வெள்ளி, 31 மே, 2024

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற முதல் ஜனாதிபதியாகிறார்!

 HIndu Tamil : முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரலாற்று ரீதியான குற்றவியல் விசாரணையில் தண்டனை பெற்ற முதல் அமெரிக்க  ஜனாதிபதி!  
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
போலியான வணிகப்பதிவுகள் தொடர்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிவ்யோர்க்கில் இடம்பெற்றன.
அவருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் முன்னாள் அல்லது தற்போதைய ஜனாதிபதி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

இந்தத் தீர்ப்பிற்கமைய முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிறைக்குச் செல்ல நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அவரது சட்டத்தரணிகள் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கு அதிக சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதியை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: