செவ்வாய், 16 டிசம்பர், 2025

இலங்கை அரகலய போராட்டத்தை 45 நிமிடங்களுக்குள் அடக்கி விட முடியும் என்று இந்திய தூதுவர் .....

May be an image of dais and text
Gopal Baglay -   Mahinda Yapa Abeywardena 

சபாநாயகர் மகிந்த யாப்பா அபாயவர்தனா அவர்கள் ஜனாதிபதி பதவியை ஏற்க ஒப்புக்கொண்டால், 45 நிமிடங்களுக்குள் (அரக்கலய) நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற த உறுதி மொழியை  இந்திய தூதுவர் திரு கோபால் பாக்ளே அவர்கள் சபாநாயகருக்கு வழங்கினார்! 
இந்த அதிர்ச்சிகரமான தகவலை பேராசிரியர் சுனந்தா மதுமபண்டார அவர்கள் எழுதிய  அரக்கலயா பலாய என்ற சிங்கள மொழி நூலில் குறிப்பிட்டுள்ளார். 
இது பற்றி மேலதிக விபரங்களை லங்காவேப் என்ற பழம் பெரும் இணையத்தளத்தில் காணலாம்!
 .
lankaweb Lastly, the former parliamentarian has revealed that it was then Indian High Commissioner, in Colombo, Gopal Baglay (May 2022 to December 2023) who asked him to accept the presidency immediately. Professor Sunanda Maddumabandara, who served as Senior Advisor (media) to President Ranil Wickremesinghe (July 2022 to September 2024), disclosed Baglay’s direct intervention in his latest work, titled ‘Aragalaye Balaya’ (Power of Aragalaya).

திங்கள், 15 டிசம்பர், 2025

தவெக? திமுக? டெல்லி காங். மீட்டிங்கில் பரபர வியூகம்! - TVK? DMK? Congress

 மின்னம்பலம் -Mathi  :  டெல்லியில இன்னைக்கு காங்கிரஸ் கட்சியோட முக்கியமான மீட்டிங் நடந்துச்சு.. கூட்டணி விவகாரங்களுக்கான ஐவர் குழுதான் இந்த மீட்டிங்கை நடத்துச்சு.. கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்தான் அந்த ஐவர் குழு..
ஏற்கனவே சென்னையில சிஎம் ஸ்டாலினை சந்திச்சு பேசி திமுகவுடனான கூட்டணியை உறுதி செஞ்சிருந்தது இந்த ஐவர் குழு.. அதே நேரத்துல காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்திச்சு பேச கூட்டணி பத்தி லேசா குழப்பம் ஏற்பட்டுருச்சு..
இப்படியான நிலையில்தான் ராகுல் காந்தி, கார்கே, ஐவர் குழு எல்லாம் சேர்ந்து தமிழக தலைவர்களுடன் ஆலோசிக்கிறதுன்னு முடிவெடுத்தாங்க..

H-1B விசாவில் மாபெரும் முறைகேடு.. இந்தியாவில் - முன்னாள் அமெரிக்க அதிகாரி பேட்டி பகீர்

 tamil.oneindia.com   : Vigneshkumar  ; வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா என்பது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா பல கடுமையான விதிகளை விதித்து வருகிறது. 
சிலர் அதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் ஹெச்-1பி விசா குறித்து முன்னாள் விசா அதிகாரி ஒருவர் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாக ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்குக் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறார்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஆர்.எஸ்.பாரதி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்!

 மின்னம்பலம் - கவி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காலஅவகாசம் நாளை (டிசம்பர் 14) உடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க திமுகவின் சட்டத்துறையும் தொண்டர்களும் தீவிரமாகப் பணியாற்றினர். கட்சி சார்பின்றி பணியாற்றினர்.