தேசம் நெட் - அருண்மொழி : பேஸ்புக் எனப்படும் முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய சமூக ஊடக தளமான திரெட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக உருவாக்கப்ட்ட இந்த புதிய சமூக ஊடகத்தை மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியிருந்தார்.
எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டுவிட்டர் சமூக ஊடக தளத்திற்கு மாற்றாக மெட்டா முன்மொழிந்துள்ள த்ரெட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த செயலியும் டுவிட்டரை போல உரை அடிப்படையிலான உரையாடல் பயன்பாட்டுக்குரிய செயலியாகும்.
இதன் பயனர்கள் 500 எழுத்துகள் வரையிலான இடுகைகளை வெளியிட முடியும், அத்துடன் நிழற்படங்கள் மற்றும் காணொளிக்களை உள்ளடக்கலாம் டுவிட்டரைப் போலவே, சக பயனானிகளின் இடுகைகளுக்கும் பதிலளிக்கலாம்,
நேற்று இந்த தளம் ஆரம்பிக்கபட்டதையடுத்து மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் தனது சொந்த த்ரெட்ஸ் கணக்கைப் பயன்படுத்தி முதல் ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களைப் பதிவுசெய்துள்ளார்.
அத்துடன் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெட்டாவின் பிரபலமான நிழற்படங்களின் பகிர்வு தளமான இன்ஸ்ரகிராமுடனும் த்ரெட்ஸ் கணக்குகள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தளம் வெளியிடப்படுவதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டரின் கொலையாளி என வர்ணிக்கபடும் த்ரெட்ஸ் எலோன் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனத்துக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் மெட்டாவின் இந்தப் புதிய நடவடிக்கை சிலிக்கான் பள்ளத்தாக்கின் இரண்டு முக்கிய பில்லியனர்களுக்கு இடையேயான போட்டியை அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக