நயன்தாரா
நடிப்பில் தாஸ் ராமதாமி இயக்கியுள்ள 'டோரா' திரைப்படத்தின் டீசர் கடந்த
17ஆம் தேதி வெளியான நிலையில் பத்தே நாட்களில் இந்த டீசர் 2 மில்லியனுக்கும்
அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த டீசருக்கு 20
ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனர்.கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு இவ்வளவு வரவேற்பா என கோலிவுட் வட்டாரமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இவர்களுடைய இசையில் அனிருத் 'ரா ரா ரா' என்ற பாடலை பாடியுள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக