ராதா மனோகர் : ஜீவா டுடே ஜீவா சகாப்தன் அவர்கள் ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது நடிகர் விஜய்க்கு திமுக குடும்பங்களில் இருந்து சுமார் 10 வீத வாக்குகள் சென்றிருக்கிறது என்றார்.
இது உண்மையாக இருக்க கூடும் ஏனெனில் ஏற்கனவே இது பற்றி செய்திகள் உள்ளன.
இதற்கு பலரும் பல காரணங்களை கூறக்கூடும்
முன்பெல்லாம் திமுக குடும்பங்கள் என்ற பெரிய திமுக கிளைகள் இருந்தன.
ஒவ்வொரு திமுக குடும்பமும் ஒரு திமுக கட்சி கிளைபோல் செயல் பட்டன
இந்த திமுக குடும்பங்களில் இருந்துதான் திமுக ஆட்சிக்கு வந்தது மட்டுமல்ல
திமுக படுமோசமாக தோற்றபோதும் திமுகவின் வேர்களை காப்பாற்றி அதற்கு நீரூற்றி
மீண்டும் ஆட்சிக்கு திமுகவை கொண்டுவந்தது இந்த திமுக குடும்பங்கள்தான்
இந்த குடும்பங்களில் யாரவது ஒருவர் அல்லது இருவர் திமுகவோடு கொஞ்சம் நெருங்கிய தொடர்பில் இருப்பார்
இவரின் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கு இவரது திமுக சகவாசம் என்பது ஒரு உணர்வு ரீதியான பிணைப்பு.
இது நம்ம கட்சி .. நம்ம குடும்ப கட்சி என்ற பற்றுதல் இருக்கும்
திமுக சிலவேளைகளில் இவர்களுக்கு இவர்கள் எதிர்பார்த்த நன்மைகளை செய்யாமல் இருக்கவும் கூடும் ஆனாலும் கூட அண்ணன் தம்பி ஓரளவுக்கு மேல் விரோதம் பாராட்ட கூடாது என்று அந்த கோபத்தை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு தேர்தல் சமயங்களில் வேலை பார்ப்பார்கள்
பெரிதாக பிரசாரங்கள் செய்யாது விடினும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமுக தொடர்பாடல்களில் திமுகவை விட்டு கொடுக்க மாட்டார்கள்
கூடுமானாரை திமுகவுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க வேண்டும் என்று எந்த வித தனிப்பட்ட இலாபமும் கருதாமல் இந்த வேர்கள் திமுக என்ற ஆலமரத்தை தாங்கி நின்றன
இந்த வேர்களுக்கு வெந்நீர் ஊற்றியது யார்?
கலைஞர் காலத்திற்கு பின்பு அறிவாலயம் என்பது சாதாரண தொண்டர்களுக்கு கொஞ்சம் எட்டாத தூரத்தில் சென்று விட்டது என்றுதான் பலரும் கூறுகிறார்கள்
திமுக நம்ம கட்சி என்ற எண்ணம் இந்த குடும்பங்களில் காணாமல் போய்விட்டது
அயல்வீட்டு வாக்குகள் திமுகவுக்கு வரவேண்டுமே என்று இவர்கள் துடித்த காலங்கள் போய்,
இந்த குடும்ப உறுப்பினர்களின் வாக்குகளே நடிகர் விஜய்க்கு போயிருக்கிறது
எவ்வளவு தூரம் இந்த குடும்பங்கள் திமுகவை விட்டு தூரம் போய்விட்டன?
கலைஞர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?
இந்த குடும்பங்களின் sense of belonging உணர்வு எப்படி காணாமல் போனது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக