Santhirapalan Saminathar : கோபர்சேவ் மரணித்துவிட்டார். அவரது சமுக பாத்திரம் பற்றிய மதிப்பீடுகள் மிக முக்கியமானது.
தம்மை கம்யூனிச வாதிகளாக சோசலிச வாதிகளாக கூறிக்கொள்ளும் பல அமைப்புக்களும் அவரை துரோகி என்றும் அமேரிக்க கைக்கூலி என்றும் கூறிவருகிறார்கள்.
இதில் ஸ்டாலினை தமது வழிகாட்டியாக கொள்வோரும், தம்மை ட்ரொஸ்கிய அமைப்பாக பிரகடனப்படுத்தும் சில அமைப்புக்களும் அடங்கும்.
உண்மையில் கோர்பச்சேவ் யார் அவரது அரசியல் என்ன? அவர் முற்போக்கு வாதியா? பிற்போக்கு வாதியா? என்ற பார்வை மிக முக்கியம்.
முதலில் ரஷ்சியாவில் இருந்த ஆட்சி அமைப்பு எத்தகையது. உண்மையில் அது சோவியத்துக்களின் ஒன்றியமா என்பதில் இருந்தே பதிலைத்தேட வேண்டும் .
1917 ஒக்ரோவர் புரட்சி சோவியத்துக்களின் ஒன்றிய ஆட்சியை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டே நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே சோவியத் ஒன்றியம் என பெயரும் சூட்டப்பட்டது.
ஆனால் அந்த இலக்கை அடையமுடிந்ததா என்றால் இல்லை.
பலர் சோவியத் ஒன்றியம் என்பதை அமேரிக்க ஒன்றியம் போன்றோ,இந்திய மாநிலங்களின் கூட்டாட்சி போன்றோதான் கற்பனை பண்ணுகிறார்கள்.
உண்மையில் ரஷ்யாவிலும் அவ்வாறான பிரதேச மானில அரசுகளின் ஒன்றியமாக இருந்ததே ஒழிய சோவியத்துக்களின் ஒன்றியமாக இருக்கவில்லை.
1905 களில் நிறுவப்பட்ட தொழிலாளர்களின் நிர்வாக அலகான சோவியத்துக்களுக்கு அதிகாரம் செல்லவில்லை.
அப்போது இருந்த உள்நாட்டு யுத்த சூழல் தற்காலிக ஏற்பாடாக கட்சியும் அரசும் அதிகாரங்களை தம்வசம் வைத்துக்கொண்டன.
ஆனால் அதுவே பின்னர் நிரந்தரம் ஆக்கப்பட்டது.
கட்சிக்குள் பாட்டாளிவர்க்க சிந்தனையாளர்கள் புறக்கணிக்கப்பட்டு குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்களின் கை ஒங்கி கம்யுனிசக்கட்சி குட்டிமுதலாளித்துவ கட்சி ஆனது.
இன்நிகழ்ச்சிப்போக்கு1922 களில் ஆரம்பமாகி 1930களில் முழுமுதலாளித்துவ கட்சியாக மாற்றம் பெற்றது. இக்கட்சி வழமையான முதலாளித்துவ ஐனநாயகத்தை விட்டுவைக்கவில்லை.
பேச்சு எழுத்து சுதந்திரம் மாற்று கருத்து கண்ணோட்டம் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு முழு பாசிச வடிவம் பெற்றது.
இதைமறைப்பதற்கு கம்யூனிசம், சோசலிசம் ,சோவியத் போன்ற சொற்கள் மூலம் மூடி மறைக்கப்பட்டது. பல இனமக்களும் அவர்கள் பெரும்பாலும் வாழ்ந்த பிரதேசங்களும் ஒடுக்குமுறையும் சுரண்டலுக்கும் உள்ளானது.
இவற்றை திசை திருப்ப இரண்டாம் உலக யுத்தம் வாய்ப்பாக அமைந்தது.
பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஸ்சியாவின் கைப்பொம்மை அரசுகள் மூலம் நவீன காலணி ஆகின.
இவற்றிற்கெதிரான போராட்டங்கள் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கப்பட்டன.
ஆனாலும் போராட்டங்கள் எழுச்சி உற்றன.
இச்சூழலில் தான் கோர்பச்சேவ் அதிகாரத்துக்கு வருகிறார்.
இனியும் இப்போராட்டங்களை அடக்கமுடியாது என்றசூழலில் கோர்பச்சேவிடம் இருந்த முதலாளித்துவ முற்போக்கு சிந்தனைகள் சோவியத் ஒன்றியத்தை கலைத்தார்.
ஆயுத முனையில் அடக்கமுனையாமல் சுயநிர்ணய அடிப்படையில் பிரிந்துசெல்ல அனுமதித்தமை அவரை முற்போக்குவாதியாக அடையாளப்படுத்துகிறது.
அதுவரை கம்யுனிச முகமூடியுடன் உலகை ஏமாற்றியதை கிழித்தெறிந்து ரஷ்யாவில் பல முதலாளித்துவ சீர்திருத்தங்களை அமுல்ப்படுத்தினார்.
ஆனாலும் அவரால் முழுமையாக வெற்றிகொள்ளமுடியவில்லை.
அவரை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தி பிற்போக்கு வாதிகள் அதிகாரத்துக்கு வந்தார்கள் .இதன் விளைவு உக்கிரேன் ஆக்கிரமிப்பில் மீளமுடியாத புதைகுழியில் ரஸ்சியாவை தள்ளியுள்ளது.
Murugesu Kanagalingam : நடைமுறையிலிருந்த அரசியல் அதிகார வடிவங்கள் அவை என்ன பெயரிலிருந்தாலும், மக்களின்,இன,மொழிக்குழுக்களின்,பிரதேசங்களை,நாடுகளை அவற்றின் சுதந்திர வேட்கைகளைப் பலாத்காரமாக அடக்கவோ,ஒடுக்கவோ முனைந்தால் அது பாசிசமேயாகும்.இந்தப் பாசிசமான து மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை-- அவர்கள் உழைப்பதன்மூலம் உண்ணவும், உடுக்கவும்,ஓய்வு கொள்ளவுமான பிறப்புரிமையை மறுக்கும்போது அத்தகைய கட்டமைப்புகள் பொலுபொலுவென்று தாமாகவே சரிந்துவிடுகின்றன.இதுதான் சோவியத்யூனியனில் நடந்தது.இதை அனுமானித்துவிட்ட கோர்பச்சேவ் ஆயுத முனையில் அதை அடக்க முனையாமல் தம்பாட்டில் நடைபெற அனுமதித்தார். அடக்கி வைக்கப்பட்ட நாடுகள் சுதந்திரமாக வெளியேறி,தாம் விரும்பிய ஆட்சிமுறைகளை ஸ்தாபித்துக்கொண்டன.அவை ஒரு சில தனிநபர்களின் கூட்ட மன்று.மில்லியன் கணக்கான மக்கட்கூட்டத்தின் தெரிவு.இந்த மக்கட்கூட்டத்தின் நாடுகளை பலப்பிரயோகம் செய்து,பாரிய உயிர்,உடமைச் சேதங்களை ஏற்படுத்தி சோவியத் ஒன்றியம் என்று கட்டி வைத்திருக்கவில்லை என்பதுவே கோர்பச்சேவை துரோகி என்பவர்களின் கருத்தாகும்.(இன்று அவர் மறைந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து பதிவை வெளியிட்டமைக்கு நன்றி).
Annesley Ratnasingham : எனது பதிவிலும் சில நண்பர்கள் மிக கடுமையாக Michail Gorbatschow அவர்களை விமர்சிப்பதையும் கடும் வார்த்தைகளை பாவிப்பதையும் பார்க்கிறேன் ....( எனது நெருங்கிய நண்பர்கள் தான் ) .......இவர்கள் யாரும் கியூபாவிலோ ,ரஸ்சியாவிலோ ,கிழக்கு ஜெர்மனியிலோ அரசியல் தஞ்சம் கேட்கவில்லை ......மேற்கத்தைய நாடுகளில் வாழ்ந்துகொண்டு - So called democracy என்ற கடும் முதலாளித்துவ நாடுகளில் அதனை சுகத்தையும் அனுபவித்துக்கொண்டு சுட்டு விரலால் Michail Gorbatschow வை காட்டுகிறார்கள் ....
.இதே விடயத்தை தான் Michail Gorbatschow ம் அவரது மனையையும் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள்...அதாவது fully western life வாழ்ந்தார் Gorbatschow அவர்ளின் மனைவி ...
நான் ஒரு மிக சிறிய மனிதன் - எனது மூளைக்கு பட்டது சோசலிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை ...
.எமது உணவு தட்டில் இருப்பதில் இருந்து நாம் பாவிக்கும் உள்ளாடைவரை அவதானிக்கவேண்டும்...
.
அப்படிப்பட்ட சோஷலிசவாதிகள் யாரும் இன்று இல்லை .....தம்மை பெரும் முற்போக்குவாதிகளாக சமூகத்தில் காட்டி கொள்ள தாம் பெரும் சோஷலிஸ்ட்டுகள் என்று பேசுவார்கள் .......சோஷலிஸ்ட்டுகளில் உள்ள பலவீனம் தமக்கு மட்டும் தான் எல்லாமே தெரியும் என்பதே.....( அது கடும் democracy பேசுவர்களிடமும் உண்டு )
.
Ronald Reagan பெர்லினுக்கு வந்த கூட்டத்துக்கு நானும் மிக இளவயதில் சென்ற நினைவுண்டு .....
அங்குதான் Gorbatschow அவர்களை இந்த பெர்லின் மதிலை உடைக்கமுடியுமா என்று Ronald Reagan சவால்விட்டார் ....
Gorbatschow உடைத்தார் .......நாம் ஒருவிடயத்தை பற்றி பல கட்டுரைகளை வாசிக்கவேண்டும் - பல மொழிகள் தெரிந்தால் மிக மிக நல்லது ....ஜேர்மன் மொழியில் வரும் அரசியல் கட்டுரைகளை அதாவது ( Investigative journalism )..நான் தமிழில் ....அதைவைத்து எதிர்கால சந்ததிக்கு பல தேடல்களை உருவாக்கலாம் ....சட்புட் என்று கருத்துக்களை சொல்ல கூடாது ......யாருக்கும் பிரியோசனப்படாது ...
தோழர் சந்திரபாலன் சாமிநாதரின் மிக்கேயில் கோர்பச்சேவ் பற்றிய பதிவும் அப்பதிவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலர் கருத்துக்களை முன்வைத்தார்கள் . அவற்றில் சில மேலே உள்ளவை
தோழர் கோர்பச்சேவ் பற்றிய எனது கருத்து பின்வருமாறு : தங்களின் பதிவு மிகவும் வரவேற்க படவேண்டியதாகும் நன்றி தோழர்
இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மட்டும்தான் கம்யூனிசம் பற்றிய அதீத கனவுகளை சுமப்போர் அதிக அளவில் இருக்கிறார்கள் அதிலும் இந்நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர்கள் பலர் இன்னும் தங்களை இடதுசாரிகள் என்றே கூறிக்கொள்கிறார்கள் இவர்கள் அத்தனை பேர்வழிகளுக்கு வாழ்வது எல்லாம் அசல் முதலாளித்துவ வலதுசாரி நாடுகளில்தான் இவர்களை போன்றவர்களுக்கு தமிழ் தேசியம் போன்றே கம்யூனிசமும் ஒரு வியாபார பொருள் மட்டுமே
மேற்கு வங்கத்தில் மூன்று நான்கு தசாப்தங்களாக கோலோச்சிய இடது சாரிகள் இப்போது பாஜகவில்
திரிபுராவில் இடதுசாரிகள் கூண்டோடு பாஜக ஜோதியில் ஐக்கியம்
கேரளாவில் கூட எக்கச்சக்கமான இடது சாரிகள் பாஜகவை நோக்கி படையெடுக்கிறார்கள் தமிழ்நாட்டு பாரம்பரிய இடதுசாரி குமரமங்கலங்கள் இப்போது எங்கே? பாஜகவில் ..
கோர்பச்சேவின் காலமும் அப்போது அவரின் அரசியல் வரவு என்பது உலகிற்கு .. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எத்தகைய ஒரு வரமாக இருந்தது என்பதை பற்றிய அறிவோ உணர்வோ கொஞ்சம் கூட இல்லாமல் கோர்பச்சேவை அர்சிக்கிறார்கள் புலிகள் கலைஞரை விமர்சிப்பதுவும் தமிழக இலங்கை கம்யூனிஸ்டுகள் கோர்பச்சேவை விமர்சிப்பதுவும் அடிபடையில் ஒரே விதமான உளவியல் நோய் என்பதில் எனக்கு துளி கூட சந்தேகம் இல்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக