ராதா மனோகர் : இன்று மகாகவி பாரதியாரின் நினைவு நாள்!
தமிழ் கவிதைகளை பற்றி பேசும்போது தவிர்க்கவே முடியாதபடி பல கவிஞர்களை பற்றி பேசியே தீரவேண்டி இருக்கிறது!
கவிஞர் கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிஞர் வாலி இன்னும் பல உன்னத கவிஞர்கள் தமிழுலகை வளப்படுத்தி உள்ளார்கள்!
உண்மையில் பாரதியாரை விட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனும் கவிஞர் வாலியும் பல நல்ல கவிதைகளை படைத்துள்ளார்க்ள
ஆனால் அவர்களை வெறும் சினிமா கவிஞர்கள் என்று மட்டுப்படுத்தி விட்டு,
மகா கவி பாரதியை விமர்சனங்களுக்கு அப்பால் பட்ட ஒரு தெய்வீக கவிஞர் என்ற ரீதியில் தொடமுடியாத உயரத்தில் வைத்துவிட்டது பார்ப்பனீயம்!
ஆமாம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஊடக வெளியில் எல்லையற்ற ஆதிக்கத்தை செலுத்திய பார்ப்பனர்களால் ள் திட்டமிட்டு கட்டி எழுப்பப்பட்ட ஒரு மகா பிம்பம்தான் பாரதி!
மீண்டும் சொல்கிறேன் பாரதி ஒரு நல்ல கவிஞர்தான் அதில் மாற்று கருத்தில்லை
ஆனால் ஒரு பாரதியை உயர்த்தவேண்டும் என்பதற்காக பாரதியை விட சிறந்த கவிஞர்களை எல்லாம் வெறும் சினிமா கவிஞர்கள் என்று மலினப்படுத்தியதை எப்படி ஏற்று கொள்ளமுடியும்?
உண்மையில் பாரதி இன்றிருந்தால் எனது இந்த கருத்தை ஏற்றுக்கொள்வார்.
ஏனெனில் பல பார்ப்பனர்களை விட கொஞ்சம் நேர்மையான சிந்தனை பாரதியிடம் இருந்தது.
பாரதியாரை பற்றி நான் முன்பு எழுதிய சில பதிவுகளையும் ஒரு ஊசாத்துணையாக கீழே தந்துள்ளேன்
1 மீள் பதிவு இலங்கை இடது சாரிகள் மற்றும் முற்போக்குவாதிகளுக்கு ஒரு கவிதையை உதாரணமாக காட்டும் தேவை ஏற்படும் போதெல்லாம் பாரதியின் கவிதை வரிகளை மட்டுமே எடுத்து முன்வைப்பார்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாரதியை குறிப்பிடுவது (உ ம் பாலச்சந்தர் மணிரத்தினம் கமல் வகையறாக்கள்) பார்ப்பனர்களின் வழக்கம்
அது அவர்களின் இரத்த பாசம் அதை தவறென்று கூறவும் இல்லை
ஆனால் இலங்கை இந்திய இடதுசாரிகளுக்கு பாரதியை தவிர வேறு எந்த புலவரும் ஞாபகத்தில் வருவதில்லையே ஏன்?
பாரதி தாசன் கண்ணதாசன் வாலி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் உடுமலை நாராயண கவி .மருதகாசி புலமை பித்தன் பிறைசூடன் கவிஞர் கா மு ஷெரிப் கவிஞர் காமராசன் கவிஞர் இன்குலாம் கவிஞர் அப்துல் ரஹ்மான் கவிஞர் சுரதா இன்னும் எவ்வளவோ மாபெரும் கவிஞர்கள் இருந்தாலும் ,
பாரதியாரை இடதுசாரிகள் குறிப்பிடுவது ஒரு தற்செயலான நிகழ்வல்ல.
பார்ப்பன ஊடகங்களில் இடம்பெற வேண்டும் என்றால் கொஞ்சம் பாரதி லேகியம் தேவை!.!
2 மீள்பதிவு : சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்று பாரதி பாடியது அவரின் தீர்க்க தரிசனம் என்று அவ்வப்போது ஒரு கதை அளக்கப்படுகிறது
உண்மையில் அது அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும் . தீர்க்க தரிசனம் அல்ல!
அதன் விபரங்களை கொஞ்சம் பாப்போம்
பாரதியார் காலமானது 1921 ஆண்டாகும்.
1912 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியான விஜயபானு என்ற தமிழ் பத்திரிகையில் இது பற்றிய ஒரு செய்தி இருக்கிறது அப்பத்திரிகையில் இந்திய இலங்கை செய்திகள் பல இருக்கிறது
அதில் ஒரு செயதியின் தலையங்கமே
இலங்கை இந்திய புகையிரத பாதை என்பதாகும்
அதன் முழு செய்தி இதுவாகும்
இலங்கை இந்திய புகையிரத பாதை
இப்பாதை வேலையை இலங்கை அரசாட்சியார் தீவிரமாய் முடித்து வருகின்றர்.
தலைமன்னாரிற்கும் மன்னாரிற்கும் இடையிற்றான் தாமதமிருக்கிறது.
அக்கடல் சிறியதாய் 900 அடிக்கு ஒரு ஸ்தம்பம் அமைத்து பாலமிடப்படுகிறது
தற்போது மன்னருக்கும் மதவாச்சிக்கும் இடையில் 15 மையில் தூரம் புகையிரத போக்குவரவு செய்யக்கூடியதாய் வேலை முடிந்திருக்கிறது
இதற்கான வண்டிகளுக்கு கொழும்பில் வேலை துரிதமாக நடக்கின்றன.
இந்திய அரசாட்சியார் அடுத்த வருஷத்திலும் வேலை செய்து பூர்த்தியாக்க மாட்டாரென்று கருதக்கிடக்கிறது.
தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கு இடையிலுள்ள கடலின் தூரம் 21 மைல்.
புகையிரத பாதை முற்றுப்பெற்றவுடன் பயணிகளை கொண்டு செல்வதற்காக இரண்டு புகைவள்ளங்கள் இங்கிலாந்தில் செய்யப்படுகின்றன
பாம்பன் கடலில் 40 அடி தூரத்திற்கு ஒரு ஸ்தம்பம் அமைக்கப்படுகிறது
அப்படி அமைக்கும் ஸ்தம்பங்கள் 136.
அப்பாலத்தின் மத்தியில் 200 அடி தூரத்திற்கு சங்கிலி பாலம் அமைக்கப்படும்.
இது மிக பிரயாசையான வேலையாதலால் இவைகளையமைத்துத்தீரா ஒரு வருடம் செல்லுமாம்.
ஆதலால் 1912 ஆம் ஆண்டு ஆவணி மாசமே இலங்கையும் இந்தியாவும் இணைக்கப்படுமென நம்பப்படுகிறது
இந்த செய்திதான் இலங்கை தீவும் இந்திய பெருநிலப்பரப்பும் இணைத்து வீதி சமைக்க வெள்ளைக்காரன் சிந்தித்து செயலாற்றிய திட்டத்தின் ஆதாரம் இதைத்தான் சிங்கள தீவினுக்கு ஓர் பாலமைப்போம் என்று பாரதி பாடினார் . இதில் ஒன்றும் தீர்க்க தரிசனம் கிடையாது .. இது அவர் காலமாவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்த செய்தி . ஆனாலும் இதை பாடிய பாரதியை பாராட்டுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக