செங்கோட்டையை
சுற்றி விவசாயிகள் திரண்டிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது.
போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கோட்டையை சுற்றிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில்
தலைநகர்டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு
உள்ளது.
ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு
கருதி கிரே லைன் மெட்ரோ ரெயில் நிலையம், ஜமா மஸ்ஜித் மெட்ரோ ரெயில்
நிலையம் உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ ரெயில் நிலைய வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக