வியாழன், 19 செப்டம்பர், 2024

சுகாதாரத்துறையில் என்ன நடக்கிறது? என் வேலை நீக்கம் நடந்து 2 மாதம் ஆகிறது

May be an image of 1 person, smiling and eyeglasses

Loganayaki Lona :   சுகாதாரத்துறையில் என் வேலை நீக்கம் நடந்து கிட்டத்தட்ட 2 மாதம் ஆகுது.
வேலையில் இருந்தது, வேலை செய்தது,ப்ரச்சனைகளில் குரல் கொடுத்தது ,
விதிமீறல்களை எதிர்த்தது  ,
முதல்வர் ,சுகாதாரத்துறை அமைச்சரை விமர்சித்ததாக,கிசுசெக்களை விமர்சித்ததாக இப்படி பணிக்கு சேர்ந்து 2 ஆண்டில் ஓராண்டாக அடுக்கடுக்காக இப்படியெல்லாம்.குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்.
 இறுதியில் பணி நீக்கம் எனும் பழிவாங்கும் நடவடிக்கையை அதிகாரிகள் படிப்படியாக doc தயாரித்து நிரந்தர மருத்துவர்களாக  ,நிரந்தர கிசு செக்கள் விருப்பத்தை  நிறைவேற்றி அதை பரிசு போல் அவர்கள் குழுக்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு முறை தனிப்பட்டு தாக்கப்பட்ட போதும் துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறேன்.இங்கும் எழுதியிருக்கிறேன்.
முதல்வர் பெட்டிசன் 2 முறை போட்டு ஒரு முறை தீர்வு கிடைத்தது.இன்னொரு முறை அது ஒரு மாதகாலமாக படிக்கப்படவே இல்லை.


கலெக்டருக்கும்  திங்கட்கிழமை மனுவில் சக பணியாளர்களே மொத்த குறைகள்,என்மீதான அத்துமீறல்களை மீடியாவிலும் தெரிவித்து மனுவும் கொடுத்தனர்.அதே கலெக்டர் அடுத்த மாதம் என் தரப்புக்கு வாய்ப்பே அளிக்காமல் after all ஒப்பந்தப்பணியாளர் ..டெர்மினேட்டட்னு கொடுத்துட்டாங்க.
அரசுபணியாளர் அரசை விமர்சிக்ககூடாது ,அரசுப்பணியாளர் விதிமீறலை எதிர்க்க கூடாது.அரசுப்பணியாளர் அத்துமீறல்களை எதிர்க்க கூடாது.ஒப்பந்தப்பணியாளரெனில் உங்களின் நிரந்தரப்பணியாளர்களுக்கு அடிமை என புரிதல் உள்ளது.உங்களுக்கும் கிட்டத்தட்ட அதே புரிதல் தான் இருந்தது.
ஒப்பந்தபணி மட்டுமே உலக முழுக்க உண்டெனில் அதில் சுயமரியாதையும் ஒப்பந்த விதிப்படி நடத்தலும் தான் இருபுறத்தின் கண்ணியம் என உரக்க உரக்க ஒவ்வொரு ஒப்பந்தப்பணியாளருக்காகவும் தான் எழுதுனேன்.பேசினேன்.
சும்மா எதுக்கு எழுதப்போகிறோம்?மேல இருக்கவங்க  செய்யலன்னா பாதிக்கப்படும் எவரும் பேச எழுத இங்க கருத்து சுதந்திரம் உண்டு.
செவிலியரா நான் நோயரை பார்க்க மாட்டேன் என்றேனா!மருந்து தரவில்லையா?நோயர் குணமாகவில்லையா?மருத்துவர்க்கு நோயரை அனுப்பலயா?ரிப்போர்ட் கொடுக்கலயா?ஊர் மக்களிடம் நல்லுறவு இல்லையா?என்ன என் பணியில் ப்ரச்சனை?
அனைத்து திட்டத்துக்கும் பயனாளிகள் வச்சிருந்தேன்.எல்லாத்துறைக்கும் reference கொடுத்திருந்தேன்.இதுக்கு மேல அந்த ஊர் மக்களுக்கு,மாணவர்களுக்கும் வழிகாட்டினோம்.படிக்க வழி செய்தேன்.
எனக்கும் கிசுசெக்கும் வாய்க்கா வரப்பு தகராறா?சங்கத்தின் பெயரால் புதிதாக பணிக்கு வந்தவர்களிடம் அரசு நலவாழ்வு மையத்தின் சாவி தர மறுத்தனர்.தொழில்முறைபண்பு படித்த செவிலியர் பணிக்கு எடுக்க கூடாதென போராட்டம் செய்தனர்..இன்னும் கூட சாவி தராத இடங்கள் உண்டு.
இவர்களிடமிருந்து புதிதாக பணிக்கு வந்த பணியாளர்களை யார் பாதுகாக்கனும்?உயர் அதிகாரிகள் தானே.அவர்களுக்கு புகார் அனுப்பினால் தான் தெரியும்.புகார் யார் அனுப்பனும்?அந்தந்த பகுதி மருத்துவர்கள் தெரியபடுத்துருக்கனும் இது எதுவும் நடக்கவில்லை.
மருத்துவரே அவர் வேலையை செய்ய மாட்டோம்னு ஸ்ட்ரைக்.அவருக்கும் சேர்த்து பொய் ரிப்போர்ட் போட சொல்லி request வைக்கலாம்.மிரட்டலாமா?அதைத்தான் செஞ்சாங்க.
ஒவ்வொரு அமைப்புக்கூட்டத்திலும் தங்கள் மீதான அத்துமீறலை கூறிய செவிலியர்களும் இன்று என்னுடன் போராட்டத்தில் முழு அமைப்பாக இல்லை.ஆனால் அவங்க புகார் அடிப்படையில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தான் எழுதுனேன்.பேசினேன்.
என் ஊர் மக்கள், நோயர்கள் இன்னும் என்னை தேடுகின்றனர்.நான் வரவில்லையெனில் அந்த செண்டருக்கு நான் போக மாட்டேன் என இன்று கூட ஒரு பெண் அழைத்து வருந்தினார்.இந்த திருப்தி வேறலெவல்ல நகர்த்திக்கொண்டு செல்லும்.
எல்லார்க்கும் எனக்கு தெரிஞ்சதெல்லாம் தெரியும்
போய் பார்த்துட்டு மருந்து வாங்குங்க என்றபோது அழுகிறார்.எனக்கு இப்படி ஆகியிருக்க கூடாதென அவர்கள் புலம்புகின்றனர்.அந்த மக்களிடம் செல்ல வக்கற்ற முற்போக்கு யூட்யூப் சேனல்கள் குறித்தும் நமக்கு பெரிய கவலையில்லை.
கிராமசபைக்கூட்டத்தில் சென்ற ஆண்டு பேசிய பேச்சை மக்கள் நினைவு கூர்ந்து அழைத்தனர்.ஒவ்வொரு நோயரும் மீண்டும் சேர்க்க முயற்சி கூட செய்து பார்த்தனர்.
எல்லாரிடமும் உங்கள் அதிகாரிகள் ஒரு பொய் சொல்லி முடித்து விட்டனர்.நாங்கள் பலமுறை எச்சரித்தும் பேசியதால் நீக்கினோம் என்று கூறினர்.
எனக்கு எந்த எச்சரிக்கையும் யாரும் தரவில்லை என்பது தான் உண்மை.எச்சரிக்கை உண்மையில் தந்திருக்க வேண்டியதும் விதிமீறலை நடத்திய அவர்களது கிசுசெ சங்கம் மீதும்,சக மருத்துவர்களிடமும் தானே தவிர மீட்புக்குரலெழுப்பும் எங்களிடம் அல்ல.
நான் என்னால் முடிந்த அளவு கத்தியும் பேசியும் ,நேர்ந்ததை எல்லாம் சொல்லியும் .எழுதியும் பல. துறை சார் சந்திப்புகளை ,தோழர்களை ,தொழிற்சங்கம்,அமைப்புகளை பேசி ஒவ்வொன்றின் செயல்பாட்டின் தீவிரங்கள் எதை நோக்கி என புரிந்து கடந்துவிட்டேன்.
துறை ரீதியான ப்ரச்சனை பலருக்கும் புரியவைக்கவே கஷ்டப்பட்டேன்.புரிந்து கொண்ட பெரும்பாலானோர்க்கு இது ஒரு தகவல்.கொஞ்ச பேர்க்கு வருத்தம்.கொஞ்ச பேர் ஆறுதல் சொன்னாங்க.கொஞ்ச பேர் விலகிப்போனாங்க.கொஞ்ச பேர் திட்னாங்க.இந்த வாழ்க்கை அனைத்தையும் கடந்து வேலையைத்தந்து கொண்டே தான் இருக்கும்.இயங்கிகிட்டே தான் இருப்போம்.
நான் பாதிக்கப்பட்ட நபரல்ல.போராடினேன்.அதிகாரத்திடம் தோற்றிருக்கிறேன்.அதிகாரிகளின் பழிவாங்கலால் என் பணி பாதிக்கப்பட்டது.அந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.அதிகாரிக்கு வேறிடம் சென்று விட்டார்.
இது இல்லாமல் அலுவல் ரீதியான எந்த தவறெனினும் கண்டித்திருக்கலாம்.நடவடிக்கை கூட அளவோடு எடுத்திருக்கலாம்.
இனி இது என் வாழ்வில் நடந்த ஒரு அனுபவம் அன்றி இதை பின் தொடர இனி என்னால் இயலாது...இந்த அழுத்தத்திலிருந்து முழுவதும் விடுபட மட்டுமே விருப்பம்.
இது குறித்து எவ்வள்வு எழுதினாலும் மாற்றம் வராது. அடிமைகள் தன்னை அடிமைன்னு உணர்ந்தால் மட்டும் தான்  மாற்றம் வரும்

கருத்துகள் இல்லை: