புதன், 4 மே, 2016

கிழக்கு மண்டலத்திலும் திமுக கூட்டணி அலை DMK 30 - ADMK 9..PMK 2.. நியூஸ் 7 கருத்துக் கணிப்பு

சென்னை: நியூஸ் 7 தமிழ் மற்றும் தினமலர் இணைந்து நடத்திய மண்டல வாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று வெளியான கிழக்கு மண்டலத்திலும் திமுக வெல்லும் வாய்ப்பு உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 தமிழ் மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது. News 7- Dinamalar opinion poll result for 41 constituency நேற்று முன்தினம் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இதையடுத்து தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் கிழக்கு மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் திமுக 6 தொகுதியிலும், அதிமுக 3 தொகுதியில் மட்டும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றது நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு. Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக