வெள்ளி, 6 டிசம்பர், 2019

நடிகை பிரதியுக்ஷா தற்கொலை செய்யவில்லை .. காதலனும் நண்பர்களும் கூட்டு வன்புணர்வு கொலை .. தாய் பேட்டி! வீடியோ


Don VS : நடிகை பிரதியுஷாவை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தவசியில் விஜயகாந்த்துக்கு ஜோடி, பாரதிராஜாவின் கடல் பூக்கள் நாயகி ிருந்த இளம் நடிகை அவர்.
என்று தமிழ் சினிமாவில் வளர்ந்துகொண்த
ஒரு நாள் ஹைதராபாத் நகரில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. விசாரணையில் பிரதியூஸா அவரது ஆண் நண்பர் சித்தார்த் ரெட்டி மற்றும் சித்தார்த் ரெட்டியின் நண்பர்களால் கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாக தெரியவந்தது.
சித்தார்த் ரெட்டி மற்றும் அவனது நண்பர்கள் ஆதிக்க ஜாதி மற்றும் பணக்கார வகுப்பை சேர்ந்தவர்கள். ஹைதராபாத் போலீஸ் தற்கொலை என்று கேஸை மூடியது.
தற்போது, பிரியங்கா ரெட்டி என்கிற பெண் மருத்துவரை வன்புணர்ச்சி செய்து கொன்றவர்களை என்கவுண்டர் செய்திருக்கிறது சைபரபாத் போலீஸ்.கொல்லப்பட்ட 4 பேரில், சித்தார்த் ரெட்டி போன்று யாரும் இல்லை போலும் ; எனவே, கொன்றுவிட்டார்கள்.

"ரெட்டி" பொண்ண தொட என்ன தயிரியம் என்ற ஜாதி ஆதிக்கத்திலும், மக்களின் ஆத்திரத்தை தணிக்க நடந்த எங்கவுண்டர் இது ; மற்றப்படி, கொல்லப்பட்ட பிரியாவுங்காவுக்கு நீதி கிடைத்தது என்று நம்புவீர்களானால், உங்களை போல அப்பாவி யாரும் கிடையாது.
ஏனெனில், இங்கு அனைத்தையும் தீர்மானிப்பது ஜாதி.

கருத்துகள் இல்லை: