செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மதுரை பிளேடால் உடலை அறுத்து சிறைக்கைதிகள் போராட்டம்- போலீசார் மோதல்


madurai
madurai nakkheeran.in - annal : சிறையில் போலிசார் துன்புறுத்துவதாகவும், சிறைத்துறையில் ஊழல் நடைபெறுவதாவும்  கூறி சிறைவாசிகள் கற்களை எறிந்தும், பிளேடால் உடலை அறுத்தும் சிறைவளாக சுவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது"
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சோதனை என்ற பெயரில் போலிசார் தினசரி துன்புறுத்துவதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காமல் சிறைத்துறையினர் ஊழலில் ஈடுபடுவதாகவும், பணம்பெற்றுகொண்டு குறிப்பிட்ட சிறைவாசிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறி 50க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் சிறைவளாகத்தில் உள்ள கட்டிடங்களில் மேல் அமர்ந்து கற்களை வீசி அரை நிர்வாணத்தோடு மதியம் 3மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
< அப்போது சிறைத்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு உடல் முழுவதிலும் பிளேடால் அறுத்து காயம் ஏற்படுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். சிறைவாசிகளின் திடீர் போராட்டத்தின் காரணமாக புதுஜெயில் ரோடு முழுவதிலும் கற்கள் குவியல்குவியலாக காணப்பட்டன. இதனையடுத்து சாலை முழுவிதிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  

madurai

சிறைவாசிகள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறை சட்ட ஒழுங்கு இணைஆணையர் சசிமோகன் தலைமையில் 100க்கும் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேற்கு வட்டாச்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது .அதனை தொடர்ந்து கைதிகள் கீழே இறங்கியதை அடுத்து 5.45 மணி அளவில் போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை: