செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஆதி திராவிட மக்களே ! ஆதி திராவிட தலைவர்களே ! சரித்திரம் கொஞ்சம் பாருங்கள்.. கலைஞர் உங்கள் ..

ஆதிதிராவிட மக்களின் தலைவர்களே ஆதிதிராவிட மக்களே
முதன் முதலில் ஒரு தாழ்த்தபட்டடவரை உயர் நீதி மன்ற நீதிபதியாக அமர்த்தி பெருமை சேர்த்தது யார்?
சேரியில் வாழும் தாழ்த்தப்படுத்தப ட்ட மக்களுக்கு இந்தியாவிலே முத ன முறையாக "கான்கிரிட் வீடுகள் "வழங்கியவர் யார்?
குடிசைகளில் வாழ்ந்த ஆதிதிராவிடர்களை அடுக்குமாடியில் அமரவைத்தது யார்?
ஆதிதிராவிடர் நலத்துறை என தனி அமைச்சகம் உருவாக்கியவர் யார்?
ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர்களை மாநில அமைச்சர்களாவும், மத்திய கேபினட்டில் மத்திய அமைச்சராக அமர்த்தியவர் யார்?
பேச்சிலும், எழுத்திலும் மட்டும் நிறுத்திடாமல் தாழ்த்தபடுத்தபட்டவர்களை தன் குடும்பத்திலும் ஏற்றுகொண்டவர் யார்?
அம்பேத்கர் பெயரிலே சட்டபல்கலைகழகம் உருவாக்கியவர் யார்?
தாத்தா ரெட்டை மலையாருக்கு தபால் தலை வெளியிட்டு பெருமைபடுத்தியவர் யார்?
ஆதிதிராவிடர்கள் விமான ஓட்டிகளாக ஆவதற்கு இலவச பயிற்சி மையத்தை உருவாக்கியவர் யார்?


கலப்பு மணத்தை ஊக்குவித்து அதிலே ஒருவர் தாழ்த்தபடுத்தபட்ட்டோர் என்றால் அக்குடும்ப தலைவனுக்கு அரசு வேலை வழங்கபடும் என அறிவித்தவர் யார்?
மதமாற்ற தடைசட்டத்தை ரத்து செய்தவர் யார்?
திமுக ஆட்சி நடைபெறும் போது தாழ்த்தபடுத்தபட்ட ஐஏஸ், ஐபிஸ் முடித்த அதிகாரிகளை உயர் துறைகளில் அதிகமாக அமர்த்திட முனைப்பு காட்டியவர் யார்?
பாப்பாரபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் இந்த இடங்களில் தாழ்த்தபடுத்தபட்டோர்களின் உரிமைகள் நசுக்கபட்டபோது அங்கே ஜனநாயகத்தை மலரச்செய்தவர் யார்? (அதற்கு தானே சமத்துவ பெரியார் பட்டம் சூட்டினீர்கள்)
வரலாறிலே இல்லாத வகையில் கூட்டணியில் தலித் இயக்கத்திற்கு இரண்டு நாடாளுமன்ற இடங்களில் சொந்த சின்னத்தில் போட்டியிடும பங்கீடு வழங்கிய பெருந்தன்மையானவர் யார்? (சொ ல்லி, சொல்லி பெருமை பட்டீர்களே)
இத்தனை கேள்விகளுக்கும் பதில் தாழ்த்தபடுத்தபட்டசமுதாயத்தின் ஒரே காவலர் "கலைஞரே "அவர் வழி நடத்தும் திமுக தான் என்பது உலகறியும்! இந்த வரலாறு அதிமுகவுக்கு உண்டா?முகநூல் பதிவு  சென்னை தாமோதரன்

கருத்துகள் இல்லை: