![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXo8lyi8i2i6m5Z42KKclRxbhj0TRgR63s2gd2gNPbjtIIvTabha37SY5AItHy1x64RdWg6WtQM-b-KMmKd6vpxBdx72xEltOQJDyMkyRZMtIyRqwPCAAqij666Sqps-_v6KqpGm7-vV4/s400/04-1462376316-srirangam.jpg)
சென்னை: நியூஸ் 7 தமிழ் மற்றும் தினமலர் இணைந்து நடத்திய மண்டல
வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று
வெளியான கிழக்கு மண்டலத்திலும் திமுக வெல்லும் வாய்ப்பு உள்ளதாக நியூஸ் 7 -
தினமலர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 தமிழ் மற்றும் தினமலர் இணைந்து
கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக
வெளியிட்டு வருகிறது.
News 7- Dinamalar opinion poll result for 41 constituency
நேற்று முன்தினம் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 57
தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இதையடுத்து தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 57
தொகுதிகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்நிலையில் கிழக்கு மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள
9 தொகுதிகளில் திமுக 6 தொகுதியிலும், அதிமுக 3 தொகுதியில் மட்டும்
வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றது நியூஸ் 7 - தினமலர்
கருத்துக்கணிப்பு. Read more at: ://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக