
/tamil.oneindia.com - shyamsundar.: டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும்
சிக்கி இருக்கும் நேஷனல் ஹெரால்ட் வழக்கு குறித்து பாஜக மூத்த தலைவர்
சுப்பிரமணியன் சாமி டிவிட் செய்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர்.
இதில் அவர்களுக்கு முறைகேடாக சொத்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்குதான் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் ஏற்கனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பு தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அந்த எழுத்து பூர்வமான வாக்குமூலம் மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக