ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

விஜயலட்சுமியே மனசு வச்சாலும் முடியாது... சீமானுக்கு போலீஸ் கொடுத்த அதிர்ச்சி முடிவு!

tamil.samayam.com - பஹன்யா ராமமூர்த்தி ; விஜயலட்சுமியே மனசு வச்சாலும் முடியாது... சீமானுக்கு வந்த புது சிக்கல்... போலீஸ் அதிரடி முடிவு!
சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற போதும், வரும் 18ஆம் தேதி சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என வளசரவாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நேற்று வாபஸ் பெற்றார்.
சீமானிடம் தொலைபேசியில் பேசிய பிறகு, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர்களுடன் வந்த விஜயலட்சுமி, தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் சீமானை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி வழக்கை வாபஸ் பெற்றார்.


மேலும் இனிமேல் இந்த வழக்கை தொடரப் போவதில்லை என்றும் தான் பெங்களூருக்கே செல்ல உள்ளதாகவும் கண்ணீர்மல்க கூறினார் நடிகை விஜயலட்சுமி.
விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அளித்தனர்.

முதல் சம்மனுக்கு ஆஜராகாத சீமான், இரண்டாவது சம்மனுக்கு ஆஜராவதாக கூறினார். அப்போது விஜயலட்சுமியும் வீரலட்சுமியும் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் சீமான் நிபந்தனை விதித்தார். இந்நிலையில் விஜயலட்சுமி நேற்று வழக்கை வாபஸ் பெற்றதால் 18ஆம் தேதி சீமான் ஆஜராக மாட்டார் என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நாம் தமிழர் தமிழ்நாட்டில் கட்சியே நடத்த முடியாது - வீரலட்சுமி ஆவேசம்
ஆனால் சீமான் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால்
சட்டநிபுணர்களின் ஆலோசனை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வளசரவாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் வரும் 18 ஆம் தேதி சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் வளசரவாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சீமான் - விஜயலட்சுமி சமாதானம்: எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது... நேர்த்திக்கடன் செலுத்தும் வீரலட்சுமி!
ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக எழுதிக்கொடுத்த நிலையில் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயலட்சுமி தற்போதும் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பஹன்யா ராமமூர்த்தி கட்டுரையாளரை பற்றி

கருத்துகள் இல்லை: