tamil.oneindia.com : Vigneshkumar ; வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா என்பது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா பல கடுமையான விதிகளை விதித்து வருகிறது.
சிலர் அதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் ஹெச்-1பி விசா குறித்து முன்னாள் விசா அதிகாரி ஒருவர் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாக ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்குக் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறார்.
Donald Trump visa America
மாபெரும் தவறு
இதற்கிடையே இந்தியாவில் விசா அதிகாரியாக முன்பு பணியாற்றிய சைமன் ஹாங்கின்சன் என்பவரும் H-1B விசா குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தார். H-1B விசா திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே பல குறைகள் இருப்பதை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் குறிப்பிட்ட துறைகளில் தகுதிவாய்ந்த பணியாளர்களை வேலைக்கு எடுக்க உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் மாபெரும் தவறு நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒப்பிட முடியாது
வல்லுநர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர எனச் சொன்னாலும் கூட இந்தியாவில் சாதாரணக் கல்லூரியில் படித்தவர்களுக்கே பெரும்பாலும் விசா நேர்காணலைச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ஹாங்கின்சன் மேலும் கூறுகையில், "இந்தியா அல்லது சீன மாணவர்களை அமெரிக்க மாணவர்களுடன் ஒப்பிடுவதே முதலில் தவறு. இந்தியா, சீனா நாடுகளில் இருக்கும் இளைஞர்கள் தங்கள் நாட்டில் மிகக் குறைந்த செலவில் கல்வி படிக்கிறார்கள். குறைந்த கடனுடன் அவர்கள் பட்டம் பெறுகின்றனர். ஆனால், அமெரிக்க மாணவர்கள் அதே படிப்பைப் படிக்க பல ஆயிரம் டாலர்கள் கடன் வாங்க வேண்டி இருக்கிறது.
எனவே, H-1B விசாவில் வருவோர் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வது போல.. அதே சம்பளத்தில் அமெரிக்க மாணவர்களால் வேலை செய்ய முடியாது" என்றார். அதாவது கல்வி கற்க அமெரிக்காவில் ஆகும் அதீத செலவே அவர்களுக்கு எதிராக மாறிவிடுவதாகத் தெரிவித்தார். மாணவர்களின் கடன் சுமை, வேலையையும் சேர்த்துப் பறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேலையிழப்புகள்
அவர் மேலும், "2025ல் அமேசான் 10,000க்கும் மேற்பட்ட H-1B விசா ஒப்புதல்களைப் பெற்றது. அதே ஆண்டில், 30,000க்கும் அதிகமானோரை வேலையை விட்டு நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்தது. அமெரிக்கர்களை வேலையில் தக்கவைக்க மறுபயிற்சி அல்லது மாற்றுப் பணிகளுக்கு நியமிக்க முயற்சிகள் நடந்ததா என்பது தெரியவில்லை. அமேசான் என இல்லை பல பெரிய அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தி, சொந்த நாட்டினரைப் பணிநீக்கம் செய்யும் முறையைப் பின்பற்றுகின்றன.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்க நிறுவனங்களுக்கு இவ்வளவு அதிகமான ஸ்பெஷாலிட்டி பணியாளர்கள் தேவையில்லை. உண்மையான ஸ்பெஷாலிட்டி பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு பேருந்தில் அடங்கும் அளவுக்கே இருக்கும். ஒரு மைதானத்தை நிரப்பும் அளவுக்குத் தேவைப்படாது. அப்படி வெளிநாட்டினரை தான் கண்டிப்பாக அழைத்து வருவேன் என சொல்லும்
இப்போது ஏஐ துறையில் திறமையான வெளிநாட்டினரை அழைத்து வர பல மில்லியன் டாலர்களை நிறுவனங்கள் செலவிடுகின்றன. அதேபோல எல்லா வெளிநாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டினருக்கு அதிக சம்பளம் தர வேண்டும். அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கும் அமெரிக்கர்களுக்கும் ஒரே சம்பளம் என்ற நிலை உருவானால் தான் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக