வெள்ளி, 29 மே, 2026

மலையக தோட்டங்களில் நடப்பது என்ன? சர்வதேச அமைப்பு அதிர்ச்சி குற்றச்சாட்டு!

May be an image of smiling and coffee cup
May be an image of one or more people and spring greens

 Esther L Shanmugham :சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டிருக்கும் (தென்னிலங்கை) மலையக மக்களின் நிலைமை!  எஸ்தர் - கவிஞர் /எழுத்தாளர்  மலையகம்  இலங்கை
மலையக தோட்டங்களில் நடப்பது என்ன? சர்வதேச அமைப்பு அதிர்ச்சி குற்றச்சாட்டு!
தற்போது ஊடகங்களில் பேசப்படும் முக்கியமான விடயமாக, மலையக மக்கள் தென்னிலங்கை தனியார் தோட்டங்களில் எதிர்கொள்ளும் சுரண்டல், அடாவடித்தனம் மற்றும் குறைந்த கூலி தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.
 குறிப்பாக பெண் தொழிலாளர்களின் நலன்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் மனிதர்களாகவும் மனிதாபிமானம் அற்றவர்களாகவே தனியார் தோட்டகம்பனிகள் மக்க ளை நடத்துகிறார்கள்
ஆனால் இது இன்றோ நேற்றோ உருவான பிரச்சினையல்ல; காலம் காலமாக மலையகப் பகுதிகளில் இடம்பெற்று வரும் பெரும் மனித வதை


இதனை நான் சிறுவயதிலிருந்தே கவனித்தும் அனுபவித்தும் இருக்கிறேன். இன்று சர்வதேச மன்னிப்புச் சபை இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம்; ஆனால் காலங்காலமாக எமது குரல்களும் எழுத்துகளும் இம்மக்களின் துயரங்களை பதிவு செய்து கொண்டே இருந்தன.
 குறிப்பாக எனது கவிதைகளில், இம்மக்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர், அவர்களின் அவலமான வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதனை சுட்டிக்காட்டியுள்ளேன்.
மலையக மக்களோடு பணியாற்றிய காலங்களில் நான் உணர்ந்த ஒன்று என்னவெனில், தென்னிலங்கை பகுதிகளில் அவர்கள்  தமிழ் பேசும் தேயிலைத் தொழிலாளர்களாக இருப்பதன் காரணமாக அவர்கள் மிகவும் தாழ்வாகவே பார்க்கப்படுகின்றனர். “வத்து தெமிலோ” போன்ற இழிவான சொற்களால் அழைக்கப்படுவதையும் நான் களுத்துறை மாவட்டத்தில் பயணித்த காலங்களில் நேரடியாகக் கண்டுள்ளேன்.
களுத்துறையில் குடியிருக்கச் சென்ற என் உறவுப் பெண் ஒருவர் முழுமையாகச்  சிங்களச் சூழலுக்குள் கலந்துவிட்டார். இன்று அவருடைய பிள்ளைகளுக்கு தமிழே தெரியாது. அவர்கள் சிங்கள மற்றும் ஆங்கிலப் பாடசாலைகளில் மட்டுமே கல்வி கற்றனர். காரணம், தமிழ் பேசுவதால் சமூகத்தில் தாழ்வாக நடத்தப்படுவோம் அதனை அவர்கள் அச்சூழலி உணர்ந்துளௌளனர் ஆனால் தமிழ் சாமியார்கள் ஜோசியம் சொன்னால் தமிழ் சாமியார்கள் மந்திரம் சொன்னால் ஏதாவது ஒரு கோயிலை வைப்பது பயமுறுத்தி மந்திரம் தாயத்துக்கள்  செய்தால் அப்பகுதி மக்கள் பயப்படுவதாகவும் அவர்களிடம் ஜோசியம் கேட்க வருவதாகவும் சொன்னார். 
அந்நாள்களில் நாட்டில் நிலவிய இனவாதச் சூழலும் இதற்கு காரணமாக இருந்தது.
களுத்துறை, இரத்தினபுரி போன்ற பகுதிகளில் உள்ள தேயிலைத் தொழிலாளர்கள் இன்னமும் மிக மோசமான சூழலில் வாழ்கின்றனர். அவர்களுடைய குடியிருப்புகள் பாதுகாப்பற்றதும் சீரழிந்த நிலையிலும் உள்ளன. தனியார் தோட்ட முதலாளிகளுக்கு அவர்கள் வெறும் கூலி தொழிலாளர்களாக மட்டுமே தெரிகின்றனர்.
 வேலையிலிருந்து நீக்குவது, பயமுறுத்துவது, கைநீட்டி அடிப்பது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களும் இடம்பெறுகின்றன. அவர்களின் நலனில் எந்த அக்கறையும் செலுத்தப்படுவதில்லை.
அவர்கள் குடியிருப்புகள் எவ்வாறு உள்ளன, அவர்கள் எந்த சூழலில் வாழ்கின்றனர் என்பதில்கூட உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை. மின்சாரம் குடிநீர் வசதி மற்றும் பிரதேச சபா முனிசுபல் கொமிற்றி போன்ற அரச நிறுவனங்களின் உதவியும் அற்றவர்களாகவே உள்ளனர்
அதிகாலையில் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு வந்தால் போதும் என்ற மனநிலையே நிலவுகிறது. ஆகவே அவர்களின் குடியிருப்புக்கு அருகிலே தேயிலை ரப்பர் தோட்டங்களையும் பயிரிட்டுள்ளனர்.
 நல்ல உணவு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மனிதநேயமான வாழ்வு ஆகியவை இன்னமும் அவர்களுக்கு கேள்விக்குறியாகவே உள்ளன.
பலாங்கொடை பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் அவர்கள் பயணிக்கும் பாதைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. ஆனால் அந்த தோட்ட நிர்வாகங்கள் அந்தப் பாதைகளை சீரமைத்து மக்களுக்கு ஏற்றதாக மாற்ற முயற்சிப்பதில்லை. ஏனெனில் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் கம்பனி முதலாளிகள் அல்ல; சாதாரண தொழிலாளர்களே.அவர் தம் பிள்ளைகளே
தென்னிலங்கையில் சிங்கள சமூகங்களின் நடுவில் வாழும் இந்த தோட்டத் தொழிலாளர்கள் சமூக அங்கீகாரம் அற்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி வாய்ப்புகளும் குறைவாக உள்ளன. இதன் விளைவாக பல இளைஞர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்று, தங்களது தமிழ் அடையாளத்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதில் இனப்பரம்பல் சிக்கலும் உள்ளது.
மேலும், களுத்துறை, பாணந்துறை, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரியும் தமிழர்கள் “சக்கிலி” போன்ற இழிவான வார்த்தைகளால் அழைக்கப்படுகின்றனர். சமூக அமைப்பும் வாழ்க்கைச் சூழலும் அவர்களை ஒருபோதும் மேலெழ முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.
“இந்த நாட்டில் எல்லோரும் சமம்; நீதியும் சமம்” என்று கூறப்படுகின்றது. ஆனால் அது பேச்சில் மட்டுமே உள்ளது யாப்பில் மட்டும்தானே உள்ளது நடைமுறையில் அவர்கள் வெறும் அத்தக்கூலிகளே.
குறிப்பாக தமிழ் தேயிலைத் தொழிலாளர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுகின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றியவர்கள் இவர்களே. கொரோனா காலத்திலும் தேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த நாட்டிற்கு பில்லியன் கணக்கில் வருமானம் கிடைத்தது. இருந்தபோதிலும், அந்த உழைப்பை வழங்கிய மக்களின் வாழ்க்கை இன்னமும் கொத்தடிமை நிலையை விட்டு வெளியே வரவில்லை.
அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் தேர்தல் காலங்களில் மலையக மக்களின் வாக்குகளைப் பெற மட்டுமே அவர்களை நினைவுகூருகின்றனர். ஆனால் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை.அதிலும் நிலவுரிமை துப்புரவாகவே மறுதலிக்கப்பட்டவர்கள் அவர்களே
இந்த நிலையை சர்வதேச மன்னிப்புச் சபை சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. இது அரசாங்கத்திற்கும் உலகிற்கும் ஏற்கனவே தெரிந்த உண்மை. ஆகவே, இந்த மனித அவலத்திற்கு இறுதியாக யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?
இந்த நிலை எந்த வடிவில் எப்படி மாறும அன்றேல் இந்நிலை இப்படியேதான் காலம்தோறும் நீளுமா என்பதை அரசாங்கம்தான் சொல்லவேண்டும்
The Situation of Hill Country Tamil Communities in Southern Sri Lanka: A Reality Long Ignored
By Esther – Poet and Writer, Hill Country Sri Lanka
One of the major issues currently being discussed in the media is the exploitation, abuse, and low wages faced by Hill Country Tamil workers employed in private plantations in southern Sri Lanka. In particular, the welfare and dignity of women workers have been highlighted as being severely affected.
However, this is not a new problem that emerged overnight. It is a long-standing human tragedy that has existed in the plantation regions for generations.
I have personally witnessed and experienced these realities since childhood. Today, Amnesty International may have brought global attention to the issue, but for decades our voices, writings, and lived experiences have continuously documented the suffering of these communities.
In many of my poems and writings, I have reflected on how these people are exploited and how painfully difficult their lives remain.
During the years I worked closely with Hill Country communities, one painful reality became very clear to me: in southern Sri Lanka, Tamil-speaking plantation workers are often looked down upon simply because of their identity. While travelling through the Kalutara District, I personally witnessed people using insulting terms such as “Wathu Demilo” to refer to them.
One of my female relatives who moved to Kalutara gradually became completely absorbed into the Sinhala social environment. Today, her children cannot even speak Tamil. They studied only in Sinhala and English-medium schools because the family felt that speaking Tamil would result in discrimination and social humiliation. They had clearly understood the prejudice that existed around them.
Ironically, however, the same society often turns to Tamil priests, astrologers, and spiritual healers for blessings, rituals, charms, and protection whenever fear or superstition arises.
The ethnic tensions and racist atmosphere that prevailed in the country during those years also contributed heavily to this social alienation.
Even today, plantation workers in areas such as Kalutara and Ratnapura continue to live under extremely poor conditions. Their housing remains unsafe and neglected. To many private estate owners, these people are seen merely as cheap labourers.
Threats, dismissals from work, intimidation, and even physical abuse continue to occur. Very little genuine concern is shown for their welfare. Hardly any attention is paid to the condition of their homes or the environment in which they live. Many still lack proper electricity, clean drinking water, and access to local government services and infrastructure.
The dominant attitude seems to be that as long as workers arrive at the tea estates early in the morning, nothing else matters. Even the tea and rubber plantations themselves are often established directly around their living spaces, leaving them isolated and confined.
Nutritious food, security, healthcare, sanitation, and a life of dignity remain distant dreams for many of them.
In areas such as Balangoda, the roads and pathways used by plantation workers are still in terrible condition. Yet estate administrations rarely attempt to improve them because the people using those roads are not company owners or wealthy elites — they are ordinary labourers and their children.
These plantation communities, living among Sinhala-majority populations in southern Sri Lanka, continue to be treated as socially invisible and excluded people. Their children often lack access to quality education and equal opportunities. As a result, many young people are educated mainly in Sinhala, gradually losing their Tamil language and cultural identity. This has also created deeper intergenerational identity challenges.
Furthermore, Tamil sanitation workers employed in areas such as Kalutara, Panadura, and Hambantota are still insulted with degrading caste-based slurs. The social structure and economic realities surrounding them have trapped many families in cycles of poverty and marginalisation from which they struggle to escape.
People often say that “everyone in this country is equal and justice applies equally to all.” But in reality, such equality exists mostly in speeches, slogans, and constitutional language. In practice, these communities continue to be treated as disposable daily wage labourers.
Particularly, Tamil plantation workers remain among the most marginalised people in the country.
Yet ironically, these are the very people who helped sustain Sri Lanka’s economy for generations. Even during the COVID-19 pandemic, tea exports brought billions in revenue to the country. Despite this enormous contribution, the lives of the workers who produced that wealth have still not escaped conditions resembling bonded labour and modern servitude.
Governments and politicians often remember the Hill Country Tamil community only during election periods in order to secure votes. But their basic human needs — housing, land rights, education, healthcare, sanitation, and dignity — continue to remain unresolved.
In particular, land ownership rights have been systematically denied to many of them for decades.
The reality is that Amnesty International does not need to tell us about this suffering. The government and the world have already known these truths for a very long time.
The real question is this: who will finally take responsibility for this ongoing human tragedy?
Will these conditions ever truly change, or will this suffering continue endlessly across generations?
It is the government that must answer these questions.

கருத்துகள் இல்லை: