வியாழன், 19 செப்டம்பர், 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - ரணில் விக்கிரமசிங்கா வெற்றி வாகை சூடுகிறார்? 6,800,000 + வாக்குக்ககளை பெக்கூடிய ...

May be an image of 2 people and text

Rajh Selvapathi  :   கடந்த 2019ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குக்கள்
• கோத்தாபாய ராஜபக்ச 69,24,255
• சஜித் பிரேமதாச 55,64,239
• அநுரகுமார திஸநாயக்க 4,18,553
2020 நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுடைய கட்சிகள் பெற்ற வாக்குகள்
• பொதுஜன பெரமுன-SLPP 6,853,690
• ஐக்கிய மக்கள் சக்தி-SJB 2,771,980
• தேசிய மக்கள் சக்தி NPP/ JVP 445,958
கவனிக்கப்பட வேண்டிய விடயம்
1. கோத்தாவின் வாக்குகளில் 98% சிங்கள வாக்குகளே, முஸ்லிம்கள் முழுமையாக கோடாவுக்கு வாக்களிக்கவில்லை. இவரின் கிட்டதட்ட 1,200,000 வாக்குகள் தீவிர சிங்கள தேசிய வாக்குகள்.
2. சஜித்தின் வாக்குகளில் கிட்டதட்ட 1,600,000 வாக்குகள் தமிழ் முஸ்லிம் வாக்குகள்.
சஜித்துக்கு வாக்களித்த முஸ்லிகளில் 50% இந்த தடவை அனுரவுக்கு வாக்களித்தால்  அனுரவுக்கான நிரந்தர கட்சி வாக்குகளுடன் மேலதிகமாக 400,000 வாக்குகள் கூடலாம்.
கோட்டாவுக்கு வாகளித்த சிங்கள தேசிய வாக்குகள் இம்முறை ரணிலுக்கு கிடைக்க போவதில்லை.  அது நிச்சயமாக அநுர மற்றும் நாமலுக்கிடையில் பகிரபடலாம்.


அனுரவுக்கு 700,000 மற்றும் நாமலுக்கு 500,000 என பகிரப்படகூடும்.
சஜித்துக்கு வாக்களித்தவர்களில் 2,792,259 பேர் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அவருடைய கட்சிக்கு வாக்களிக்கவில்லை. இதில் 1,185,419வாக்களர்கள் சிறுபான்மையின கூட்டணி கட்சி வாக்குகள். இவர்கள் பாராளுமன்ற தேர்தலில் இயல்பாக தங்கள் கட்சிகளுக்கு வாகளித்திருப்பார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு வாக்களித்த 1,649,326 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லவில்லை. இவர்கள் அனைவரும் சுதந்திர கட்சி சந்திரிகா அணியினர் மற்றும் ஐதேகவின் ரணில் அணியினர். இந்த தடவை இவர்கள் மீளவும் வாக்களிப்பரார்கள். அனால் சஜித்துக்கோ அல்லது அநுரவுக்கோ வாக்களிக்க மாட்டார்கள். இவர்கள் தாராள ஜனநாயக வாதிகள் என்பதால் இயல்பாகவே ரணிலுக்கு வாகளிப்பார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளில் சஜித் இந்த தடவை கிட்டதட்ட 2,049,326 வாக்குகளை இழக்க கூடும். அத்துடன் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பழைய பச்சை இரத்தங்கள் மீளவும் ரணில் பக்கம் வாக்களிப்பின் போது சாய்ந்தால் சஜிதின் வாக்குகள் மேலுக் குறையவடையலாம்.
எனவே வெற்றி இலக்கான 6,500,000 வாக்குகளை சஜித் கடப்பதற்கான சந்தர்ப்பம் மிக  குறைவு.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் 55,64,239 பேர் வாக்களித்த சஜித்துக்கே வெற்றி வாய்ப்பு குறைவாக தென்படும் போது வெறுமனே 4,18,553 பெற்ற அநுர ஜனாதிபதியாக வேண்டும் என்றால் கிட்டதட 6,000,000 கோத்தாவின் வக்குகள் அவருக்கு கிடைக்க வேண்டும்.
இந்த 6,000,000 பேரும் கடந்த தேர்தலிலியே அநுரவை புறக்கணித்தே கோத்தாவுக்கு வாக்களித்திருந்தனர். இருந்தும் 700,000 சிங்கள தேசியவாதிகள் அநுரவுக்கு வாக்களிக்கலாம்.
போட்டியிடுகின்ற வேட்பாலர்களில் 6,800,000 + வாக்குக்ககளை பெக்கூடிய நிலையில் ரணில் ஒருவர்  மட்டுமே களத்தில் நிற்கின்றார்.
அநுர வாக்குகளை பிரிப்பதால் நீண்ட இடைவெளி விட்டு  சஜித் இரண்டாம் இடத்தில் நின்று கொண்டு இருக்கின்றார்.
சஜித்தில் இருந்து சற்று தொலைவில் மூன்றாம் இடத்தில் அநுர தனது வாக்கு வங்கிய  நான்கு மடங்கு பெருக்கிகொண்டு நிற்கின்றார். இது அடுத்த பாராளுமன்ற தேதலில் அவருடைய கட்சி 27-34 இடங்களை பெற உதவியாக இருக்கும்.
இதுவே கள யதார்த்தம்.
பொறுத்திருந்து பாருங்கள்.

கருத்துகள் இல்லை: