
இதில் கோபமடைந்த ஹரிநகர் கிராம தலித் மக்கள் அவரிடம் வேலை பார்க்க மறுத்துவிட்டனர். ..!!
வியாழன், 12 பிப்ரவரி, 2026
2500 கோடி ரூபாய் 'Alliance Orchid springs' ஊழல் - படித்த முட்டாள்களா? இல்லை திட்டமிட்ட கொள்ளையா?
Vasu Sumathi : படித்த முட்டாள்களா? இல்லை திட்டமிட்ட கொள்ளையா? 2500 கோடி ரூபாய் 'Alliance Orchid springs' ஊழல் - ஒரு பகீர் சம்பவம்
சென்னை கொரட்டூரில் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் 2036 வீடுகள்.. இன்று அதன் மதிப்பு இன்று வெறும் 'பூஜ்ஜியம்'!
மெத்தப் படித்தவர்கள் கூட எப்படி இவ்வளவு பெரிய மோசடியில் சிக்கினார்கள் என்பதுதான் புரியவில்லை. 2018-லிருந்து வழக்கு நடப்பதே தெரியாமல் வீடுகளை வாங்கியது எவ்வளவு பெரிய அபத்தம்?
இந்த அவலத்திற்குப் பின்னால் 2011-2016 அதிமுக ஆட்சியின் நிழல் ஆழமாகப் படிந்துள்ளது.
இந்த ஊழலின் வேர்கள் நாம் நினைப்பதை விட மிக ஆழமானவை. தீர்ப்பு நகல்களின் படி, 2005-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியிலேயே இந்த நில விவகாரம் வித்திடப்பட்டுள்ளது. அப்போதுதான் 'அலையன்ஸ்' நிறுவனம் தனது "ஆர்க்கிட் ஸ்பிரிங்ஸ்" திட்டத்திற்காக முதற்கட்டமாக 95 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளது.
பிடிவாத’ ராகுல்.. கோபப்பட்ட ஸ்டாலின்.. சீரியஸ் டிஸ்கஷன்.. நடப்பது என்ன?
minnambalam.com - Mathi : “அடம் பிடிக்கலாம்.. இது ரொம்ப ஓவரா பிடிவாதமா இருக்கே”ன்னு சொல்றாங்க என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ஏதோ தொகுதி பங்கீட்டு சிக்கலா?
ஆமாய்யா.. திமுக- காங்கிரஸ் விவகாரம்தான்.. டெல்லியில 10-ந் தேதியன்னைக்கு புதிய மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை ராகுல் காந்தி, கார்கே நடத்தியிருந்தாங்க இல்லையா? அன்னைக்கே திமுகவோட பேச்சுவார்த்தை நடத்துறதுக்கான ஐவர் குழுவும் ராகுல் காந்தி- கார்கேவுடன் ஆலோசனை நடத்துச்சு..
கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்தான் அந்த ஐவர் குழு இல்லையா?
இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில பிரஸ்ஸை பார்த்த செல்வப்பெருந்தகை, “பேச்சுவார்த்தை குழுவை திமுக அமைக்கலைங்கிறதுல்ல காங்கிரஸ் தலைமைக்கு வருத்தம்தான்.. சென்னைக்கு போய் முதல்வரை சந்திப்பேன்.. அப்ப எங்க தலைமை சொல்லியிருக்கிற விஷயங்களை முதல்வர்கிட்ட சொல்வேன்னு” பேட்டி கொடுத்தாரு..
கோபண்ணா : தவேகவுக்கு என்ன கொள்கை? பாஜகவை எதிர்க்க தயங்கும் தவேகாவோடு நாங்கள் கூட்டணி சேரவே முடியாது
Showketh Hussain : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆ. கோபண்ணா அவர்கள் மின்னம்பலம் இணையதள “அறச்சீற்றம்” செய்திப் பிரிவில் பேட்டி கொடுத்திருந்தார், முழுமையாக பார்த்தேன். இணை ஆசிரியர் கலைச்செல்வி சரவணன் நல்லதொரு கேள்விகளை கேட்டு, அதற்கான தெளிவான பதிலை கோபண்ணா அவர்களிடம் இருந்து பெற்றிருக்கிறார். காங்கிரஸாருக்கு இது தேவையான நேரத்தில் அவசியமான அறிவுரை…!
பாஜகவை வீழ்த்த நினைக்கும் அனைவரும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தோழர்கள்
அவரது பேட்டியை அவசியம் பார்க்கவும்.
அந்த நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முதன்மை நோக்கம் என்ன…?
தேசிய நலன். பாஜகவை வீழ்த்துவது அதற்கான கூட்டணி.
கூட்டணியின் நோக்கம் என்ன…?
புதன், 11 பிப்ரவரி, 2026
கனடாவில் துப்பாக்கி சூடு 9 பேர் உயிரிழப்பு
தந்தி டிவி : பள்ளியில் துப்பாக்கி சூடு - 9 பேர் உயிரிழப்பு.. கனடாவில் கொத்தாக சரிந்த உயிர்கள்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்திய நபரும் உள்ளதாகவும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகையில், “இந்த துயரமான சம்பவத்தால் தான் மனமுடைந்து போனதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறினார்...
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சீமான் கைது! நடந்தது என்ன?
மின்னம்பலம் -Kavi : சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (பிப்ரவரி 11) 10ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது.
அரசுத் துறைகளில் உள்ள மற்ற பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். முறையான விடுப்பு வசதிகள், மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும்.
அவர்கிட்ட பேச முடியாது! தொடர்பு எல்லைக்கு வெளியே ராகுல்! திமுக காங்கிரஸ் பிரச்சனைக்கு காரணமே இதுதான்
tamil.oneindia.com - Shyamsundar ; சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் நீண்டகால கூட்டணிகளாக விளங்கும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுகவிடம் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு: காங்கிரஸின் பிடிவாதம்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) முக்கிய நிர்வாகிகள், வரும் தேர்தலில் தங்களுக்குக் குறைந்தபட்சம் 40 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், "வெறும் வாக்கு வங்கியாக மட்டும் செயல்பட நாங்கள் விரும்பவில்லை; அதிகார மையத்திலும் எங்களது பங்களிப்பு இருக்க வேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.
அதிர்ச்சியில் டெல்லி காங்கிரஸ் - டோனை மாற்றிய ஸ்டாலின்.. சரண்டரான செல்வப்பெருந்தகை.
tamil.oneindia.com : டோனை மாற்றிய ஸ்டாலின்.. சரண்டரான செல்வப்பெருந்தகை.. அதிர்ச்சியில் டெல்லி காங்கிரஸ்
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தனி டிராக்கில் பயணித்து வருகிறது. சில நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். திமுக விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை (DMK Alliance issue) குழுவை அமைக்க வேண்டும் என்று நேற்று செல்வப்பெருந்தகை டோனை மாற்றியிருந்தார். அதற்கு ஸ்டாலின் அழுத்தமான பதிலடி கொடுத்துள்ள நிலையில் செல்வப்பெருந்தகை ரியாக்ட் செய்துள்ளார்.
இலங்கை எம்பி அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை!
தமிழ் மிரர் : அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை!
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (11) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவந்த கொடவெல ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய விசேட அமர்வினால் இந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
காங்கிரஸ் (திமுக) காங்கிரஸ் (தவேக) காங்கிரஸ் (ஆர் எஸ் எஸ்)
Krithika Tharan : ஏன் கூட்டணியை உடைப்பவர்கள் பி டீம் என சொல்றீங்க?
இதை நீண்ட நாளாக எழுத வேண்டும் என நினைத்தேன்.
நான் முதலில் ஆர் எஸ் எஸ் க்கு எதிரான ஆள். அதன் பிறகுதான் காங்கிரஸ். அதை அடக்கி வைக்கவே அன்பை தேசமெங்கும் மீட்க ஒரு கை தரவே காங்கிரசில் இணைந்து உழைக்கிறேன். கிட்டத்தட்ட ஐந்து முறை ராகுல் காந்தியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. என் புத்தகம் அவரால்தான் வெளியிட வேண்டும் என ஒரு வருடம் காத்திருந்து வெளியிட்டேன்.
சாதிக்க வேண்டுமெனில் சாதித்தே தீரும் பிடிவாதம் என்னிடம் உண்டு. தேர்தலில் இப்பொழுதைக்கு நிற்க போவதில்லை. காங்கிரசை கைக்காசு போட்டு பலப்படுத்தும் வேலையில் உள்ளேன். இந்தியாவில் அதிகளவு சக்தி கிள்ப்களை இணைக்கும் வேலையில் குழுவினர் துணையுடன் செய்துள்ளேன் தொடர்ந்து இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கும் பணியிலும் உள்ளேன். இன்னும் பெரிய அளவில் சாதித்து இருக்கலாம். என் பொருளாதாரத்தில் முடிந்ததை செய்கிறேன்.
செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
இந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்க புள்ளி விபரம்
![]() |
தீரன் சாம்பவர்.சு : 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு Google Chrome india முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பனர்கள் மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது.
இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பனர்கள் ..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பனர்கள்
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.
ஜனநாயகன் இரண்டு? 41 உயிர்கள் ஜனநாயகன் வேற .. இப்போது உள்ள ஜனநாயகன் வேற
புகச்சோவ் புகச்சோவ் : 1, நடிகன் விஜய் ஜனநாயகன்னு ஒரு சினிமா எடுத்தாப்ல!
2, அதோட காட்சிகளுக்காக, அவனோட கட்சி மீட்டிங்குகளை பயன்படுத்தினாப்ல!
3, அந்த ரோடு ஷோக்களில் தனது சினிமா ஷூட்டிங்கையும் 64 கேமராக்களை கேரவான் மற்றும் ட்ரோன்களில் வச்சி படம்புபிடிச்சிக்கிட்டாப்ல!
4, கரூர்ல அப்புடி ஷூட்டிங்கும், ரோடு ஷோவும் சேர்த்தே நடத்துனதுல 41 பேரை கொன்னுட்டாப்ல!
5, அந்த க்ளிப்பிங்குகளை தன்னோட சினிமால சேக்கலாம்னு விஜய் போட்டுபாத்தப்போ, அந்த க்ளிப்புகளே விஜய்தான் கரூர் படுகொலைக்கு காரணமான குற்றவாளிங்கறதை நிரூபிக்கிற மாதிரி இருந்ததால, அந்த ஸ்டோரி மற்றும் சினிமாவையே மூடிமறைச்சிட்டாப்ல!
6, அப்போ ஜனநாயகன் சினிமா என்னாச்சின்னு எல்லோரும் கேப்பாகளே என்பதற்காக, உடனடியா எச்சி.வினோத்தை புடிச்சி, ஹிட்டான தெலுங்கு படமொன்றை இரண்டே மாசத்துல அப்படியே காப்பி செஞ்சி வச்சதுதான், இப்போ சென்சார் போர்டுல சிக்கிட்டு நிக்கிற ஜனநாயகன்!
திரு ஜி ஜி பொன்னம்பலம் அமைச்சராக செய்த அபிவிருத்திப்பணியை வேறு எந்த தமிழ் தலைவரும் செய்யவில்லை
Varatharajan Mariampillai : ஜீ.ஜீ யின் நினைவு நாள் இன்று!
'கால் நூற்றாண்டுக்கு நான் தான் தலைவன்! என்னை அசைக்கேலாது!!'
-அசைந்த விமானத்தில் பதறாமல் சொன்ன ஜீ. ஜீ!
அமரர் கே.சிற்றம்பலம் அவர்கள் 'சுதந்திர' இலங்கையின் மூத்த அமைச்சர்களில் ஒருவர். அவர் மன்னாரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று ஐ.தே.க வில் இணைந்து தபால் தொடர்புகள் அமைச்சராகவும் பின்னர் கடற்றொழில் அமைச்சராகவும் பணியாற்றியவர். 1947 முதல் 1956 இல் தமிழரசுக் கட்சியின் அழகக்கோனிடம் தோற்கும் வரை மன்னாரைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
இலங்கை வானொலி நிலையம் திறப்பு க்கான கல்லில் அவரது பெயர் உள்ளது.
( அடிக்கற்களில் பெயர்கள் இடப்படக்கூடாது என்பதற்கு ஆதரவான நம்மவரின் கவனத்துக்கு)
ஜீ. ஜீ பொன்னம்பலம் 1931 இல் மன்னாரில் போட்டியிட்டுத் தோல்வியடைந்து பின்னர் பருத்தித்துறையில் 1934 இல் இரு தேர்தல்களில் இருதடவையும் 1947, 1952, 1956, 1960 (ஜூலை), 1965 இல் யாழ்ப்பாணத்திலும் வென்று மக்கள் பிரதிநிதியானார்.
ஜெப்ரி எப்ஸ்டான் விவகாரத்தில் நோம் சாம்ஸ்கியின் மனைவி வலேரியாவின் அறிக்கை
BBC tamil : ஜெப்ரி எப்ஸ்டான் விவகாரத்தில் நோம் சாம்ஸ்கியின் பெயரும் இருப்பது பலரையும் கொஞ்சம் அதிர வைத்திருக்கிறது.
இது பற்றி அவரின் மனைவி தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
வலேரியா சாம்ஸ்கி வழங்கிய அறிக்கை
பலருக்கும் தெரிந்ததுபோல், தற்போது 97 வயதாகும் என் கணவர் நோம் சாம்ஸ்கி, 2023 ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான பக்கவாதத்திற்குப் பிறகு, மிகப்பெரிய உடல்நல சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
இப்போது அவர் 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்; பேசவும், பொதுவெளியில் உரையாடவும் முற்றிலும் இயலாத நிலையில் இருக்கிறார்.
இந்த உடல்நலச் சிக்கல் தொடங்கியதிலிருந்து, நான் முழுமையாக நோம் அவர்களின் சிகிச்சை மற்றும் மீட்பு பணிகளில் மூழ்கியிருக்கிறேன். அவருக்கும், அவரது மருத்துவ பராமரிப்புக்கும் முழுப் பொறுப்பு எனக்கு மட்டுமே.
திங்கள், 9 பிப்ரவரி, 2026
திமுக குழு அமைக்காமலேயே தொகுதி பங்கீடு! கட்சிகளின் பிடிவாதத்தால் அதிரடி..!
tamil.asianetnews : விசிக, காங்கிரஸுக்காக மெகா பிளானை இறக்கிய திமுக... குழு அமைக்காமலேயே ஸ்டாலின் அதிரடி..!தொகுதி எண்ணிக்கை முடிவுக்கு வந்த பிறகு மூன்று நாட்களில் மொத்தமாக அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2017 முதல் திமுக கூட்டணியில் தொடர்ந்து காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொங்குநாடு மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர்களுடன் இந்த பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது. மொத்தமாக வெரும் தொகுதி எண்களை உறுதி செய்த பிறகு அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதி என்பது கூட்டணி பேச்சு வார்த்தை மூலம் தெரியவரும்.
“பிரபாகரன் ஒரு முட்டாள் பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” கடற்புலி புலனாய்வு அரியரத்தினம் பேட்டி
“பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கன
தேசம்நெட் - arulmolivarman : தேசம்குரல் யூரியூப் தளத்தில், இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா) தன்னுடைய போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பதிவு வெளியிடப்பட்டு இருந்தது. (இணையத்தின் கீழே இப்பதிவுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.) இது தொடர்பில் பல விமர்சனங்கள் வெளியாகி இருந்தது. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காகுஸ்தன் அரியரத்தினம் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து தேசம்நெற்க்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை இங்கு வாசிக்கலாம்:
கனடாவில் அனுமதியின்றி வீடியோ எடுத்த இலங்கையர் கைது
வீரகேசரி : கனடாவில் அனுமதியின்றி வீடியோ எடுத்த இலங்கையர் கைது
அனுமதியின்றி நபர்களைத் துன்புறுத்தி வீடியோ காட்சிகளைப் பதிவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறொன்றோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சந்தேகநபர் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
45 வயதான சந்தேகநபர் மீது ரொறொன்றோ பொலிஸாரால் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபரை 45 வயதுடைய முகமது அஸ்கர் முகமது-ரசிக் என்று அடையாளம் கண்டுள்ளனர்.
திமுக நிதானம் - கொதிப்பில் கூட்டணி கட்சிகள்!
hindutamil.in- வே.கோபாலகிருஷ்ணன் : தமிழகத்தில் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அறிவாலயத்தின் மவுனம் மட்டும் கூட்டணிக் கட்சிகளின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. "கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழுவை பிப்ரவரி இறுதியில் அமைத்துக் கொள்ளலாம்" என திமுக மேலிடம் எடுத்திருக்கும் முடிவை சற்றும் எதிர்பார்க்காத அதன் தோழமை கட்சிகள், இப்போது உச்சகட்ட கடுப்பில் இருக்கின்றன.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 173 இடங்களில் களம் கண்டது. மீதமுள்ள இடங்கள் காங்கிரஸ் 25, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம்-க்கு தலா 6, முஸ்லீம் லீக், கொமதேக-வுக்கு தலா 3, மநேமக 2, தவாக, பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எனப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இந்த முறையும் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி அதே பழைய கணக்கிலேயே வண்டியை ஓட்டிவிடலாம் என அறிவாலயம் கணக்குப் போட்டிருந்தது. ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.
பிரவீன் சக்ரவர்த்தி மாணிக்தாகூர், மோகன் குமாரமங்கலம் போன்றோர் ஆர் எஸ் எஸ் ஏவல் பேய்களா?
![]() |
Bilal Aliyar : மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா போன்றோரை சம்பந்தமே இல்லாமல் மோடியை தாக்கபோவதாக நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பதும்
இப்போது வரை யாரென்றே தெரியாத பிரவீன் சக்ரவர்த்தி என்ற நபரை ஊடகங்களில் உளற வைப்பதும்
மாணிக்தாகூர், மோகன் குமாரமங்கலம் போன்றோர் காங்கிரசை பெரிய சக்தியாக பேசி திமுகவினரை, திமுக தலைவர்களை தரக்குறைவாக பேசுவதும்
வேலுச்சாமி போன்ற புரோக்கர்கள் கலைஞர் குறித்து அருவருப்பான வார்த்தைகளை தெளிப்பதையும்
துக்ளக் மேடைகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுவதையும்
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிகழ்வுகள் அல்ல.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை உடைக்க, காங்கிரசை பெரிய சக்தியாக ஆர்எஸ்எஸ்சே கட்டமைக்கிறதோ என்ற சந்தேகம் நிரூபணமாகிறது!
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026
திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பாஜக சதி: செல்வப்பெருந்தகை அதிரடி
மின்னம்பலம் - Mathi : திமுக- காங்கிரஸ் கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் எனபாஜக சதிசெய்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனலுக்கு செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக – காங்கிரஸ் கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என பாஜகவினர் கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறாங்க. அவங்களோட ஒரே நோக்கம் ‘இந்தியா’ கூட்டணியைச் சிதைக்கிறதுதான்.
தமிழகத்துல காங்கிரஸைத் தனியா பிரிச்சுவிட்டு, தலித் மக்களோட வாக்குகளையும் சிறுபான்மையின மக்களோட வாக்குகளையும் பிரிச்சுப் பார்க்கணும்னு ஒரு பெரிய சதித்திட்டம் போட்டு வேலை செய்றாங்க. ஆனா, அவங்க பருப்பு இங்க வேகாது.
டெல்லியில் - நண்பர் விஜய் or அண்ணன் ஸ்டாலின்.. இன்று ராகுல் முடிவு செய்வார் - பின்னணி
![]() |
tamil.oneindia.com- ஷியாம் சுந்தர் : டெல்லியில் கிளைமேக்ஸ்.. நண்பர் விஜய் or அண்ணன் ஸ்டாலின்.. இன்று டிக் அடிக்கும் ராகுல்? பின்னணி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையிலான பத்தாண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது.
டெல்லி விரைந்த செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவசரமாக டெல்லி விரைந்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சனி, 7 பிப்ரவரி, 2026
80, 90களில் பிறந்தவர்களை விட 1997-2012 களில் பிறந்த ஜென் Z தலைமுறையினரின் அறிவாற்றல் IQ வில் குறைந்துள்ளனர்
மாலை மலர் : 80, 90களில் பிறந்த மில்லினியல்கள் விட 1997-2012 காலகட்டத்தில் பிறந்த ஜென் Z தலைமுறையினரின் அறிவாற்றல் மற்றும் IQ குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
பிரபல நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறையின் IQ அதிகமாக இருக்கும் என்ற பிளைன் விளைவு கோட்பாடு தலைகீழாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த 100 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் IQ அளவு அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது முதன்முறையாக இந்த வளர்ச்சி நின்று, IQ அளவுகள் குறையத் தொடங்கியுள்ளது.
திமுக தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
minnambalam.com - Kavi : விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், இளைஞரணியினரும் கலந்துகொண்டுள்ளனர் .
முதலில் துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன்மை செயலாளர் நேரு, துணை பொதுச்செயலாளார்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி,திருச்சி சிவா, அந்தியூர் ப செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், கனிமொழி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோருக்கு நினைவு பரிசை வழங்கினார்.
ஆட்சியில் பங்கு? : ஒரே கல்லில் 2 மாங்காய்'? காங்கிரஸ் தானாகவே போகும் .. காத்திருக்கும் திமுக?
![]() |
தமிழகத்தில் நம்மை வைத்துத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சி, நமது வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லையே என்று வருத்தப்படுகிறதாம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
எனவே, அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். தமிழகத்தைப் போல் புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால்,
5 மாநிலங்களுக்கும் சேர்த்து ஒன்றாக சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் பல்வேறு கட்டங்களாக 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 2-வது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிகிறது.
அதிருப்தியில் தி.மு.க.
உலக அதிகாரம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
![]() |
Mukinthan Thurairajasingham : வரலாறு என்பது ஒரு சுழற்சி. ஒரு பேரரசு உச்சத்தைத் தொடும்போது, அதன் வீழ்ச்சிக்கான விதைகளும் அங்கேயே தூவப்படுகின்றன.
இன்று நாம் காண்பது ஒரு சகாப்தத்தின் முடிவு.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் இரட்டை ஆதிக்கம் (Bipolar World) கொண்ட உலகாக உருவானது. சோவியத் ஒன்றியம் உடைந்ததுடன்,
அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கம் (Unipolar World) நீண்ட காலம் நிலவியது.
இன்று அந்த ஆதிக்கம் மெதுவாக சிதைந்து, பல மையங்களைக் கொண்ட புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது.
வரலாற்றில் எந்தவொரு பேரரசும் நிரந்தரமாக இருந்ததில்லை.
ரோமானியப் பேரரசு முதல் பிரிட்டிஷ் காலனித்துவம் வரை அனைத்தும் ஒரு கட்டத்தில் வீழ்ந்தே தீர வேண்டும் என்பது காலத்தின் விதி.
உலகம் இனி ஒரு நாட்டின் பிடியில் இருக்காது என்பது உறுதியாகிவிட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான அமெரிக்காவின் 'ஒற்றை முனை' (Unipolar) அதிகாரம் சிதைந்து, அதிகாரம் பல நாடுகளுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. இதையே நாம் 'பல்முனை உலக ஒழுங்கு' என்கிறோம்.
பெரியார் இயக்கப் பெண்களை வலுப்படுத்தும் கட்டமைப்பு உள்ள ஒன்னும் இல்ல..இனி செஞ்சாத்தான் உண்டு
Loganayaki Lona : இதே போல முன்னாடி ஒரு கதை.
அதர்மம் மனோஜ் இப்ப யூட்யூபரா இருக்குறார்..
அப்ப அவர் தான் தபெதிக கோவை மாவட்ட நிர்வாகி.
இயக்கத்தில சேர்க்குறேன்னு வாட்சப் க்ரூப்ல சேர்த்துட்டு அதுல தான் மீட்டிங்..டிஸ்கசன் எல்லாம்
ஆனைமுத்து அய்யாவுக்கு இரங்கல் தீர்மானம் கேட்க சொல்லி அந்த குழுவில் கோரிக்கை கேட்டேன்
அதப் பகிர்ந்ததும்..வேகமா அனுப்பி தபெதிகவின் வேண்டுகோளுக்கிணங்கன்னு நியூஸ்லலாம் இரங்கல் தெரிவித்த சட்டமன்ற தீர்மானம் வந்தது.
ஒகே இயக்கமா கேட்டா செயல்பாடு நடக்கும்னு நம்பிட்டேன்.
எனக்கு ஆனைமுத்து அய்யாவை அவர் இறந்த பின்னாடி தான் அப்டி ஒருத்தர் இருந்ததே தெரியும். பெரியாரிய மார்க்சியஅப்டின்னு ஒருத்தரான்னு அப்புறம் தான் அவர் புத்தகம் படிச்சேன்.
சரி ஒகே.. கொள்கை உறவு , உணர்வு இருந்ததால் தான் நாங்க அந்த கோரிக்கைய கேட்டோம்
இங்க ப்ரபாகரன் பாலிடிக்ஸ் இணையத்துல வைரலா போய்ட்டு இருந்த டைம் அது..
வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் ..படையெடுக்கும் தலைவர்கள் தொண்டர்கள்
tamil.oneindia.com - Vigneshkumar : சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில அரசியல் களம் பல்வேறு ட்விஸ்ட்களை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இன்று திடீரெனத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக அதிமுக- பாஜகவின் என்டிஏ கூட்டணி, சில மாதங்களாகவே பல்வேறு கூட்டணிக் கட்சிகளையும் உள்ளே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதற்கேற்ப அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.
எகிறும் ஸ்டாலின்..குழப்பத்தில் ராகுல்… டென்ஷனில் விஜய்.. அப்செட்டாக்கும் பிரேமலதா
மின்னம்பலம் :சென்னையில கார்ல் மார்க்ஸ் சிலையை இன்னைக்கு சிஎம் திறந்து வெச்சாரு பார்த்தீரா? அதுல சிஎம் கூட லெப்ட் லீடர்ஸ், காங்கிரஸ், விசிக, மதிமுகன்னு கூட்டணி கட்சி ‘தலை’கள் எல்லாம் அணிவகுத்து நின்னாங்களே..
ஆமாய்யா.. அப்ப ‘நீர் சொன்ன ”ஸ்டாலின் கணக்கு” டீலிங் ஒர்க் அவுட் ஆகிடுச்சா?
அதான்யா சிக்கலே.. வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ‘திமுக கூட்டணியில’தான் காங்கிரஸ் இருக்குதுன்னு நம்புறாங்க.. ஆனா உள்ளே நடக்கிற சம்பவங்களோ வேற மாதிரியா இருக்கே..
என்னய்யா நடந்துகிட்டு இருக்கு?
சிஎம் எஸ்டாலின், ‘கூட்டணி கட்சிகளோட பேச்சுவார்த்தை அமைக்க குழு அமைப்போம்’ன்னு சொல்லி இருந்தாரு.. காங்கிரஸ் சோடங்கரும் கூட, ”2,3 நாட்களில் திமுக குழு அமைச்சுரும்.. பேச்சுவார்த்தை தொடங்கிடும்”னு சொல்லி இருந்தாரு..
ஆனா இன்னமும் திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்கலைங்கிறதை கவனித்தீரா? அதே மாதிரி காங்கிரஸ் வேணுகோபால் பிப்ரவரி 5-ந் தேதி வர்றதா இருந்ததும் கேன்சலாகிடுச்சு பார்த்தீரா?
தோழர் லோகநாயகி லோகன் : திவிகவிலிருந்து விடுதலை பெற்றேன்
![]() |
Loganayaki Lona : திவிகவிலிருந்து விடுதலை பெற்றேன்
2020 தேர்தலில் திமுக ஆதரவு நிலைப்பாடு திவிக தபெதிக மற்றும் பல முற்போக்கு இயக்கங்கள் இயக்கம் சாராத தோழர்களின் புற அழுத்த கலந்துரையாடல்களின் நீட்சியாக எடுத்தனர்..
அந்த புற அழுத்தத்துக்கு அடிப்படையாக தோழர் மதிமாறன் அவர்களின் உரைகள் இருந்தன.எந்த இயக்கமும் சாராத பலர்க்கு அந்த புற அழுத்தம் தந்ததில் அவர் பேச்சுக்கும்,விவாதங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
அதன் பின் அமைப்பு செயற்குழுக்கள் பேசி அமைப்பு அந்த நல்லதொரு. முடிவெடுத்திருக்கலாம்.அமைப்புக்குள் போய் தோழர் அந்த முடிவை எடுக்க வைத்ததாக எங்கும் எழுதப்படவில்லை.
புற அழுத்தமே இல்லாமல் அந்த முடிவு இயக்களுக்கு தானாகவே வந்தது என்பது பொய்.
அதுக்கு பின்னால் பல தனி பெரியாரிஸ்டுகள் உண்டு.நானே நேரடியான சாட்சி.அந்த தனி பெரியாரிஸ்டுகள் மதிமாறன் தோழர் பேச்சு மூலம் உள்ள வந்தவங்க தான் .அதுக்கு பிறகு அவங்க களத்தில் செயல்பாட்டில் விரிவாகியிருக்கலாம்.
வாய்ப்பிருந்த இணைய மீட்டிங்க் எல்லாவற்றிலும் முற்போக்கு இயக்கங்கள் அனைத்தின் மீதும் எதிர்ப்புகளை பதிவு செய்ததில் நானும் தான் பங்கெடுத்து இருந்தேன்.
அதில் புகழ்ச்சியும் இல்லை.இகழ்ச்சியும் இல்லை.தனி மனித ஆதாயமும் இல்லை.
வியாழன், 5 பிப்ரவரி, 2026
அஜித் உயிரிழப்பு -பொய்ப் புகாரளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்: அஜித்குமார் தாயார்
![]() |
hindutamil.in - இ.ஜெகநாதன் : திருப்புவனம்: “என் மகன் மீது தவறாக திருட்டு புகார் கொடுத்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” என போலீஸார் விசாரணையில் மரணமடைந்த மடப்புரம் காவலாளி அஜித்குமார் தாயார் மாலதி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். அந்த கோயிலுக்கு கடந்த ஆண்டு ஜுன் 27-ம் தேதி சாமி கும்பிட வந்த மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் நிகிதா தனது தங்கச் சங்கிலி திருடு போனதாக புகார் கொடுத்தார்.
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்| ’சிறுமிகள் பாலியல் to மனித மாமிச விருந்து..?’ A to Z முழு விவரம்! owner
vikatan : மறைந்த அமெரிக்க செல்வந்தர் மற்றும் குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்க செல்வந்தர் மற்றும் நிதியாளர், 2019ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்தி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரது மரணம் பல மர்மங்களை எழுப்பியது. நீதித்துறை விசாரணையில் பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தரவுகளில் சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
டெல்லியில் தினமும் 54 பேர் காணாமல் போகிறார்கள்! பத்தாண்டுகளில் டெல்லியில் 2, 32, 737 காணாமல் போனர்.
Giri Sundar : ஒன்றிய அரசின் நேரடி கட்டு பாட்டில் இருக்கும் தலைநகர் டெல்லியில் நடக்கும் மர்மம் தான் என்ன ..?
டெல்லி போலீஸாரிடமிருந்து கிடைத்த ஆவணங்கள் மூலமாக வெளியாகியிருக்கும். தகவல் உண்மையிலேயே அதிர வைக்கும் தகவல்தான்..!!
டெல்லியில் தினமும் 54 பேர் காணாமல் போகிறார்களாம்...!!
ஜனவரி 1முதல் 15ஆம் தேதிக்குள்
509 பெண்களும் குழந்தைகளும் 298 ஆண்களும் காணாமல் போய் உள்ளனர்..!!
அதாவது 2 வாரத்தில்
807 பேர் காணாமல் போய் உள்ளனராம்..!!
காணாமல் போகும் பெண்களில் குழந்தைகளைவிட பெரும்பாலும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அதிகமாம்..!!
கடந்த ஓர் ஆண்டு மட்டும் 24,508பேர் காணவில்லையாம்...!! இதில் 60% பெண்கள்.. 15426 பேர். கண்டு பிடிக்கப்பட்டு விட்டனர்..!!
இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் 9087பேர் தேடப்படுகின்றனர்..!!
2025 ல் 5,081டீன் ஏஜ்ஜர்ஸ் காணவில்லையாம்..அதில் 3970பேர் இளம் பெண்கள்..
விஜய் கட்சிக்கு போறேன்னு உதார் விட்டாலும் போக மாட்டாங்க.
Giri Sundar : திமுக காங்கிரசு சண்டை புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி.காலையில சண்டை போட்டா நைட்டு ஒண்ணு சேர்ந்துடுவாங்க.
புருஷன் கிட்ட பிகு பண்ணா தான் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.
அவனுங்களும் தேர்தல் நேரத்தில தான் கேட்க முடியும்.இப்ப விட்டா அடுத்த தேர்தல் வரைக்கும் தலைகீழ நின்னாலும் திமுக
கண்டுக்காது.
என்ன தான் விஜய் கட்சிக்கு போறேன்னு உதார் விட்டாலும் போக மாட்டாங்க.அப்படி போறதா இருந்தா கடந்த பார்லிமெண்ட் தேர்தல்ல அதிமுக கூப்பிட்டப்பவே போயிருப்பாங்களே!ஏன் போகல?
அடிமைங்கலாம் கள்ளக் காதலன் மாதிரி, மேட்டர் முடிச்சோமா, தொடைச்சிட்டு பாஜகவுக்கு ஆதரவு தெரிவிச்சோமா, அமைச்சர் பதவி வாங்கினோமான்னு போயினேயிருப்பானுங்க.
Why Indo Ceylon talks failed? Ceylon betrayed by Indians here? Mr.Senanayaka speaks 23- !2 1940 The Hindu organ
![]() |
D. S. Senanayake – The Father of the .- Prime Minister
Why Indo Ceylon talks failed? Ceylon betrayed by Indians here? Mr.Senanayaka speaks
Congress camp saturday ;
Details about abortive indo ceylon talks at delhi reveals for the first time Mr.D.S.Senanayaka, one of ceylon delegates to delhi. When he spoke as chairman of the reception committee at today's session the Ceylon National Congress at Mirigama Mr.EAP Wijyearatna president elect occupied the chair.
Remarking that the vast number of Indians in ceylon regarded India as their home and
Ceylon only as their place of occupation, Mr.Senanayak specifically mention the tentative proposals which were laid before the Delhi conference as embodying conditions under which the status of indian in ceylon should be determine.
I make bold to say declared Mr.Senanayaake ' that the chief reason why our confrence with the representatives of the Indian Government failed was because fo the poisonous atmosphere already crated by so called indian leaders from Ceylon who are betraying this country"


















