மாலை மலர் : வாஷிங்டன்: இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு அருகில் இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிகக் கப்பலின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய பெருங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூருக்கு வந்து கொண்டிருந்த எம்.வி செம் என்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதலில் கப்பலில் தீ பிடித்தது. கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இதில் கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்நிலையில், தாக்குதல் நடத்த பயன்பட்ட டிரோன் ஈரானில் இருந்து ஏவப்பட்டது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா விவகாரத்தில் ஈரான் அளித்த ஆதரவை தொடர்ந்தே ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடலில் வரும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர். ஹவுதி செயல்பாட்டில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் கூறினாலும் கள நிலவரம் இதுவாகவே இருக்கிறது. 20 இந்திய பணியாளர்களுடன் ரசாயன டேங்கரை தாக்கிய டிரோன் ஈரானில் இருந்து ஏவப்பட்டது என தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக