சனி, 14 ஜூன், 2025

விமானவிபத்து பற்றி மக்களே பேசுங்கள் மக்களே எழுதுங்கள் மக்களே கருத்துக்களை பரிமாறுங்கள்.

May be an image of 1 person and text that says '코티 WHO IS VISHWASH KUMAR RAMESH? Lone Survivor of Air India Plane Crash Scated in II I1'
May be an image of 2 people and text that says 'UNBREA UNBREAKABLE FAKABLE'

 ராதா மனோகர் : விமான விபத்து பற்றி சாதாரண மனிதர்கள் பேசினால் பலருக்கு எரிச்சல் வருகிறதாம் 
அதானே பொதுப்புத்தி எப்படி சிந்திக்க வேண்டும் எப்படி பேசவேண்டும் என்று நாம்தானே இதுவரை தீர்மானித்து கொண்டிருந்தோம்?
மக்களே புரிகிறதா?
இதுதான் பார்ப்பனீய சித்தாந்தம்! 
இதில் பிறவி பார்ப்பானை விட அரைகுறை பார்ப்பனர்களின் quasi brahmins  மேட்டிமை ஒரு படி மேல்.
அகமதாபாத் விமான விபத்து என்பது வெறும் இந்தியாவை மட்டும் உலுக்கிய விடயம் அல்ல.
இந்த நிமிடம் வரை உலகை உலுக்கி கொண்டிருக்கும் விடயம் இது.
மக்களை அரசியல் பொதுவெளியில் இருந்து அகற்றுவதில் , கைதேர்ந்தவர்களுக்கு  சாதாரண மக்கள் பேசினால் எழுதினால் எரிச்சல் வரத்தானே செய்யும்?

மக்களே பேசுங்கள்   மக்களே எழுதுங்கள்  மக்களே கருத்துக்களை பரிமாறுங்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களின் குற்றங்களை மறைப்பதற்குதான் மக்களின் குரலை அடக்க வேண்டும் 
மக்களின் குரலை மலினபடுத்தி எள்ளிநகையாடி ஒதுக்கி தள்ளுவது பார்பனீயத்தின் பரம்பரை தந்திரம்.
 

திரைப்படங்களை பற்றியும் நடிகர் நடிகைகள் பற்றியும் அளவு கணக்கில்லாமல் மக்கள் பேசுவதை எழுதுவதை  ஆகா ஓகோ பேஷ் பேஷ் என்று  முழுபார்பனர்களும் குவாசி பார்ப்பனர்களும் quasi bramins  ரசித்து மகிழ்வார்கள் 
 

ஆனால் விமான விபத்து போன்ற  முக்கியமான விடயங்கள் பொது மக்களின் பேசு பொருளாவதை ஒரு போதும்  விரும்புவதில்லை 
எப்போதும் அதிகாரத்தின்  நெருக்கத்தில் சுகமாக இருப்பவர்களுக்கு மக்கள் பேசுவது கசக்கத்தான் செய்யும்.
அவர்களின் களவுகள் லீக்காகி விடுமல்லவா? 
 

சில வருடங்களுக்கு முன்பு Unbreakable  அன்பிக்கப்பில் என்ற ஹாலிவூட் திரைப்படம் வெளியாகி பெரும் வசூலை குவித்தது 
இது நைட் ஷியாமளானின் படம் .. சுமார் 75 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்டு சுமார் 250 மில்லியன் டாலர் வசூலை அள்ளியது . 
 

இந்த விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பி இருக்கிறார்! 
அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஷ் குமார் ரமேஷ் Vishwash Kumar Ramesh எனக்கு அந்த  படத்தை ஞாபகப்படுத்துகிறார் 
Unbreakable  திரைப்படத்தின் கதாநாயகன் புரூஸ் வில்லிஸ்! Bruce Willies 
ஒரு தொடருந்து  விபத்தில் பயணித்த அத்தனை பயணிகளும் உயிரிழந்துவிட,
 அதில் பயணம் செய்த புரூஸ் வில்லிஸ் மட்டும் உயிர் தப்பி விடுகிறார் .
 அவர் அழிக்க முடியாதவர் . Unbreakable!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் என்ன ஜாதி என்று சொல்ல முடியுமா