ஞாயிறு, 1 டிசம்பர், 2019

ஹைதரபாத் மருத்துவர் கொலை.. காட்டிக்கொடுத்த மெக்கானிக்.. உதவிய சிசிடிவி..குற்றவாளிகளை பிடித்த போலீஸ்

Velmurugan P - /tamil.oneindia.com/: ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியை பஞ்சர் ஒட்டும் பைக் மெக்கானிக் காட்டிய அடையாளத்தால் தான், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகள் நான்கு பேரையும் குற்றம் நடந்த 48 மணி நேரத்தில் பிடித்திருக்கிறார்கள்.
கடந்த புதன்கிழமை ஹைதரபாத்தைச் சேர்ந்த 27வயதான பெண் கால்நடை மருத்துவர் ஷம்ஷாபாத் டோல்கேட் அருகே வந்த போது அவரது இருசக்கர வாகனம் பஞ்சரானது. அப்போது அவர் தனியாக இருப்பதை அறிந்த லாரி ஓட்டுர்கள் 4 பேர் அவரை ஏமாற்றி தூக்கிச் சென்று, மறைவான இடத்தில் வைத்து வாயில் மது ஊற்றியுள்ளார்கள். பின்னர் நான்கு பேரும் பலவந்தமாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். 
பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளயும் ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா போலீசார், கொல்லப்பட்ட மருத்துவரின் தங்கை, தனது அக்கா காணாமல் போனதாக அளித்த புகாரை அலட்சியம் செய்த காரணத்தால் தான் இறந்துவிட்டதாக புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மிகுந்த அலைச்சலுக்கு பிறகே போலீசார் வழக்கு பதிவு செய்ததாக கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தங்கை கூறியதால் கொதித்து போன ஹைதராபாத் மக்கள் கொந்தளித்து போயினர். இதனிடையே இந்த தேசமே கொலை குறித்து பரபரப்பாக பேசத்தொடங்கியது. குற்றவாளிகள் கைது குற்றவாளிகள் கைது இந்நிலையில் தான் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக முகமது ஆரிப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் மற்றும் சென்னகேசவலு ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். புகாரை பதிவு செய்ய தாமதித்தாக குற்றச்சாட்டில் சிக்கிய தெலுங்கானா போலீஸ் 48 மணி நேரத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரை எப்படி போலீசார் நெருங்கினார், அவர்களை பிடிக்க உதவியவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தங்கை தனது அக்காவின் வாகனம் டோல்கேட் அருகே பஞ்சர் ஆனதாக சொன்னதால் அந்த பகுதியில் உள்ள பஞ்சர் பார்க்கம் மெக்கானிக்கிடம் இருந்து விசாரணையை ஆரம்பித்தனர். அவர் தன்னிடம். ஒருவர் சிவப்பு நிற ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு தவறான சாலைவழியாக(எதிர்திசை வழியாக) வந்து வாகனத்தில் காற்றை நிரப்பிக்கொண்டு சென்றதாக கூறினார்.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்து தொழிற்சாலையில் சிசிடிவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் ஒருவர் வாகனத்தை ஓட்டிச்செல்லும் புகைப்படம் இருந்தது. அதேநேரம் அந்த பகுதியில் நின்று இருந்த லாரியின் பதிவெண்ணை போலீசாரால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில் அந்த பகுதி இருட்டாக இருந்தது.

இதையடுத்து அதற்கும் சில மணி நேரங்களுக்கு முன்பான டோல்கேட்டுகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போத வாகனத்தின் பதிவெண்ணை கண்டுபிடித்தனர்.அதை வைத்து லாரியின் உரிமையாளர் ஸ்ரீநிவாச ரெட்டியை அடையாளம் கண்டுபிடித்தனர். அவரை விசாரித்ததில் அவர் சிசிடிவில் உள்ளவர்கள் யார் என்று தெரியவிலலை என்றும் தனது லாரி, தனது நிறுவன ஓட்டுநரான முகமது ஆரிப்பிடம் இருப்பாக கூறினார். அவரை பற்றிய தகவலை அளித்தார்.

இதற்கிடையே இன்னொரு போலீஸ் டீம் பைக் மெக்கானிக் சொன்ன குற்றவாளி கொத்தலூர் அருகே பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் வாங்கி செல்லும் சிசிடிவி காட்சியை பார்த்தனர். இருவரும் ஒரே நபர் என்பதை அப்போது கண்டுபிடித்தனர்.

4 பேரும் சிக்கினர் அதன்பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் லாரி ஓனர் கொடுத்த செல்போன் எண்ணை வைதது லாரி டிரைவர் முகமது ஆரிப்பை முதலில் பிடித்தனர். அதன்பிறகு அவர் கொடுத்த தகவலை வைத்து ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் மற்றும் சென்னகேசவலு ஆகிய மற்ற மூன்று பேரையும் கைது செய்தனர். கொடூர சம்பவம் கொடூர சம்பவம் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் புதன்கிழமை மாலை 5.30மணி முதல் இரவு 9.30மணி வரை மது அருந்தி இருக்கிறார்கள். மது போதையில் இருந்த 4 கொடூரன்களும், தனியாக இருந்த பெண் கால்நடை மருத்துவரை மதுவை வாயில் ஊற்றி கொடூரமாக சிதைத்து கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது

Read more at: https:/news/hyderabad/hyderabad-vet-rape-murder-how-police-cached-the-four-accused-in-48-hours/articlecontent-pf418740-370132.html

கருத்துகள் இல்லை: