வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுலை சுப்பிரமணியன் சாமி சிக்க வைத்துள்ளாரா ?

என்ன டிவிட் என்ன வழக்கு /tamil.oneindia.com - shyamsundar.: டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் சிக்கி இருக்கும் நேஷனல் ஹெரால்ட் வழக்கு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி டிவிட் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர்.
இதில் அவர்களுக்கு முறைகேடாக சொத்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்குதான் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் ஏற்கனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பு தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அந்த எழுத்து பூர்வமான வாக்குமூலம் மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.


என்ன டிவிட்

இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனு மிக முக்கியமானது ஆகும். இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது சுப்பிரமணியன் சாமி டிவிட் செய்துள்ளார்.அதில், நேஷனல் ஹெரால்ட் வழக்கு இன்று நடக்கிறது, நாளையும் நடக்க உள்ளது. இந்த வழக்கு நான் தாக்கல் செய்த ஆவணங்களால் நடக்கிறது. அந்த ஆவணங்கள் குறைவாகவே இருக்கிறது.


நேரம் இல்லை

நான் அந்த ஆவணங்களை எல்லாம் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும், அதற்கு நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இந்த வழக்கில் நான் வெற்றிபெறுவது உறுதிதான் என்று சுப்பிரமணியன் சாமி குறிப்பிட்டுள்ளார்.


என்ன சிக்கல்

இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்காக இத்தனை நாட்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகி வந்தார். ஆனால் அவர் தற்போது ஐஎன்எக்ஸ் வழக்கில் சிறையில் இருக்கிறார். இதனால் சோனியா, ராகுல் சார்பாக வேறு யாராவது ஆஜராக வாய்ப்புள்ளது என்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக