வெள்ளி, 26 ஜூலை, 2024

கறுப்பினப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் அமெரிக்க பொலிசார்!!:

 வீரகேசரி : அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வீட்டிற்குள் புகுந்து கருப்பின பெண் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி நள்ளிரவில், சோனியா மஸ்ஸி என்ற கருப்பின பெண், காவல்துறை உதவி எண்ணான 911-க்கு அழைத்துள்ளார்.
அப்போது, அங்கு 2 காவலர்கள் வந்து சோனியா மஸ்ஸிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென காவலர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுடுகிறார். தற்போது அந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 6 அதிகாலையில், ஸ்பிரிங்ஃபீல்ட் இல்லினாய்ஸ் வீட்டில் இருந்த, 36 வயதான கறுப்பினப் பெண்ணான சோனியா மாஸ்ஸியை,
பொலிசார் மரணதண்டனை நிறைவேற்றிக் கொல்வதைக் காட்டும் உடலில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் காட்சிகள் திங்களன்று வெளியிடப்பட்டன.



அமெரிக்காவில் பொலிஸ் பயங்கரவாதத்தினை முடிவுக்கு கொண்டுவருவதுக்கு மீண்டும் ஒரு முறை கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த மிருகத்தனமான கொலை பரவலான அதிர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது.

மாஸ்ஸி தனது வீட்டிற்கு வெளியே சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேக நபரைப்பற்றி புகாரளிக்க பொலிசாரை அழைத்திருந்தார்.

பொலிசார் அந்தப் பெண்ணுக்கு உதவவும், அந்தப் பகுதியைப் பாதுகாக்கவும் இருப்பார்கள் என்று அந்தப் பெண் நம்புகிறார்.

மாறாக, வீடியோ காட்சிகள் காண்பித்தபடி, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். ஒரு குறுகிய நேரத்துக்குள், சங்கமான் நகரத்தின் பிரதி பொலிஸ் அதிகாரி சீன் கிரேசன் அந்தப் பெண்ணை உறைய வைக்கும் இரத்தத்தில் படுகொலை செய்தார்.

அதிகாரிகளுடனான அவரது தொடர்புகள் முழுவதும் நிராயுதபாணியாகவும் அமைதியாகவும் மாஸ்ஸி அடுப்பிலிருந்து ஒரு பானை கொதிக்கும் நீரை பொலிசாரின் அறிவுறுத்தலின் பேரில் நகர்த்துவதைக் காட்டுகிறது.

தண்ணீர் அச்சுறுத்தலாக இருக்கின்றதென்று பொலிஸ் அதிகாரி கிரேசன் நகைச்சுவையாக கூறுகிறார் என்று நினைத்து “இயேசுவின் பெயரில் நான் உங்களை கண்டிப்பேன்” என்று மாஸ்ஸி நகைச்சுவையுடன் பதிலளித்தார். ஆனால், இதற்கு மாறாக, கிரேசன் ஆக்ரோஷமாக, மாஸ்ஸியை “உங்கள் f**kin’ முகத்தில்” சுடுவேன் என்று அறிவிக்கிறார்.

சில நொடிகளுக்குள், மாஸ்ஸி மன்னிப்புக் கேட்டபடி, தனது சமையலறை கவுண்டருக்குப் பின்னால் செல்கிறார்.

பிரதி பொலிஸ் அதிகாரி அந்தப் பெண்ணை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுடுகிறார். அதில் ஒரு குண்டு அவரது முகத்தில் பாய்ந்தது. சமையலறை தரையில் வீழ்ந்து இறந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு, பொலிஸ் அதிகாரி கிரேசன், தான் அவரது தலையில் சுட்டதால், அவருக்கு முதலுதவி செய்ய வேண்டாம் என்று தனது உதவியாளருக்கு அறிவுறுத்தினார்.

இன்னும் அடையாளம் தெரியாத அந்த துணை பொலிஸ் அதிகாரி, இறுதியில் மாஸ்ஸிக்கு உதவி வழங்கி ஒரு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது, அங்கு அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

மாஸ்ஸியின் முன்னாள் துணைவர் மற்றும் அவரது குழந்தைகளில் ஒருவரின் தந்தையிடம், பக்கத்து வீட்டுக்காரர் அவரைக் கொன்றதாக பொலிசார் ஆரம்பத்தில் அவரிடம் கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், மருத்துவமனையில் பொலிசார், மாஸ்ஸி தன்னைக் தானே சுட்டுக் கொன்றதாக செவிலியர்களிடம் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜூலை 17 அன்று, பொலிஸ் திணைக்களத்தால் பதிவியிலிருந்து நீக்கப்பட்ட கிரேசன் மீது, ஐந்து குற்றவியல் குற்றச்சாட்டுகளை ஒரு பெரிய நடுவர் நீதிமன்றம் முன் வைத்தது: இது மூன்று படிகளில் இடம்பெற்ற முதல்-தர கொலையாகும்.

அதில் துப்பாக்கியுடன் கூடிய மோசமான தாக்குதல், மற்றும் உத்தியோகபூர்வ தவறான நடத்தை ஆகியவை அதன் படி நிலைகளாகும். தற்போது ஒரு விசாரணைக்காக காத்திருக்கும் கிரேசன், சங்கமோன் நகர சிறையில் ஜாமீன் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: