வெள்ளி, 26 ஏப்ரல், 2019

இந்தி மாநிலங்கள் தமிழ்நாட்டை எட்டி பிடிக்க .. புள்ளி விபரங்கள் கூறுவது என்ன?


Dev JB : கொஞ்சம் புள்ளிவிபரம் பேசலாமா?
இந்தி பேசும் மாநிலங்கள் தமிழ் நாட்டை எட்டிபிடிக்க இன்னும் ஒரு 100 வருஷம் ஆகும் என்று ஏன் சொல்கிறோம். கல்வி மற்றும் மருத்துவ வசதியை மட்டும் google பண்ணினால் கிடைக்கும்.
அந்த மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடியினர் படிப்பு சதவிகிதம் எவ்வளவு? 22% மக்களை படிப்பறிவு இல்லாதவராகவே வைத்திருந்தால் அந்த பகுதிகள் எப்படி முன்னேறும். அடுத்து பெண்களின் படிப்பறிவு எவ்வளவு. Infant mortality ratio என்ன.
1920 களில் ஆரம்பித்த சுய மரியாதை இயக்கங்களால் கட்டமைக்க பட்டு பெரியார் என்ற உலகின் மிக பெரிய போராளியால் முன்னெடுக்கப்பட்ட சமூக நீதியும் அதற்கு சட்ட வடிவம் கொடுத்த திமுக ஆட்சிகளும் ... இது இந்தி பேசும் மாநிலங்களில் நடக்க எவ்வளவு காலம் ஆகும்.

ஆழி அவர்கள் பணத்தோட்டத்தை வீம்புக்காக ப்ரோமோட் செய்ய வில்லை. அண்ணாவால் உருவான திட்டங்கள், கலைஞரால் செயலாற்றப்பட்ட திட்டங்கள் - இன்று இந்திய ஒன்றியத்திலேயே கல்வி, மருத்துவ கட்டமைப்பு மற்றும் செயல்படுத்துவதில் முதலிடம். தமிழ் நாடு முழுதும் இருக்கும் பரவலான தொழில் வளர்ச்சியை இந்தியாவின் வேறு மாநிலங்களில் பார்க்க முடியாது.
உழைப்பதற்கு, படிப்பதற்கு மக்கள் தயார். அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. மக்களை தயார் படுத்தியது கொள்கை அரசியல். அதை செயல் படுத்தியது எங்கள் ஒட்டரசியல். பெரியார், அண்ணா, கலைஞர் ஆற்றிய அளப்பரிய தொண்டை நீங்கள் கடவுள் என்று கட்டமைத்த பொய் உண்மையாக இருந்தால் கூட நடத்தி இருக்காது.
 
புள்ளிவிபரங்கள் தான் மிக பெரிய, ஆணி அடித்தமாதிரியான உண்மை கதைகளை சொல்லும். இதோ இன்னொன்று...
இந்தியாவின் 73% சொத்து 1% பணக்காரர்களிடம் தான் இருக்கிறது. 2014 ல், அதே 1% எலைட் வைத்திருந்தது 22% தான்.
இன்று 67 கோடி ஏழை மக்கள் எல்லோரும் சேர்ந்து இந்தியாவின் 1% சொத்து தான் வைத்திருக்கிறார்கள்.
கார்பொரேட் கைக்கூலி, கால்நக்கி மோடி சர்க்கார் இன்னமும் ஏழைகளின் உழைப்பு மற்றும் சொத்துகளை பிடுங்கி அந்த 1% உச்சாணியிடரிடம் சேர்க்கும் வேலையில் தான் உள்ளது.
இதில் ஊழல் நடக்கவில்லை. இவன்கள் காசு வாங்கவில்லை என்று சொன்னால் எங்கள் தெரு காப்பாளர் (நாய்) கூட நம்ப மாட்டார்.

கருத்துகள் இல்லை: