மின்னபம்பலம் :
நடிகர்
விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலைத்து அதை
நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே எதிர் அணியினர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர், ஏற்கெனவே சங்கத்திற்கென்று அலுவலகம் இருக்கும் போது தி.நகரில் புதிய அலுவலகத்தை தொடங்கியதும் பிரச்சினையானது. டிசம்பர் மாதம் விஷால் அதிருப்தி உறுப்பினர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். வைப்புநிதியாக இருந்த 7 கோடி ரூபாயை முறைகேடு செய்துவிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
போராட்டத்தைத் தொடர்ந்து பாரதி ராஜா, எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். நான்கு மாதங்களில் சங்கத்தில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை விஷால் எதிர் தரப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.
மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலும் நடத்தப்படாமல் இழுத்தடிப்பதும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவருகிறது. இந்நிலையில் சங்கங்களின் பதிவாளர் அலுவலக சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது, விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக