செவ்வாய், 20 டிசம்பர், 2016

திமுக தொண்டர்களின் வைகோ வெடியை பட்டாசு கொழுத்தி கொண்டாடிய கப்டன் தொண்டர்கள்: மவனே நேரம் வரட்டும்..


வைகோவின் உறுதியான நிலைப்பாடுகள்..கட்சிகள் மாறி மாறி கொள்கைப் பல்டிகள், உணர்ச்சிவசப்பட்டு என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே  வார்த்தைகளை கொட்டி விடுதல் போன்ற காரணங்களால் மிகப் பெரிய கெட்ட பெயரை பெற்று வருகிறார். அவரது அலெக்சாண்டர் ஜெங்கிஸ்கான் புறநானூறு நெடுஞ்சேரலாதன் மற்றும் பிரபாகரன் வன்னி பெரு நிலப்பரப்பு ஈழம் போன்றவை தற்போது அவுட் ஆப் பாசனாகியத்தில் ரொம்பவும் அப்செட்டில் இருக்கிறார் .குறிப்பாக ஜெ. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் திமுகவை சம்பந்தமே இல்லாமல் வம்புக்கு இழுத்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்தார்கள் திமுக தொண்டர்கள். இந்த நேரத்தில் கலைஞர் உடல் நலமின்றி மருத்துவமனையில், இரண்டாம் முறையாக அனுமதிக்கப்பட்டபோது எல்லாவற்றையும் மறந்து விட்டு அவரைபார்க்க சென்றார். ஆத்திரப்பட்ட தொண்டர்கள் கல்லடி கொடுத்து விரட்டினார்கள். இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கினாலும், நாடு முழுவது தாக்கிய தொண்டர்களை திமுகவினர் கொண்டாடினார்கள். கூடவே கேப்டன் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். விருத்தாச்சலம் தேமுதிக நிர்வாகி ஒருவர் ” தாக்குதலை வரவேற்க்கிறோம் எங்கள் கேப்டனை நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர் வைகோ. மக்கள் நலக் கூட்டணியல் தோற்றதும் அப்படியே கேப்டன் மீது பழியைப் போட்டார். குடிகாரன் என்றார் வைகோ. கடுமையான கோபத்தில் இருந்தோம் திமுக தொண்டர்கள் மிகச்சரியான பாடம் கற்ப்பித்திருகிறார்கள். நாங்கள் அதை விட பெரிய படம் சொல்ல அனைத்து ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறோம் மவனே நேரம் வரட்டும்..” என்கிறார். வைகோவிற்கு என்ன ஆச்சு..?

கருத்துகள் இல்லை: