tamil.oneindia.com - Shyamsundar : சென்னை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு பற்றி அதிமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து பரபரப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நாளை பொன்முடி வழக்கில் என்ன தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் அறிவிப்பார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கு: இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் பொன்முடி மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்வதாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ள வில்லை எனவும் வாதிட்டார்.
திமுகவில் இருந்து ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல், அமைச்சர் பொன்முடி தான்.. எப்படி?திமுகவில் இருந்து ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல், அமைச்சர் பொன்முடி தான்.. எப்படி?
பொன்முடி வழக்கு: குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். இருதரப்பு வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
தீர்ப்பு என்ன?: இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை வரும் 21- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
யாருமே எதிர்பார்க்கல.. ஓபிஎஸ் வைத்த மெகா டுவிஸ்ட்! அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தொடக்கம் யாருமே எதிர்பார்க்கல.. ஓபிஎஸ் வைத்த மெகா டுவிஸ்ட்! அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தொடக்கம்
அதிமுக அமைதி: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு பற்றி அதிமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக இது சார்பாக அறிக்கையை வெளியிடவில்லை, பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடவில்லை.
ஆளும் திமுகவை பற்றி எடப்பாடி எதுவும் விமர்சனம் செய்யவில்லை. டாப் அமைச்சர் ஒருவருக்கு எதிராக தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அதிமுக இதை பற்றி எதுவும் சொல்லவில்லை. தொடர்ந்து பொன்முடி விவகாரத்தில் அதிமுக மௌனம் காத்து இருக்கிறது.
அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. அப்படி இருக்க.. அதிமுகவிற்கு இதே நிலை வரலாம். அதிமுக மாஜி அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் உள்ளன. பலருக்கு எதிராக டெண்டர் முறைகேடு வழக்குகள், சொத்து குவிப்பு ஏன் கொலை வழக்குகள் கூட உள்ளன. அப்படி இருக்க இது பற்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தரப்பு அமைதியாக இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக